Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா? நீங்களே பாருங்க அந்த கொடுமைய
மூன்று வயதுடைய நாய் கிட்டதட்ட 19 பேபி ரப்பரை சாப்பிட்டுட்டு படாத பாடு படுவதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் அதை ஒரு குழந்தைப் போல எப்பொழுதும் கூடுதல் கவனத்துடன் கவனிக்க வேண்டும். அதிலும் வீட்டில் நாய் போன்றவற்றை வளர்த்தால் எப்பொழுதும் அதை கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.

வெளியில எங்க போகுது, என்ன சாப்பிடுது, என்னத்த பிடிச்சிட்டு வருது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அதை பராமரிக்க வேண்டும். அப்படி ஒரு நாய் என்ன பண்ணிச்சு பாருங்க. குழந்தையின் ரப்பரை காணவில்லை என்ற ஓனருக்கு இது அதிர்ச்சியாக இருந்துள்ளது.

வாயில் வைக்கும் ரப்பர்
போஸ்டன் கால்நடை மருத்துவமனையில் இந்த வினோதமான வழக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தினமும் குழந்தைக்கு வாயில் வைக்கும் ரப்பரை அந்த நாய் சாப்பிட்டு வந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

பெட் டாக்
இந்த ஏஞ்சல் என்ற செல்ல நாயின் தம்மா துண்டு வயிற்றில் 19 பேபி ரப்பரை எடுத்துள்ளனர். அனிமல் மெடிக்கல் சென்டர் மூலம் மருத்துவர்கள் இந்த சிகிச்சையை செய்துள்ளனர். மோர்டிமர் என்ற 3 வயது நாய் ஒவ்வொரு தடவையும் உணவுக்கு முன் குமட்டல் வரத் தொடங்கியிருப்பதை குடும்பத்தினர் கவனித்துள்ளனர். சில மாதங்களாக இப்படி செய்வதைக் கண்டவர்கள் அதை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

நாயின் ஓனர்
இதை கண்டுபிடித்த பிறகு நாயின் ஓனரான எமிலி ஷனஹான் அதை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும் போது நாயின் வயிற்றில் ஏகப்பட்ட பேபி ரப்பர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல மாதங்களாக
செல்லப்பிராணி மோர்டிமர் பல மாதங்களாக ஷானஹானின் இரண்டு குழந்தைகளிடமிருந்து வாயில் வைக்கும் ரப்பரை எடுத்து விழுங்கி வந்துள்ளதை மருத்துவர்கள் இதன் மூலம் கண்டறிந்து உள்ளனர். எப்படியோ நாயின் வயிற்றில் இருந்த 19 ரப்பர்களும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டு விட்டது.
தற்போது அந்த சுட்டி நாயும் உயிர் பிழைத்து வீடு திரும்பி உள்ளது.
என்னங்க உங்க வீட்டிலயும் நாய் வளர்க்கிறீங்களா அப்போ கொஞ்சம் கவனமாகவே இருங்க.



Click it and Unblock the Notifications