Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ஒருத்தர முழுசா நம்பறதுக்கு முன்னாடி அவர்கிட்ட இந்த அறிகுறி இருக்கான்னு மொதல்ல பாருங்க
இந்த ஏழு அறிகுறிகள் இருக்கின்ற நபர்களை பற்றிய விளக்கமான பதிவு இங்கு உங்களுக்கான பகிரப்பட்டுள்ளது. படித்துத் தெரிந்து நடந்து கொள்ளுங்கள். அதுபற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.
மனித சமுதாயத்தில் உறவுகளைப் பேணுவது இன்றைய நாட்களில் மிகவும் கடினமான செயலாக உள்ளது. உறவுகளுக்கான நேரத்தை ஒதுக்க முடியாத காரணத்தால் பல உறவுகள் ஒதுங்கிச் செல்லத் தொடங்கி விடுகின்றன. மேலும் எல்லா உறவுகளை உருவாக்கவும் உடைக்கவும் நம்பிக்கை மிகவும் அவசியம். நட்பு வட்டத்திலும், உறவுகளிடமும் நம்மை இணைக்கும் ஒரு சக்தியாக உள்ளது நம்பிக்கை மட்டுமே.

உங்களை இதயத்தில் தாங்கும் ஒருவரால் மட்டுமே உங்களை பாதுகாப்பாக வழி நடத்த முடியும். நீங்கள் ஒருவரை நம்பலாம் என்று முடிவு செய்வதற்கு உகந்த சில அறிகுறிகள் உங்களுக்கும் அவருக்குமான நெருக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும். அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள இதோ அந்த அறிகுறிகள் உங்களுக்காக...

பின் தொடருதல்
அவர்களை நீங்கள் துரத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எந்த ஒரு பதிலுக்காகவும், குறுஞ்செய்திகாகவும் ஏன் அவர்களின் அருகாமைக்காகவும் நீங்கள் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவர்கள் உங்களுக்குத் தேவையான தருணத்தில் உங்களுடன் இருப்பார்கள். அவர்களின் பிசியான நேரத்திலும் உங்களுக்கு அவசியமான நேரத்தில் உங்களை கைவிட மாட்டார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்த கவலை உங்களுக்கு இல்லாமல் உங்களிடம் உடனுக்குடன் எல்லாவற்றையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்வார்கள்.

பொய் சொல்லாமை
உங்களிடம் எப்போதும் பொய் பேச மாட்டார்கள். இது உங்களுக்கே தெரிந்திருக்கும். சில சமயம், உங்களை காயப்படுத்தினாலும் உங்களிடம் உண்மையை மட்டுமே பேசுவார்கள். முக்கியமான கேள்விகள் நீங்கள் கேட்கும்போது அதற்கான நேரடி பதிலை அவர்கள் வழங்குவார்கள். சுற்றி வளைத்து பேச மாட்டார்கள். சில சமயங்களில் யாரிடமும் சொல்லக்கூடாத தவறே செய்திருந்தாலும் கூட, உங்களிடம் மறைக்க அவர்களுக்கு மறைக்க மனம் வராது.

நீண்ட நாட்கள் பழகுவார்கள்
ஒருவர் மேல் நம்பிக்கை வளர்வதற்கு சில கால கட்டம் தேவை. பழகிய சில நாட்களுக்குள் நீங்கள் ஒருவரை நம்பத் தொடங்கினால் அந்த நம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கும் வாய்ப்பு உண்டு. இருப்பினும், உங்களுக்கு உங்களின் நண்பர் மூலமாக பழக்கமாகும் ஒரு புதிய நபர் சில நாட்களுக்குள் உங்கள் நம்பிக்கையை வென்று விட்டால் அவரிடம் சிறிது எச்சரிக்கை தேவை.

உங்கள் மேல் மரியாதை
உங்களை எரிச்சலடைய வைக்க மாட்டார்கள். உங்களால் அடக்க முடியாத உங்கள் உணர்வுகளைப் பற்றி தவறாக நினைக்க மாட்டார்கள். சில நேரத்தில் நீங்கள் அழ நேர்ந்தால், உங்களை ஆசுவாசப்படுத்த நினைப்பார்கள். உங்களை உடலாலும், மனதாலும் மரியாதையுடன் நடத்த முயற்சிப்பார்கள்.

உங்களை நம்புவார்கள்
உங்கள் மேல் அதிகம் நம்பிக்கை உள்ளவர்கள் நீங்கள் நம்பத் தகுந்தவர்கள். மற்றவர்களிடம் கூற முடியாத ரகசியத்தையும் உங்களிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டால், உங்களுடன் இருக்கும் நேரத்தில் அதிக சௌகரியமாக உணர்ந்தால் அவர்கள் உங்களிடம் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பது பொருள். நம்பிக்கைக்கு தகுதி இல்லாதவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள்.

உங்களுக்காகவே
எந்த ஒரு மோசமான தருணத்திலும் அவர்கள் உங்களுக்காக இருப்பார்கள். அவர்களுக்கு அந்த சூழ்நிலை அசௌகரியமாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் இயல்பாக இருப்பார்கள். உங்களின் கடினமான பொழுதுகளில் நிச்சயம் உங்கள் அருகில் இருக்கும் அவர்கள், சந்தோஷமான தருணத்திலும் உங்களுடன் இன்பமாக பொழுதைக் கழிப்பார்கள்.

சின்ன விஷயங்களையும் மறக்க மாட்டார்கள்
ஒரு விஷயத்தை 50 ஆயிரம் தடவை சொல்ல வேண்டிய அவசியம் ஏதும் இல்லாமல், சின்ன சின்ன விஷயங்களையும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்கள். உதாரணத்திற்கு உங்கள் செல்ல நாய்க்குட்டியின் பிறந்த நாள், உங்கள் நண்பருடனான இரவு விருந்து என்று எல்லாவற்றையும் கவனமாக ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். உங்களுக்கு விருப்பமான நிறம், உங்களுக்கு பிடித்த காபி என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் இவரிடம் நீங்கள் எந்த ஒரு ரகசியத்தையும் கூறலாம். அது மற்றவரிடம் பரவாது.



Click it and Unblock the Notifications