Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஒருவழியா ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தாச்சு... என்ன சொல்லுது உங்க ராசின்னு பார்ப்போமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
மனதில் புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களைத் தொடங்குவீர்கள். உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பிளர்களுக்கு இடையே மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
உங்களுடைய உடன் பிறப்புகளின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரங்களில் உங்களுக்குக் கிடைக்கும் உதவியினால் லாபம் அதிகரிக்கும். வாகனங்களில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். உங்களுடைய புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் மேற்கொள்ளும் பயணங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்கள் சம்ந்தப்பட்ட பிரச்னைகளினால் மனதில் வருத்தங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
ஏற்றுமதி,இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். பொது சபைகளில் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். வியாபாரங்களில் உங்கள் மீதான ந்பிக்கை அதிகரிக்கும். கடல்வழிப் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுடைய குண நலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பணி சம்பந்தப்பட்ட பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகளின் மூலம் திருப்திகரமான சூழ்நிலைகள் உருவாகும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் அமைதிப் போக்கினைக் கையாளுவது நல்லது. வாகனங்களில் பயணம் செய்யும்பொழுது, கொஞ்சம் நிதானமாகச் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். பொன் மற்றும் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
சொந்த ஊருக்கு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். செய்கின்ற தொழிலில் பல தடைகளையும் தாண்டி, நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். தேவையில்லாத வீண் செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய தொழிலுக்கு அரசாங்கத் தரப்பில் இருந்து உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் ஆதரவான சூழல்கள் பெருகும். வீட்டுக்கு உறவினர்கள் வருகை இருக்கும். அதனால் வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் பெருகும். உயர்கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
வெளியில் எடுத்துச் செல்கின்ற உடைமைகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். திருமணப் பேச்சுவார்த்தைளில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
செய்கின்ற செயல்களைக் கொஞ்சம் தாமதமாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களினால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பயணங்களின் மூலமாக புத்துணர்ச்சி அடைவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டார்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். திருமண வரன்கள் கைகூடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நினைத்த செயல்களை செய்து முடிக்க கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்புகள் உயரும். நண்பர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
வீட்டில் பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள். நிலுவையில் இருந்து வந்த செயல்களைச் செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்திருந்த சுப செய்திகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியவர்களிடம் கொஞ்சம் நிதானப் போக்கிளைக் கடைபிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் திருப்தியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











