Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும்
இந்த கனவுகளில் ஒன்று வந்தாலும் அதிர்ஷ்டம் உங்களை தேடி வருகிறது என்று அர்த்தம்...!
நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் நமது விதியாக நாம் பிறப்பதற்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.
" அவனின்றி ஒரு அணுவும் அசையாது " என்று கூறுவார்கள். அது நூறு சதவீதம் உண்மையான கூற்றாகும். ஏனெனில் நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் நமது விதியாக நாம் பிறப்பதற்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் மற்றும் புண்ணியங்களை பொறுத்தே நாம் வாழும் இப்போதைய வாழ்வின் ஏற்ற, இறக்கங்கள் தீர்மானிக்கப்படுவதாக வேதங்கள் கூறுகிறது.

நமது வாழ்வு என்னதான் நமக்கு விடுகதையாக தோன்றினாலும் அதனை பற்றி அறிந்துகொள்ள நமக்கு சில குறிப்புகளை கொடுத்துள்ளார். உதாரணத்திற்கு நம்முடைய ஜாதகம், உடலில் இருக்கும் குறியீடுகள் போன்றவை. அதுமட்டுமின்றி தற்போது நாம் வாழும் வாழ்க்கையில் செய்யும் சில நல்ல காரியங்கள் நமக்கு கடவுளின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும். அவ்வாறு நாம் கடவுளின் ஆசீர்வாதத்தை பெறுகிற போது அவர் அதனை நமக்கு சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார். இந்த பதிவில் எந்தெந்த அறிகுறிகள் கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறார் என்று உணர்த்தும் பார்க்கலாம்.

கனவுகள்
கனவுகள் நமது வாழ்க்கையை பற்றி நிறைய உணர்த்தக்கூடும். நமது வாழ்க்கையில் நடக்கபோகிற நல்லது, கெட்டது அனைத்தையும் நமது கனவுகள் மூலம் நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். கடவுள் நமக்கு கூறவரும் சில செய்திகள் கூட நமக்கு கனவுகள் மூலம்தான் தெரியவரும் என்று வேதங்கள் கூறுகிறது. சில கனவுகள் நமக்கு கெட்டது நடக்கப்போவதை குறிக்கும், அதேபோல சில கனவுகள் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் உள்ளது என்பதை குறிக்கும்.

ஆந்தை
உங்கள் கனவில் ஒருவேளை நீங்கள் ஆந்தையை கண்டால் உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம். அதன்படி உங்களுக்கு இருக்கும் பணப்பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர்ந்து உங்களின் நிதிநிலை சீராக போவதை இது உணர்த்தும்.

அழகுப்படுத்தி கொள்ளுதல்
பெண்கள் தங்களை அழகுபடுத்தி கொள்வதில் எப்பொழுதும் ஆர்வமாய் இருப்பார்கள். ஒருவேளை உங்கள் கனவில் நீங்கள் பெண்ணை தன்னை அழகுபடுத்தி கொள்வது போல நீங்கள் பார்த்தால் உங்களுக்கு துர்கா தேவியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. இது உங்களுக்கு நற்பண்புகளை அளிக்கும். எதிர்காலத்தில் உங்களின் வாழ்க்கை ஒவ்வொரு நிலையிலும் மேன்மையை அடையும்.

தாமரை
தாமரை தமிழ்நாட்டில் பலருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது கனவில் வருவது நல்ல சகுனம்தான். தேங்காய், தாமரை ஆகியவை பூஜைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இரண்டில் ஒன்றை பார்த்தாலும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் வரப்போகின்றது என்று அர்த்தம். ஒருவேளை இரண்டையும் சேர்த்து பார்த்தால் உங்களுக்கு துர்கா தேவியின் பூரண அருள் உள்ளது என்று அர்த்தம்.

பசு
சாதரணமான நாட்களில் கூட நீங்கள் ஏதாவது ஒரு செயலை செய்வதற்கு முன் பசுமாட்டை பார்த்தால் அது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாக கருதப்படுகிறது. உங்கள் கனவில் பசுமாட்டை பார்த்தால் அது கடவுள் உங்களை பாதுகாக்கிறார் என்பதன் அர்த்தமாகும். குறிப்பாக வெள்ளை பசு கனவில் வருவது கூடுதல் சிறப்பாகும். அதற்குப்பின் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் கடவுளின் துணை உங்களுடனேயே இருக்கும்.

பாம்பு
பொதுவாக பாம்பு என்பது உங்களுக்குள் இருக்கும் பயத்தை வெளிக்கொணர்வதாக இருக்கும், ஆனால் கனவில் பாம்பு வலப்புறம் இருந்து இடப்புறம் செல்வது போலவோ, தங்க நிறத்தில் பாம்பை கண்டாலோ அது மிகவும் அதிர்ஷ்டமானதாகும். இது நீங்கள் எதிர்பார்க்காத வளர்ச்சியை உங்களுக்கு அளிக்கும்.

கரும்பு
கனவில் ஒற்றை கரும்பையோ அல்லது நிறைய கரும்புகளையோ எந்த வடிவத்தில் பார்த்தாலும் அது உங்கள் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்க போவதை உணர்த்தும். நீங்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சிகரமான செய்திகள் உங்களை தேடிவரும். மேலும் உங்களின் கடின உழைப்பு நீங்கள் விரும்பும் உயரத்திற்கு உங்களை அழைத்து செல்லும்.

சங்கு
கனவில் சங்கு ஒலிப்பது போல பார்த்தாலோ அல்லது காலை எழும் போது மணி ஓசை அல்லது சங்கு ஒலியை கேட்டால் உங்களை கடவுள் நேரடியாக ஆசீர்வதிக்கிறார் என்று அர்த்தம். இந்த ஒலி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும். ஆனால் தீயசெயல்களில் ஈடுபடுவதை மட்டும் தவிர்த்து விடுங்கள்.
MOST READ:உங்களின் அழிவுக்கும், தோல்விக்கும் காரணம் உங்களுக்கு இருக்கும் இந்த குணம்தான்...!

மல்லிகை
பொதுவாக மல்லிகை மகிழ்ச்சியை குறிக்கும் மலராக கருதப்படுகிறது. மேலும் இது கடவுள்களுக்கு பிடித்த மலராகவும் இருக்கிறது. கனவில் நீங்கள் மல்லிகை மலரையோ அல்லது மல்லிகை பூ வாங்குவது போல கனவு கண்டாலோ கடவுள் உங்களின் வேண்டுதலை நிறைவேற்ற போகிறார் என்று அர்த்தம். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் காரியம் விரைவில் நீங்கள் விரும்பும்படி நடக்கும்.



Click it and Unblock the Notifications