Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களை ஏற்படுத்த சாதாரண மெழுகுவர்த்தியே போதும் தெரியுமா?
பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மெழுகுவர்த்திகளின் அளவும், வடிவமும் மாறியிருக்கிறதே தவிர அதன் மீது இருக்கும் நம்பிக்கை மட்டும் குறையவே இல்லை.
நாகரிகம் உருவான காலம் முதலே மனிதர்களிடையே இருக்கும் பழக்கம் மெழுகுவர்த்திகளை உபயோகிப்பது. இதனை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் எகிப்தியர்களே. பண்டைய கால மக்கள் மெழுகுவர்த்திகளை இருளை போக்க மட்டும் பயன்படுத்தவில்லை, மாறாக மெழுகுவர்த்திகள் தங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் பாலமாக இருப்பதாக நம்பினார்கள்.

பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மெழுகுவர்த்திகளின் அளவும், வடிவமும் மாறியிருக்கிறதே தவிர அதன் மீது இருக்கும் நம்பிக்கை மட்டும் குறையவே இல்லை. மெழுகுவர்த்திகளுக்கென தனிப்பட்ட ஆற்றலும், சக்திகளும் இருக்கிறது. இதனை பலரும் அறிவதில்லை. சரியான இடத்தில் சரியான நேரத்தில் மெழுகுவர்த்தி கொளுத்துவது உங்கள் வாழ்கையையே கூட மாற்றும் சக்தி கொண்டது. இந்த பதிவில் மெழுகுவர்த்தியை எப்படி சரியாக உபயோகிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பாரம்பரியம்
மெழுகுவர்த்தி கொளுத்துவது என்பது பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மத மக்களாலும் கடைபிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கவனத்தை ஈர்க்கவும் பல நாடுகளில் மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்படுகிறது. சில கலாச்சாரங்களில் காதலை மெழுகுவர்த்தி மூலம் வெளிப்படுத்தும் வழக்கம் கூட இருந்தது.

ஆதரவு வெளிப்பாடு
மக்கள் தங்களின் ஆதரவையும், அன்பையும் வெளிப்படுத்தும் கருவியாக மெழுகுவர்த்தியை பயன்படுத்திகிறார்கள். இது அதிக எண்ணிக்கையிலான மக்களால் செயல்படுத்தப்படும் போது அது அவர்களின் ஒற்றுமையையும், அவர்களுடைய நோக்கத்தின் வலிமையையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும்.

மெழுகுவர்த்தியின் நிறம்
பெரும்பாலும் மக்கள் தங்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்ற காரணம் அந்த இடத்தை அழகாக்கவும், ரம்மியமான சூழ்நிலையை உருவாக்கவும்தான். ஆனால் உண்மையில் மெழுகுவர்த்தியின் நிறத்தை பொறுத்து அதில் உள்ள ஆற்றலின் அளவும் அதனால் ஏற்படும் விளைவும் மாறுபடும்.

மெழுகுவர்த்தியில் தீமை எதுவும் இல்லை
கருப்பு மெழுகுவர்த்திகள் தீய செயல்களுக்காக பயன்படுத்தப்படும் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது உண்மையல்ல, எந்தவொரு பொருளையும் நன்மை மற்றும் தீயசெயல்கள் என இரண்டிற்குமே பயன்படுத்தலாம். உண்மையில் கருப்பு மெழுகுவர்த்திகள் வீட்டில் பயன்படுத்துவது உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்ட உதவும்.

செல்வத்தை ஈர்க்கும்
மெழுகுவர்த்திகள் நெருப்பின் அடையாளமாகவும் வீட்டிற்குள் கதகதப்பையும், வெளிச்சத்தையும் உண்டாக்கும் சின்னமாக இருக்கிறது. பழங்கால சீன சாஸ்திரங்களின் படி மெழுகுவர்த்தி கொண்டு வீட்டை அலங்கரிப்பது அவர்கள் சமநிலையை ஏற்படுத்தும். மெழுகுவர்த்திகள் தொடர்ச்சியாக வீட்டில் ஏற்றப்படும் போது அது ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் ஈர்க்கும்.

திசை முக்கியமானது
பொதுவாக வீட்டிற்கு மையத்தில் மெழுகுவர்த்தி ஏற்றுவது நல்லது. தெற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசைகளும் மெழுகுவர்த்தி ஏற்ற சிறந்த இடம்தான். இயற்கையான மெழுகுவர்த்திகள் வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை உயர்த்தி உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சுத்தமான மெழுகாலும், தூய பஞ்சாலும் ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

காதல் மற்றும் புகழ்
சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற மெழுகுவர்த்திகள் நெருப்பின் அடையாளமாகும். இந்த நிற மெழுகுவர்த்திகளை உங்க வீட்டின் தெற்கு திசையில் கொளுத்தி வைப்பது உங்களுக்கு புகழையும், வெற்றியையையும் தரும். தம்பதிகளுக்குள் காதல் அதிகரிக்க தென்மேற்கு திசை மிகவும் உகந்ததாகும். உலோகத்தலான ஸ்டாண்டில் வெள்ளை மெழுகுவர்த்தி ஏற்றி குழந்தையின் அறையில் மேற்கு திசையில் வைப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லதாகும்.

அமைதி மற்றும் சமநிலை
மரத்தாலான ஸ்டாண்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வீட்டின் மையத்தில் வைப்பது உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், சமநிலையையும் ஏற்படுத்தும். மெழுகுவர்த்தி எப்பொழுதும் உங்களை சுற்றியிருக்கும் நேர்மறை சக்திகளின் அளவை அதிகரிக்கும். வாழ்க்கை மிகவும் மோசமாக செல்லும் தருணங்களில் மெழுகுவரத்தில் வெளிச்சத்தில் அமர்வது உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும்.

உறவை புதுப்பிக்க
உறவுகளுக்கிடையே இருக்கும் விரிசல்களை சரி செய்ய மெழுகுவர்த்தியை பயன்படுத்தலாம். இரண்டு சிவப்பு நிற மெழுகுவர்த்திகளை உங்கள் வீட்டின் வலது மூலையிலும், உங்கள் படுக்கையறையின் வலது மூலையிலும் ஏற்றி வைக்கவும். இதனை தினமும் இரண்டு முறை செய்யவும். வாசனை மெழுகுவர்த்திகள் ஏற்றி வைப்பது மேலும் நலம். இவ்வாறு தொடர்ந்து செய்துவர விரைவில் உங்கள் உறவுகளுக்குள் மாற்றம் ஏற்படுவதை உணருவீர்கள்.

ஆரோக்கியத்தை மேம்படுத்த
நீங்கள் மோசமான உடல்நிலை, மூட்டுவலி, தோல் அழற்சி மற்றும் கண் திருஷ்டி போன்றவற்றால் அவதிப்பட்டால் மெழுகுவர்த்தி அதனை சரிசெய்ய உதவும். உங்கள் சமயலறையில் ஐந்து மஞ்சள் நிற மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கவும். சதுர வடிவில் இருக்கும் மெழுகுவர்த்திகள் இதற்கு சிறந்ததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











