Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
இன்று ஒரு நல்ல தலைவராகும் வாய்ப்பு இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கிறது… மிஸ் பண்ணிடாதீங்க...
ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது.சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். அந்த ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
ஜோதிடம்
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் எந்த விஷயத்திலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நமக்கு நிச்சயம் தான். நம்பிக்கை இல்லையென்றால் அதைப்பற்றி சிந்தித்து நம்முடைய நேரத்தைக் கடத்தக்கூடாது. ஒரு விஷயத்தின் மீதான நம்பிக்கைத்தன்மை அந்த விஷயத்தின் முழுமையை நமக்குப் புரிய வைக்கும்.

மேஷம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் பெருகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிய சற்று கால தாமதமாகும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரவிருக்கிற எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் இருக்கப்போகிறது.

ரிஷபம்
உங்கள் வீட்டுக்குப் புதிய உறவினர்கள் வந்து சேருவார்கள். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகளை உடனே தீர்க்க போதுமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.திறமைகளை வெளிப்படுத்தும் நாள். இன்று கிழக்கு திசை உங்களுக்கு அதிஷ்டம் தரும் திசையாகவும் 9 அதிர்ஷ்ட எண்ணாகவும் ஆரஞ்சு அதிர்ஷ்டம் தரும் நிறமாகவும் அமையும்.

மிதுனம்
கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகாது. பொறுமை தேவைப்படும் நாள். எந்த விஷயமும் வெற்றி உண்டாக கால தாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - பச்சைநிறம்.

கடகம்
குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சாதுர்யமான பேச்சுக்களால் தன லாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்.

சிம்மம்
பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்.

கன்னி
உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு அவசியம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிஷ்ட திசை - தெற்கு, அதிஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை.

துலாம்
நண்பர்களின் மூலம் நிரந்தர வருமானத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்.

விருச்சிகம்
பூர்விக சொத்துக்களைக் கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்.

தனுசு
உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை.

மகரம்
சபை தலைவராக வீற்றிருக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு.

கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் அவசியம் கவனம் தேவை. பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளினால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். அதற்கேற்ப லாபமும் உண்டு. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்.

மீனம்
தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடனுதவிகள் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள்சேர்க்கை, வாகனச்சேர்க்கை உண்டாகும். பொது தொண்டில் ஈடுபடுபவர்கள் பிறரால் புகழப்படுவீர்கள். . அறிவுத்தேடல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.. பணியில் மேன்மை உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்.



Click it and Unblock the Notifications