Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
கிருஷ்ண ஜெயந்தியன்று படையலில் என்ன பலகாரம் வைக்க வேண்டும்? எப்படி செய்வது?
இன்று கிருஷண் ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி பற்றியும் அப்போது படையலில் வைப்பதற்காக என்னென்ன பலகாரங்கள் செய்து படைக்கலாம் என்று பார்ப்போம்.
கிருஷ்ணர் என்று சொன்னாலே நம் எல்லோருடைய மனதும் கொண்டாட்ட நிலைக்குப் போய்விடும். அதற்குக் காரணம் கிருஷ்ணருடைய லீலைகள் தான்.

எவ்வளவு வருத்தத்தில் இருப்பவரும் கிருஷ்ணன் என்று சொன்னதும் மனம் புத்துணர்ச்சி அடைந்து விடுவார்கள். அத்தகைய கிருஷ்ணனின் பிறந்த நாளை தான் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என் பல பெயர்களில் கொண்டாடுகிறோம்.

கோகுலாஷ்டமி
ஆவணி மாதத்தில் கண்ணன் பிறந்த அந்த அஷ்டம நாள் தான் கோகுலாஷ்டமி. குழந்தைப்பேறு இல்லாமல் இருப்பவர்களும் மற்றவர்களும் கோகுல கிருஷ்ணன் தன்னுடைய இல்லத்து வந்து அருள் புரிய வேண்டும் என்பதற்கான சுண்ணாம்பில் குழந்தை கிருஷ்ணனின் பாதங்களை வாசலில் இருந்து பூஜையறை வரை வரைந்து, வழிபாடு செய்வார்கள்.

படையல்
பொதுவான வீட்டில் என்ன வகையான வழிபாடு செய்தாலும் மலர்கள், தேங்காய், பழங்கள் தவிர அந்தந்த விழாக்களுக்கு என்று சிறப்பாக இருக்கிற சில பதார்த்தங்களை செய்து படையல் வைத்து வழிபடுவது வழக்கம்.. அந்த வகையில் கோகுலாஷ்டமி அன்று குறிப்பாக, கிருஷ்ணனுக்குப் பிடித்த பால், தயிர், வெண்ணெய், அவல், பலகாரங்கள், பாயசம் ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். அத்தகைய சில குறிப்பிட்ட பலகாரங்களை எப்படி செய்வதென்று கீழே பார்ப்போம்.

தேங்காய் பர்ஃபி
தேங்காய் பர்ஃபி கொஞ்சம் அதிக இனிப்பு சுவையுடைய பலகாரம் தான். ஆனாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது கட்டாயம் கோகுலாஷ்டமி படையலில் இருக்கும்.
தேவையான பொருள்கள்
தேங்காய் துருவல் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
கடலை மாவு - 2 ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - சிறிதளவு
முந்திரி - தேவையான அளவ (உடைத்தது)
செய்முறை
சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும்வரை பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதற்குள்ளாகவே தேங்காய் துருவலை போட்ட நன்கு கிளற வேண்டும். மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சிறிது நெய்விட்டு, அதில் கடலை மாவைப் போட்டு வறுத்து, தேங்காய்க் கவலையில் கொட்டி, அதனுடன் சிறிது ஏலக்காய்த் தூளையும் சேர்த்துக் கிளறுங்கள். அப்போது பர்ஃபி பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். சுருண்டு வரும் வேளையில், ஒரு தட்டில் நெய் தடவி,அதை சமமாக தட்டில் துண்டுகள் போடவும். அதன்மேல் முந்திரி பருப்பை மேலே தூவ வேண்டும். இப்போது, சுவையான தேங்காய் பர்ஃபி ரெடி!

திரட்டிப்பால்
திரட்டிப்பால் என்பது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவுப்பொருள். இது கிருஷ்ண ஜெயந்தி படையலில் கட்டாயம் இடம் பெறுகின்ற ஒரு இனிப்பு வகையாக இருக்கும்.
தேவையான பொருள்கள்
பால் - 1 லிட்டர்
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் பொடி - சிறிது
நெய் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
செய்முறை
அடி கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, 1 லிட்டர் பாலை ஊற்றி, அதை சிறு தீயினில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பால் நன்கு கொதித்த பின், சுண்ட ஆரம்பிக்கும். நன்கு பால் மூன்றில் ஒரு பங்காக சுண்டுகிற வரையில், காய்ச்ச வேண்டும். பால் நன்கு சுண்டியதும் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய்த் தூய் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளற வேண்டும். பால் இன்னும் சுண்ட ஆரம்பித்து சுருண ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, நெய்விட்டு கிளறி, அதன்மேல், முந்திரி விட்டு கிளறவும். சுவையான திரட்டுப் பால் ரெடி. ஆனால் கட்டாயம் சிறு தீயில் (சிம்மில்) வைத்து தான் கிளற வேண்டும்.

இனிப்பு சீடை
தேவையான பொருள்கள்
பதப்படுத்திய அரிசி மாவு (ஈரத்தை வறுத்தது) - 4 கப்
வெல்லம் - 3 கப்
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
வெள்ளை எள் - 1 ஸ்பூன்
வறுத்த உளுந்து மாவு - 3 ஸ்பூன்
நெய் - சிறிதளவு
பொரிக்க எண் - தேவையான அளவு
செய்முறை
பச்சை அரிசியை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விடுங்கள். அதன்பின் லேசாக உலர்ந்த பின், மிக்சியில் போட்டு, நைசாக மாவை அரைத்துக் கொள்ளுங்கள். அந்த மாவினை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். நைசாக இருக்கும் மாவை கொஞ்சம் கொரகொரப்பாக வரும்வரை வறுக்க வேண்டும். அப்போது தான் சீடை பொரிக்கும்போது, வெடிக்காமல் இருக்கும். அதனுடன் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்து பொருள்களையும் மாவுடன் போட்டு, நன்கு பிசைந்து சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசையுங்கள். ஒரு ஈரத்துணியில், சிறிய பிள்ளையாரை ஓரமாகப் பிடித்துவிட்டு, பின் சிடை மாவை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். மாவை மிக அழுத்தி உருட்டக் கூடாது.
வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் சீடையைப் போட்டு பொரித்து எடுங்கள். மிதமான தீயில் வைத்து மொறுமொறுப்பாக எடுக்கவும். பொன் வறுவலாக பொரித்து எடுத்தால் மனமும் சுவையும் அதிகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











