இன்று தன் துணையோடு அதிக நெருக்கம் ஏற்படப் போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர் யார்?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

your daily horoscope

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். இன்றைக்கு வரலட்சுமி நோன்பு. அதனால் அதிர்ஷ்டம் யாருக்கு. நஷ்டத்தில் யார் இருப்பார் என்பது தான் மிக முக்கியம். அப்படி எந்தெந்த ராசிக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உயர்கல்வி பயில்கின்ற மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். பெற்றோர்களுடைய ஆதரவு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். நண்பர்களின் மூலமாக புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடைய வருகையினால் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். வீட்டில் தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பு அதிகரிக்கச் செய்யும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

எதிர் பாலினத்தவர்களிடம் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். நினைத்த காரியங்களில் சில சில தடங்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கினறவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல்கள் உருவாகும். வாகனத்துக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

உங்களுடைய விவாதங்களின் மூலமாக வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். மனக்கவலைகள் நீங்கி, மனதில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தாயினுடைய உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே உறவுகள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

வெளிநாட்டு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளில் சுபமான முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வாக்குறுதிகள் தருவதைத் தவிர்க்க வேண்டும். பணி சம்பந்தப்பட்ட புதிய இடங்களுககு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

குடும்ப உறுப்பினர்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பொது சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு வெற்றி உண்டாகும். தலைமைப் பொறுப்புகளில் இருக்கின்றவர்களுக்கு சக ஊழியர்களுடைய ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

புதிய நபர்களுடைய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய தொழிவை மேம்படுத்த உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களிடம் வேலை செய்பவர்கள் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். மனம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கி, கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடைய ஆலோசனைகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய குடும்பத்தில் சுப செயல்கள் செய்வதற்கான சூழல்கள் உருவாகும். உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளில் முயற்சி செய்வீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளால் தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்காமல் உண்டாகும் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய நிலைகள் உருவாகும். உங்களுடைய தடைகளையெல்லாம் தாண்டி வெற்றியை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

உங்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டம தினம். இன்று சந்திராஷ்டம தினம் என்பதனால் உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலுக்கு உங்களுக்கு நண்பர்களுடைய உதவிகள் கிடைக்கும். சின்ன சின்ன அலைச்சாலும் இருந்தாலும், அதற்குப் பிறகு உங்களுக்கு ஆதாயங்கள் கிடைக்கும். பாதியில் நின்று போன பழைய வேலைகளைக் கூட திரும்ப எடுத்து செய்து முடிப்பீர்கள். மனதுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து போகும்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

வேலை தேடும் முயற்சிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனங்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். அதனால் சின்ன சின்ன தடுமாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய பழைய கடன்களைத் திருப்பி அடைப்பதற்கான வழிகளும் அதற்கான ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளிடம் உண்டாகும் வீணான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

தொழில் ரீதியான பயணங்களினால் மனதுக்குள் மகிழ்ச்சி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் அதிக கவனம் தேவை. வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். கணவன் மற்றும் மனைவிக்கு நல்ல புரிதல் உண்டாகும். சமூகப் பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு கவனத்துடன் செயல்படுங்கள். அதன்மூலம் பல நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். மேலதிகாரிகளிடம் உங்களுக்கு ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்னைகளும் தீரும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்து போகலாம். உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும் நாளாக இன்று இருக்கும். உங்களுடைய கோபம் நிறைந்த வார்த்தைகளை அடக்கி, கொஞ்சம் அமைதியாகச் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion