Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
காசு விஷயத்தில் இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கறாரா இருக்கணும்... இல்லட்டா கஷ்டம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருங்கள். அடுத்தவர்களுடைய வேலைகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய முக்கியமான வேலை நுணுக்கங்கள் தெரிந்து விடும். தேவையற்ற வீண் அலைச்சல்களினால் உடல் சோர்வு ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள். அது உங்களுக்கு நன்மையைத் தரும்.. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அதில் தனித்த வெற்றியை அடைவீர்கள். உங்களுடைய தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான பல புதிய யுக்திகளைக் கையாளும் தன்மை உருவாகும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான நெருக்கங்கள் அதிகரிக்கும். சாதாரண பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகளுக்குச் செல்வதற்கான ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய வேலை செய்கின்ற திறமைக்கு ஏற்ற பதவி உயர்வும் அதற்கான வழிகாட்டுதல்களும் உங்களுக்குக் கிடைக்கும். உறவினர்களுடன் தேவையில்லாமல் எந்தவிதமான தேவையில்லாத வாக்குவாதங்களையும் செய்வதை விட்டுவிடுங்கள். கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு அவ்வளவாக லாபம் கிடையாது. உங்களுடைய பயணங்களின் போது, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடன் உடன் பிறந்த சகோதரர்களின் மூலம் நல்ல செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளுடைய ஆதரவினால் சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும். வெளிநாடுகளுக்கு பயணங்கள் செய்பவர்களுக்கு லாபங்கள் உண்டபகும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடைய வீட்டில் உள்ளளவர்களின் ஆதரவினால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உங்களுடைய
வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். திடீர் யோகத்தால் உங்களுக்கு பணவரவு உண்டாகும். மனம் புத்துணர்ச்சி அடைவீர்கள். புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கான வேலைகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
வீட்டில் உள்ளவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருங்கள். வெளியூரிலிருந்து வரும் செய்தியால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களுடைய உதவியினால் பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். புதிதாக தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்
சின்ன சின்ன பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன்மூலம் மனம் மகிழ்ச்சி உண்டாகும். நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிபவராக இருந்தால் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிதாக தொழிலில் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் உங்களுககு சாதகமான பலன்களைத் தரும். விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களுக்கு வாதத்திறமையால் எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய வாக்குத் திறமையின் மூலமாக அனைவரையும் கவர்ந்துவிடுவீர்கள். வீட்டில் உள்ளவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்கயும் கொஞ்சம் அனுசரத்துச் செல்வது தான் நல்லது. அரசாங்கத் தரப்பிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் உங்களுக்கு நடைபெறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய நண்பர்களின் ஒத்துழைப்பின் மூலம் உங்களுக்குத் தொழிலில் லாபங்கள் உண்டாகும். உங்களுடைய மனைவியின் ஆதரவினால் உங்களுடைய சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பிக்கும். தொழிலில் கூட்டாளிகளின் மூலம் சின்ன சின்ன விரயங்கள் ஏற்பட்டு தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உங்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பொன், பொருள் சேர்க்கையின் மூலமாக மனதில் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கான பல புதிய வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக எடுக்கின்ற முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கப் பெறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்
பொதுக்கூட்டங்களில் பேசும் பழக்கம் இருப்பவர்கள் உங்களுடைய பேச்சில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளவும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள். உங்களுடைய பரம்பரை சொத்துக்கள் மூலமாக தேவையில்லாத விரயங்கள் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு சாதகமற்ற சூழல்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும் நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். கால்நடைகளின் மூலம் உங்களுக்குச் சாதகமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். மாணவர்குள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications