For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உலகின் மாபெரும் ஆல்-டைம் இரகசியங்கள் - டாப் 5!

  By Staff
  |

  பல காலமாக உலகில் இரகசியமாக பார்க்கப்பட்டு வரும் விஷயங்கள் பலவன இருக்கின்றன. சிலவன அந்தந்த காலத்தில் மட்டும் இரகசியமாக காணப்பட்டிருக்கும். பிறகு யாரோ ஒருவரால், ஏதேனும் செயலால் அந்த இரகசியம் உடைப்பட்டிருக்கும்.

  Worlds Biggest Secrets of All Time

  Image Source: Google

  ஆனால், தொடர்ந்து நூற்றாண்டுகளாக யாராலும் அறியப்படாத இரகசியங்கள் என்று சிலவன இருக்கின்றன. உதரணமாக கூற வேண்டும் என்றால், இறப்பிற்கு பிறகான வாழ்க்கை, கோககோலா நிறுவனத்தின் ஃபார்முலா, ஹிட்லர் மறைவு போன்றவற்றை குறிப்பிடலாம்.

  இப்படி ஆல்டைம் உலகின் டாப் ஐந்து பெரும் இரகசியமாக கருதப்படும் விஷயங்களை குறித்து தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  இறப்பிற்கு பிறகு...

  இறப்பிற்கு பிறகு...

  இன்று வரை மனிதர்களால், மனித இனத்தால் கண்டறிய முடியாத விஷயம் இது. மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை பெரும்பாலான மதங்கள் நம்புகின்றன. நல்லவர்கள் சொர்கத்திற்கும், கெட்டவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள் என்று கருதுகிறார்கள். கலாச்சாரம், மதம் சார்ந்து என இந்த நம்பிக்கை மிகப்பெரிய அளவில் பரவிக் கிடக்கிறது.

  பாவ மன்னிப்பு

  பாவ மன்னிப்பு

  கொள்ளை அடிப்பவன், கொலை செய்பவனும் கூட பாவமன்னிப்பு கேட்பது, தான் நரகத்திற்கு சென்று விட கூடாது, சொர்க்கம் தான் தனக்கு வேண்டும் என்ற காரணத்தால் தான். அறிவியல் ரீதியாக மரணத்திற்கு பிறகான வாழ்க்கை என்பது ஒரு மாய பிம்பமாகவும், மதம் சார்ந்த நம்பிக்கையாக மட்டும் தான் காப்படுகிறதே தவிர, நிரூபணம் செய்யக்கூடிய அளவிலான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

  உயிர்?

  உயிர்?

  இதெல்லாம் மூட நம்பிக்கை என்று சிலர் கூறலாம். ஆனால், இறந்து, மீண்டும் பிறந்ததாக கூறியவர்கள் நிறைய பேர் இருகிறார்கள். தன்னை முன் ஜென்மத்தில் யார் கொலை செய்தார் என்பதை கண்டறிந்து கூறியதாக கூறப்படும் நபர்களும் நம்மிடையே தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

  உண்மையில் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை ஒன்று இருக்கிறதா? சொர்க்கம், நரகம் என்பது உண்மையா? உடல் சாகலாம்... உயிர் என்ன ஆகிறது? இதெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெரும் இரகசியமாக காணப்படுகிறது.

  கோககோலா ஃபார்முலா!

  கோககோலா ஃபார்முலா!

  கோககோலா உலகின் முன்னணி குளிர்பான நிறுவனம், நூற்றாண்டுகள் கடந்து இந்த துறையில் ஒரு முதன்மை நிறுவனமாக நீடித்து நிலைத்து வருகிறது. என்ன தான் உடல்நலத்திற்கு கேடு என்று உலகம் முழுக்க கூறினாலும் உலகம் முழுக்க பலதரப்பட்ட மக்களால் வேண்டி விரும்பி வாங்கி பருகப்படுகிறது கோககோலா. இதற்கு காரணம் அதன் ருசி.

  தவிர்த்து!

  தவிர்த்து!

  கோககோலாவின் ஃபார்முலா என்பது இன்று வரையிலும் கூட பெரிதும் யாராலும் அறிய முடியாதா இரகசியமாக தான் இருந்து வருகிறது. ஒருமுறை இந்தியாவில் ஒரு கம்பெனியை துவக்க முன்வந்த போது, அதன் ஃபார்முலா கேட்கப்பட்டதால்... அந்த முயற்சியை கைவிட்டு கோககோலா நிறுவனம் பின் வாங்கியதாகவும் சில தகவல்கள் பரவி வருகின்றன.

  இரண்டு பேர்!

  இரண்டு பேர்!

  கோககோலா நிறுவனத்திலேயே ஒருசில ஊழியர்களை தவிர வேறு யாருக்கும் கோககோலாவின் ஃபார்முலா குறித்து தெரியாது என்று நம்பப்படுகிறது. வெறும் இரண்டு ஆக்டிவ் ஊழியர்களுக்கு மட்டும் தான் அதன் உண்மையான ஃபார்முலா தெரியும். அதையும் உறுதிமொழி வாங்கிக் கொண்டு தான் கூறுவார்கள். அதை பாதுகாக்க வேண்டும், எந்த கட்டத்திலும் வெளியே கூறிவிட கூடாது எனது கட்டளையாக பின்பற்றப்பட்டு வருகிறதாம்.

  எச்.ஐ.வி / எய்ட்ஸ்!

  எச்.ஐ.வி / எய்ட்ஸ்!

