கொஞ்ச நேரம் சிரிச்சு ரிலாக்ஸ் பண்ணனுமா, வாங்க இந்த போட்டோ கலக்ஷன் பாருங்க!

Written By:
Subscribe to Boldsky

தூக்கம்ங்கிறது பெரிய வரம். அதுவும், இந்த 21ம் நூற்றாண்டுல ஒரு மனுஷன் காலையில ஆறு மணிக்கு எழுந்து, நைட் ஒன்பது மணிக்கெல்லாம் நிம்மதியா தூங்கிட்டான்னு சொன்னா கோவில் கட்டி கும்பிடலாம். அதுவும், அந்த நபர் தமிழ்நாடு, இந்தியார இருந்தா கின்னஸ் புக் ஆப் ரெகார்டுல சேர்த்துவிட்டுரலாம்.

ஏன்னா, நம்ம ஊருல தான் நேரங்கெட்ட நேரத்துல பணமதிப்பிழப்பு, தியானம் இன்னும் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா எல்லாம் நடக்கும். இவங்க நேரங்கெட்ட நேரத்துல கண்டத கிளப்பிவிடுறது மட்டும் இல்லாம, நம்மையும் நிம்மதியா தூங்கவிடாம பண்ணிடுவாங்க.

ஏன் இத சொல்றோம்ன்னா.... சரியா தூங்கலன்னா, நோய் வந்திடும், வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போயிடும். இது நான் சொல்லலே, ஊருலகத்துல எல்லாருமே சொல்றது.

தூக்கம், சிரிப்பு இது ரெண்டும் ஒண்ணா வராது. அப்படியே ஒருத்தர் தூங்கிட்டே சிரிச்சா, ஒன்னு நல்ல நடிகனா இருக்கணும், இல்ல செம்ம போதையில இருக்கணும்.

சரி! அதெல்லாம் விடங்க... நீங்க ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா கொஞ்சம் நேரம் ரிலாக்ஸா இருக்க நிச்சயம் இந்த புகைப்படத் தொகுப்பு உதவும்... வாங்க கொஞ்ச நேரம் சிரிச்சிட்டு போங்க....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெஜண்ட்!

லெஜண்ட்!

இந்த படத்துல மொத்தம் மூணு பேரு தூங்கிட்டு இருக்காங்க. அதுல, லாஸ்ட்டா தூங்கிட்டு இருக்க அந்த பொண்ணு கிட்ஸ் (Kids) லெவல், அதாவது அட்ஜஸ்ட் பண்ணி, கால குறிக்கி தூங்குறது. இரண்டாவது மென் (Men) லெவல், அதாவது இடைஞ்சலா இருந்தாலும் கால நீட்டி தூங்குறது. ஆனால், முன்னாடி நம்மவர் இருக்காரே அவரு லெஜண்ட் (Legend) ஒட்டுமொத்த பொஷிஷனையும் மாத்தி, கொண்டு வந்த சூட்கேஸ தலையணை ஆக்கி, எப்படி சொகுசா தூங்குறாரு பாருங்க.

தப்புடாமா சுருதி!

தப்புடாமா சுருதி!

இதோ பாரு... இப்போ போட்டோ எடுத்து, நெட்டுல உலாவவிட்டு சின்னாபின்னமாக்கிவிட்டுட்டாங்க. நம்ம ஊர்ல மெட்ரோல இருந்து ஷேர் ஆட்டோ வரைக்கும் இப்படி ஆபீஸ் போற வழியில, வீடு திரும்புற வழியில தூங்குற ஆட்கள் பலபேர பார்க்கலாம். ஆனாலும், இப்படி வாய பிளந்து தூங்குறது கொஞ்சம் ஓவர். அதுவும், போட்டோ எடுக்குறது கூட தெரியாம... சரி! செல்லாத்த சொல்லி என்ன பிரயோசனம்... தூங்கும் போது சிலருக்கு தலையில கல்ல போட்டாலே தெரியாது... போட்டோ எடுக்குறது எப்படி தெரியும்..!

என்ஜினியர் போல...

என்ஜினியர் போல...

கண்டிப்பா இந்த பய ஒரு என்ஜினியரா தான் இருக்கணும். எப்படி டெக்னிக்கா தூங்குறான் பாருங்கள். அதுவும், அந்த பேக் சைஸ்க்கு ஏத்தாப்புல தலையை சாச்சு வெச்சு வசதியா தூங்கிட்டு இருக்கான். வெல் டன் மை பாய்!

எதுக்கு!

எதுக்கு!

ஒருவேள நைட் ஷிப்ட் முடிஞ்சுது தெரியாம பொண்ணு அப்படியே தூங்கிடுச்சோ... என்னமோம்மா என்ன இருந்தாலும், இது உங்க வீட்டு பெட்ரூம் இல்ல, ஆபீஸ் வர்க் ஸ்டேஷன்ங்கிறதா கொஞ்சம் நினைவுல வெச்சிருக்கலாம். இப்படியா தூங்குறது!

பெரிய கொய்ந்த!

பெரிய கொய்ந்த!

நினைவோ அது பறவைன்னு... அப்படியே தன்னோட சிறுவயசு ஞாபகங்களோட தன்னோட பேரன் விளையாட வேண்டிய இடத்துல.. கால நெக்கலா தூக்கிக் வெச்சுட்டு படுத்து தூங்கிட்டு இருக்கார் தாத்தா... பாத்து வயசான காலத்துல படாத இடத்துல அடிப்பட்டுட போகுது!

ஸ்டேன்ட் அட்டடீஸ்!

ஸ்டேன்ட் அட்டடீஸ்!

உங்களுக்கு இந்த படத்த பார்த்தும் என்ன நினைவுக்கு வருது.... அப்படியே கொஞ்ச காலத்த ரீவைண்ட் பண்ணி பின்னாடி போனோம்னா நம்ம ஸ்கூல் படிச்சா ஸ்டாப் அவரும். அங்கே அப்படியே பிரேக் போட்டு இறங்கி ஸ்கூல் பிரேயர் ஹால் பக்கமா போனீங்கன்னா.. கிளாசுக்கு ஒருத்தன் தமிழ்த்தாய் வாழ்த்து முடிஞ்சு ஹெட்மாஸ்டர் பேச ஆரம்பிச்சதும் இப்படிக்கா நின்னுட்டே தூங்கிட்டு இருப்பான். பி.டி. மாஸ்டர் மரத்துல இருந்து ஒரு குச்சிய பிடிங்கிட்டு வந்து தூங்குவியா, தூங்குவியான்னு பின்னாடியே நாலு வெளுவெளுப்பாரு. இப்படியான நினைவுகள் உங்க ஸ்கூல்ல நடந்திருக்கா?

நல்லா ஒதுக்குபுறமா தானே இருக்கு...

நல்லா ஒதுக்குபுறமா தானே இருக்கு...

ரயில்வே ஸ்டேஷன், ஆபீஸ் வர்க் ஸ்டேஷன் துக்கங்களோட ஒப்பிட்டு பார்த்தா... இதொண்ணும் பெரிய விஷயம் இல்ல. நல்லா ஒதுக்கு புறமா தானே இருக்கு... அதான் மாப்பு நல்லா போர்வை எல்லாம் போர்த்தி படுத்து தூங்கிட்டு இருக்காரு.

தலைக்கேறிய போதை!

தலைக்கேறிய போதை!

போதை தலைக்கேறி போச்சுன்னா... பேச்சுலர் ரூம்ல பலர் இப்படி தான் எங்க, எப்படி படுத்துட்டு இருக்கோம்ங்கிறது தெரியாம குப்புறப்படுத்து தூங்கிட்டு இருப்பாங்க. அப்பறம் மெதுவா மறுநாள் காலையில எழுந்து, உடம்புல அங்க வலிக்கியது, இங்க குடையுதுன்னு குத்தம் சொல்லுவாங்க!

இதுக்கு பேரு தான் அட்ஜஸ்ட்மெண்ட்டோ...

இதுக்கு பேரு தான் அட்ஜஸ்ட்மெண்ட்டோ...

ஒருவேள இததான் பெரியவங்க... வாழ்க்கைனா அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கணும்ன்னு சொல்லிட்டு போயிருக்காங்கலோ... செம அட்ஜஸ்ட்மெண்ட்டு தாங்க இது! மக்கா எப்படி கால சுருக்கி வெச்சு தூங்குறாப்புல!

வேலையிடமே சொர்க்கம்!

வேலையிடமே சொர்க்கம்!

உடம்பு முழுக்க சோர்ந்து போகுற மாதிரி உழைச்சா தான்.. இப்படி படுக்குற இடம் தெரியாம.. நல்ல தூக்கம் வரும். இதெல்லாம் உழைக்கும் (உடல் உழைப்பு) வர்க்கத்துக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை.

100% மட்டை!

100% மட்டை!

இதுக்கு பேரு தான் 100% போதையோ... தலையனைய எடுத்துட்டு போய் பெட்ரூம்ல படுக்காம... பிளடி ராஸ்கோல்... ரெஸ்ட்ரூம்ல படுத்துட்டு இருக்காப்புல... அந்த காப்புல எப்படிப்பா தூக்கம் வருது... மப்பு ஏறிட்டா... சுத்தி என நடக்குது... நாம எங்க இருக்கோம்ங்கிறது எல்லாம மறந்திடும் போல...

அடுத்து யாரு...

அடுத்து யாரு...

ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது சார் ஒவ்வொரு ஆளா கூப்பிட்டு அசைன்மெண்ட் செக் பண்ணுவாப்புல. சிலர் அட்டன்டன்ஸ் வாரியா கூப்பிடுவாங்க. சிலர் பெஞ்ச் வாரியா கூப்பிடுவாங்கள். அட்டன்டன்ஸ் வரிசையில கூப்பிட்டா மாட்டிக்குவோம். இதுவே பெஞ்ச் வரிசையில கூப்பிட்டா யாரு வந்தா, வரலன்னா அவருக்கே தெரியாது. அதுபோன்ற நேரங்களில் நம்ம பயலுக இப்படி தான் நடந்துக்குவாங்க... பென்ச்குள்ள போ ஒளிஞ்சுப்பாங்க!

இதெல்லாம் அசால்ட்டு!

இதெல்லாம் அசால்ட்டு!

இப்படியான நிகழ்வுகளும் நீங்க ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கு. அதுவும் முக்கியமா கடைசி பெஞ்சு பயலுவகளுக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி நாலஞ்சு புக் எடுத்து டெஸ்க் மேல வெச்சுட்டு தூங்க ஆரம்பிச்சிடுவாங்க.

எங்கே நிம்மதி!

எங்கே நிம்மதி!

கொஞ்சம் லைட்டா டைட்டான காரணத்துனால... வூடு எங்க இருக்குன்னு தேடி, தேடி பார்த்துட்டு... டயர்டாகி அசந்து தூங்கிட்டாப்புல மனுஷன். அங்கிள் பார்க்க... பிஸ்னஸ் மேன் போல இருக்கார். குடி ஒன்னு தான் யாரயும் ஏற்ற தாழ்வு பார்த்து ட்ரீட் பண்றது இல்ல. எல்லாரையும் மண்டையில தட்டி தெருவுல குப்புறப்படுக்க வெச்சிடுது.

பாவம் வைஃப் கூட ஷாப்பிங் போன மனுஷன்...

பாவம் வைஃப் கூட ஷாப்பிங் போன மனுஷன்...

இதோ ஷாப்பிங் பண்ணிட்டு வந்திடுறேன்னு புருஷன வெளியில விட்டு போனவங்க... மறுநாள் விடிஞ்சும் வெளிய வரவே இல்ல போல... மனுஷன் டிராலிலையே படுத்து தூங்கிட்டாப்புல...

தம்பி மண்ட பத்திரம்!

தம்பி மண்ட பத்திரம்!

எப்படியும் மெட்ரோவா தான் இருக்கணும்... திடீர்ன்னு யாராவது இவர எழுப்புனாலோ, இல்ல இவரே தூக்கத்துல இருந்து விழிச்சுக்கிட்டாலோ என்ன ஆவுறது. நேக்கா... தலைய உள்ளவிட்டு லாக் பண்ணியிருக்காப்புல...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

You Want To Sleep or Laugh? Choice is Yours!

You Want To Sleep or Laugh? Choice is Yours!
Subscribe Newsletter