Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
இன்னைக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா?
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் நீண்ட நாட்களாக தேங்கியிருந்த பணிகளை அத்தனையும் செய்து முடிப்பீர்கள். சுய தொழிலில் பல புதிய யுக்திகளை முயற்சித்துப் பார்ப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் மூலமாக பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு தன வரவு கிடைக்கும். மகிழ்ச்சி பெருகும் நாளாக அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாகவும் பெருமையைத் தரக்கூடியதாகவும் இருக்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள். பணியில் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். சுமையாக நினைக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். பொருளாதாரத்தை மேம்படுத்தும் எண்ணங்கள் மேலோங்கும். தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் நிறைய சாதகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்கின்ற வேலையில் கவனத்துடன் கொஞ்சம் இருங்கள். நண்பர்கள் மூலமாக உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத வீணு் செலவுகள் உண்டாகும். பணியில் கவனத்துடன் செயல்படவும். வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண்- 6, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறமாக இருக்கும்.

சிம்மம்
எண்ணங்களில் தெளிவு உண்டாகும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் வரும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண்- 2, அதிர்ஷ்ட நிறம் - பச்சசை நிறம்.

கன்னி
பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பொறுமையைக் கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனம் தேவை. அண்டை வீட்டாரிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். இன்று உங்களுடையஅதிர்ஷ்ட திசை - தென்மேற்கு, அதிர்ஷ்ட எண்- 3, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்.

துலாம்
பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பொறுமையைக் கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனம் தேவை. அண்டை வீட்டாரிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு, அதிர்ஷ்ட எண்- 3, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

விருச்சிகம்
தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீங்கும். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு மேம்படும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு, அதிர்ஷ்ட எண்- 5
அதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம்.

தனுசு
பழைய நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வரன்கள் சாதகமான பலனைத் தரும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். மூத்த உறுப்பிறப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண்- 4
அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்

மகரம்
வியாபாரத்தில் புதிய நபர்களால் குழப்பமான சூழல் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தேவையற்ற வாதத்தால் பகைமை உண்டாகும். எனவே பேச்சில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண்- 9
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்

கும்பம்
தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். சுப செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண்- 1, அதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்

மீனம்
தாய் பற்றிய கவலைகள் மனதில் தோன்றி மறையும். பணி சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும். துணிச்சலுடன் செய்த செயல்களால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண்- 7, அதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்



Click it and Unblock the Notifications