  1980களில் இருந்து தீராத விவாத பொருளாக, தலைப்பாக இருந்து வருவது எச்.ஐ.வி எப்படி உருவானது என்பது தான். எங்கிருந்து, யாரால், எப்படி இந்த உயிர்கொல்லி வைரஸ் பரவியது.? இந்த கேள்விக்கு ஆதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் என்று எதுவும் இல்லை.

  ஒருசிலர் இந்த அபாயமான வைரஸ் ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து பரவியது என்று கூறுகிறார்கள். ஒருசிலர் இப்படி வைரஸ் உலகிலேயே இல்லை. இதை பரிசோதனை கூடத்தில் இருந்து சில ஆய்வாளர்கள் கண்டுபிடித்து பரப்பினர் என்றும் கூறுகிறார்கள்.

  திட்டமிட்ட சதி?

  திட்டமிட்ட சதி?

  எச்.ஐ.வி என்பது திட்டமிட்டு பரப்பட்ட ஒரு சதி காரியம். ஆனால், அதன் தாக்கம் இந்த அளவிற்கு பரவும் என்று யாரும் நமபவில்லை. இது மனிதர்களின் கைகளால் உருவானது என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் உலக நாடுகளின் மீது தொடுக்கப்படும் ஒருவகையான ஆயுதம் தான் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

  மேலும், ஒருசிலர், இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதை வெளியிடாமால் சதி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது எப்படி உருவானது என்பதும் இரகசியமாக இருக்கிறது, இதற்கான தீர்வு எனக் கூறப்படும் மருந்தின் கதையும் இரகசியமாக இருக்கிறது.

  ஹிட்லர்!

  ஹிட்லர்!

  ஏப்ரல் 30, 1945ம் நாள் அடால்ப் ஹிட்லர் தன்னை தானே, தான் பதுங்கி இருந்த பதுங்கு குழியில் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார் என்று நம்பப்படுகிறது. ஆனால், இது உண்மை தானா? நிஜமாகவே ஹிட்லர் இறந்தாரா? அல்லது திட்டமிட்டு பரப்பட்ட பொய்யா இது என்று பல கேள்விகள் இன்றளவும் ஹிட்லர் மரணத்தை சுற்றி பரவி கிடக்கிறது.

  போலி?

  போலி?

  எப்.பி.ஐ வெளியிட்ட ஒரு தகவலின் படி, ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் முடிவடையும் வரை உயிருடன் தான் இருந்தார். அவர் ஆண்டிஸ் மலைகள் உயிர் வாழ்ந்து வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

  ஹிட்லர் தனது மரணத்தை போலியாக உருவாக்கினாரா? உலகின் சக்தி வாய்ந்த மனிதன் அவ்வளவு எளிதாக ஜெர்மனியிடம் சிக்கும் வாய்ப்புகள் இருக்கிறதா? ஹிட்லரின் மரணம் உண்மையானதா, சித்தரிக்கப்பட்டதா? என்ற இரகசியம் எப்.பி.ஐ. கோப்புகளில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  ஏரியா 51!

  ஏரியா 51!

  உலகின் இரகசியங்கள், மர்மங்கள், விசித்திரங்கள், விநோதங்கள் என்று நீங்கள் எந்த பட்டியலிட்டாலும் அதில் இந்த ஏரியா 51 இடம் பெற்றிருக்கும். நெவாடா பாலைவனப்பகுதி அருகே ஏரியா 51 அமைந்திருப்பதாக அறியப்படுகிறது. இது ஒரு பெரிய சி.ஐ.எ இரகசிய இடமாக அறியப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்கா இதை உறிதி செய்யப்படாத விஷயமாக வைத்திருந்தது.

  சி.ஐ.எ

  சி.ஐ.எ

  கடைசியாக கடந்த 2013 ம் ஆண்டு தான் சி.ஐ.எ ஏரியா 51 இருப்பது உண்மை தான். இது அமெரிக்க விமானப்படைக்கு கீழ் இயங்கி வருகிறது என்று ஒப்புக் கொண்டது. இது மக்கள் பார்வையில் இருந்து மிகுந்த பாதுகாப்பில் இரகசியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

  ஏரியா 51 எனும் இடத்தில் என்ன நடக்கிறது. அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள். உலகில் தடை செய்யப்பட்ட பகுதியாக இது விளங்குவது ஏன்? அமெரிக்கா மக்களிடம் இருந்த இந்த தளத்தை ஏன் மறைத்து வைத்திருக்கிறது? என பல கேள்விகள் பதில் கிடைக்கப்படாமல் இருக்கிறது.

  வேவு!

  வேவு!

  2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் சி.ஐ.எ, இந்த தளம் 1955ல் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து தான் மிகவும் இரகசியமான ஏர்கிராப்ட் பிராஜக்ட்டான Aquatone பரிசோதனை செய்யப்பட்டது. இந்து ஏர் கிராப்ட் மூலம் தான், ரஷ்யாவின் அணுசக்தி குறித்து அறிய சோவியத் யூனியன் முழுவதும் வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

  ஆனால், இதற்காக மட்டும் தான் இந்த பகுதி இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதா? அல்லது இன்னும் வெளியுலகிற்கு தெரியாத பல அதிநவீன விஷயங்களை இப்பகுதி தன்னுள் அடக்கி வைத்துள்ளதா என்பது அமெரிக்காவிற்கு மட்டுமே வெளிச்சம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Worlds Biggest Secrets of All Time

  Here We gonnna see about all time biggest secrets of the world. This list contains coca cola's formula to how HIV spread-ed or found first time. Lets read.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more