இதுவரை நிகழ்ந்த மிக மோசமான தொழிற்சாலை விபத்துக்கள்

Posted By:
Subscribe to Boldsky

தொழில் வளர்ச்சி எல்லாம் முக்கியம் தான், ஆனால் நம்முடைய பேராசையினால் சரியான பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படாமல் விபத்துக்களை சந்திக்க நேரும் போது ஏராளமான மனித உயிர்கள் பலியாகின்றன.

அதிலும் வாழ்நாள் முழுமைக்கும் வடுமை சுமக்கும் நிலைக்கும் ஆளாகிறார்கள். கெமிக்கல் கலந்த தொழிற்சாலை என்றால் சொல்லவே வேண்டாம். அதன் தாக்கம் பல ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் அனுபவிக்க வேண்டும் கொடுமை ஏற்படுகிறது.

இந்து துறை தான் என்றல்ல எல்லாத்துறைகளில் விபத்துக்கள் ஏற்படத்தான் செய்கின்றன ஆனால் அதற்கடுத்து அதற்கான தடுப்பு முறைகள், பாதுகாப்பு நடைமுறைகள் என்ன எடுத்திருக்கிறோம் என்பது தான் கேள்வியாய் நிற்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போர்ட் சிகாகோ :

போர்ட் சிகாகோ :

Image Courtesy

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சிகாகோவில் நடைப்பெற்ற மிகப்பெரிய விபத்து இது. 1944 ஆம் ஆண்டு ஜூலை17 ஆம் தேதி நடந்திருக்கிறது. அமெரிக்க படையினரின் செல்கள்,ராணுவ உபகரணங்கள்,குண்டுகள் எல்லாம் கப்பலில் ஏற்பட்டு ராணுவரர்களுடன் புறப்பட்டது.

புறப்பட்ட சில நேரத்திலேயே கப்பலில் இருக்கும் குண்டு ஒன்று அதிக அழுத்தம் காரணமாக வெடிக்க வைத்திருந்த மொத்த குண்டுமே வெடித்துச் சிதறியது. சற்றும் எதிர்ப்பார்க்காத இந்த விபத்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இந்த விபத்துல் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமடைந்தார்கள்.

கெர்னோபைல் :

கெர்னோபைல் :

Image Courtesy

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி உக்ரைனில் அமைந்திருக்கும் ப்ரிபியாட் என்னும் இடத்தில் இருந்த க்ரோனிபில் நியூக்கிளியர் ப்ளாண்ட்டில் விபத்து ஏற்பட்டது.

இந்த நியூக்ளியர் விபத்தின் தாக்கத்தால் ஐம்பது பேர் வரை உயிரிழந்தார்கள். மேலும் அதன் கதிர்வீச்சினால் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்கள்.

செவேசோ :

செவேசோ :

Image Courtesy

இத்தாலியில் இருக்கும் ஒரு கெமிக்கல் நிறுவனம் 1976 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த தொழிற்சாலையிலிருந்து அதிக நச்சு நிறைந்த டிசிடிடி என்ற வாயு கசிந்தது. கிட்டத்தட்ட 3300 விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன, அதனைச் சாப்பிட்ட மனிதர்களுக்கும் அதன் தாக்கம் பரவி மனித உயிர் பலி தொடரவே அந்த ஊரில் இருந்த மொத்த விலங்குகள் கொல்லப்பட்டன. அப்படி கொல்லப்பட விலங்களின் பட்டியல் எண்பதாயிரத்தை தாண்டும்.

மேலும் பரவக்கூடாது என்ற நோக்கத்தில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டன.

எல்.பி.ஜி கேஸ் :

எல்.பி.ஜி கேஸ் :

Image Courtesy

1984 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி சன் ஜுவானிகோவில் அமைந்திருக்கு எல் பி ஜி கேஸ் சேமிப்பு கிடங்கில் தீவிபத்து நிகழ்ந்தது.இதில் அந்த சான் ஜுஸுவான் நகரமே சின்னாபின்னமாகியது என்று சொல்லலாம். ஏராளாமானோர் இறந்தது மட்டுமல்லாமல் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் தீக்காயங்களால் அவதிப்பட்டனர்.

டெக்சாஸ் சிட்டி :

டெக்சாஸ் சிட்டி :

Image Courtesy

1947 ஏப்ரல் 6 ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்து அமெரிக்க தொழிற்சாலை வரலாற்றில் மிக மோசமான விபத்தாகும். தொழிற்சாலையில் அளவுக்கு அதிகமாக வைத்திருந்த அமோனியம் நைட்ரேட் கசிந்து விபத்து நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 2,300 டன் வரையில் வெளியேறியது.

எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாஸ்னாலா சுரங்கம் :

சாஸ்னாலா சுரங்கம் :

Image Courtesy

ஜார்கண்டில் இருக்கும் இந்த சுரங்கம் இடிந்து விழுந்தது.1975 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த கொடூர விபத்தில் ஒருவர் கூட காப்பாற்ற முடியவில்லை. விபத்து நிகழ்ந்தது ஒரு நிமிடத்தில் ஏழு மில்லியன் கலூன் அளவான நீரும் புகுந்து கொண்டதால் அனைவரும் நீரில் மூழ்கி இறந்ததாக சொல்லப்படுகிறது.

கோப்ரா சிம்னி :

கோப்ரா சிம்னி :

Image Courtesy

2009 ஆம் ஆண்டு சட்டீஸ்கரில் அமைந்திருக்கும் பாரத் அலுமினியம் நிறுவனத்தில் சிம்னி கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்தனர்.

240 மீட்டர் உயரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் யாரும் உயிருடன் இல்லை. இந்த விபத்திற்கு காரணம் அப்போது நிகழ்ந்த இடி தான் என்று கூறப்படுகிறது.

எண்ணெய் கிடங்கு :

எண்ணெய் கிடங்கு :

Image Courtesy

ஜெய்பூரில் உள்ள சித்தாபுரா பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எட்டாயிரம் கிலோ லிட்டர் எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

திடீரென்று நிகழ்ந்த தீ வேகமாக பரவி கிட்டத்தட்ட பதினோறு நாட்கள் வரை கொழுந்துவிட்டு எரிந்தது. 300க்கு மேற்பட்டோர் படுகாமயாமடைந்தார்கள் இந்த விபத்தினால் நானூறு கோடி ரூபாய் வரையிலும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பன்னிரெண்டு பேர் வரை உயிரிழந்தார்கள்.

இதே நேரத்தில் தொடர்ந்து பதினோரு நாட்களும் கரும்புகை காற்றில் கலந்ததால் அப்பகுதி மக்கள் சுவாசப்பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Worst Industrial Disaster

Worst Industrial Disaster