For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உணவில் விஷம் வைத்து உறவினர்களை கொலை செய்த பெண்,போலீசை உறைய வைத்த காரணம்!

  |

  கோபம் மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சரியான உதாரணமாக இருக்கும். இன்றைக்கு ஒருவரை உருவத்தை சார்ந்து கிண்டலடிப்பது என்பது சர்வ சாதரணமாக நடக்கிறது. குறிப்பாக நிறத்தை வைத்து. அதை மையமாக கொண்டே பல விளம்பரங்கள் தயாரிக்கப்படுகிறது.

  அந்த விளம்பரங்களின் மூலமாகவும் கருப்பு நிறத்தையும் வெள்ளை நிறத்தையும் ஒப்பிடுவதும் வெள்ளை நிறம் தான் சிறந்து என்று தீர்பளிப்பதும் சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிற வேற்றுமை பெண்களின் திருமண சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் ஒரு விளைவைத்தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள்.

  இந்து மும்பையில் சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ரைகத் :

  ரைகத் :

  மகாராஸ்டிரா மாநிலம் ரைகத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த ஊர் மும்பையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இங்கு கடந்த வாரம் திடீரென்று சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அடுத்தடுத்து மக்கள் மருத்துவமனைகளில் சேர விஷயம் ஊரெங்கும் தீயாய் பரவியது.

  உடனடியாக போலீசார் களத்தில் இறங்கினர். ஊரில் எதாவது விஷக்காய்ச்சல் பரவுகிறதா என்ற சந்தேகம் தொற்றிக் கொள்ள சாதரண மக்களும் பயத்தில் உரைந்தனர்.

  Image Courtesy

  ஒற்றுமை :

  ஒற்றுமை :

  பொதுமக்களும் தங்களுக்கும் நோய்த் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும் என்றார்கள். இன்னொரு பக்கம், எதனால் ஒரே நேரத்தில் அத்தனை பேருக்கும் இந்த பாதிப்பு என்று விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இந்த நேரத்தில் தான் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் உறவினர்கள் என்பதும் கடைசியாக எல்லாரும் கிரகபிரவேச விஷேசத்தில் உணவு உட்கொண்டோம் அதிலிருந்து தான் இந்த பாதிப்பு என்று சொன்னார்கள்.

  கிரகப்பிரவேச வீடு :

  கிரகப்பிரவேச வீடு :

  போலீசார் கிரகப்பிரவேசம் நடந்த வீட்டிற்கு சென்றார்கள். 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வரவேற்றார். ஆம் நேற்று எங்கள் வீட்டில் விஷேசம் நடந்து. இன்னும் சாமன்கள் கூட எதுவும் எடுத்து வைக்கவில்லை அதற்குள் என்ன நடந்தது என்று புரியாமல் கேட்டார்.

  விஷேசத்திற்கு வந்த உறவினர்களுக்கு எங்கிருந்து உணவு வாங்கப்பட்டது? இங்கே சாப்பிட்ட 120 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றனர் போலீசார். ஒரு உறவினரின் பேரைச் சொல்லி இவர் மட்டும் தானே மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக சொன்னார்கள்.... அத்தனனை பேருமா என்று அதிர்ச்சியடைந்தவராய் நான் உடனே அவர்களை பார்க்க வேண்டும் என்றார். இங்கே தான் உணவை சமைத்தோம் வெளியிலிருந்து வாங்க வில்லை என்றார்

  Image Courtesy

  நாடகம் :

  நாடகம் :

  என்னை நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்களே.... அவர்களுக்கா இந்த நிலைமை என்று அழுது புலம்ப ஆரம்பித்தார். உணவு சமைத்த இடம், உணவு பரிமாறிய பாத்திரங்கள் எல்லாம் போலீசார் பார்வையிட்டனர். கெட்டுப்போன உணவு ஏதேனும் கலந்து விட்டதா? காய்கறிகளில் ஏதேனும் கெட்டப்போனவை இருந்ததா? எல்லாருக்கும் எங்கிருந்து தண்ணீர் கொடுக்கப்பட்டது, தண்ணீர் பிடித்து வைத்திருந்த பாத்திரம் கடைசியாக எப்போதும் சுத்தம் செய்யப்பட்டது என்று தொடர்ந்து கேள்விகளை கேட்டார்கள்.

  இது புது வீடு.... பழைய பொருட்கள் ஒரு சிலவற்றை தவிர பெரும்பாலும் எல்லாமே புதுப் பொருட்களாகத்தான் இருந்தது.

  பலி :

  பலி :

  இங்கே விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஐந்து பேர் வரை அடுத்தடுத்து மரணமடைந்து விட்டார்கள். விஷயம் சீரியசாகிவிட்டது உடனடியாக இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்கள்.

  எங்கே தவறு நடந்திருக்கிறது என்று எதுவும் புரியவில்லை. உணவில் தான் எதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் தெரியவரவே விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகளில் மிச்சமிருந்தவை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

  சந்தேகம் :

  சந்தேகம் :

  இறந்தவர்களின் இறுதி காரியங்கள் எல்லாம் முடித்த பிறகு ஆய்வு முடிவுகள் வெளியானது. அதற்குள்ளாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் எல்லாம் வீட்டிற்கு திரும்பினர். அதுவரையில் இன்னும் உயிர்பலி ஏற்படலாம் என்ற பயம் எல்லாருக்கும் இருந்தது.

  ஆய்வின் முடிவில் உணவில் அதிகப்படியான செடிகளுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதாக தெரியவந்தது. ஆக, யாரோ திட்டமிட்டு உணவில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருக்கிறார்கள். அன்றைக்கு சமைத்தவர்கள், உணவு பரிமாறியவர்கள் என அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தார்கள்.

  கைது :

  கைது :

  பல கட்ட விசாரணையில் எல்லாருடைய சந்தேகமும் அந்த வீட்டுப் பெண்,28 வயதுடைய அந்த பெண்ணின் மீது சந்தேகம் விழுந்திருந்தது. போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். முதலில் மறுத்து வந்த பெண் எங்கே தூக்கிலிட்டுவிடுவார்களோ என்று பயந்து உண்மையை சொல்லிவிடுகிறேன் என்று கெஞ்ச ஆரம்பித்தார்.

  தான் தான் இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டவர் அதற்கான காரணத்தை சொன்ன போது அனைவரும் உறைந்து போயினர்.

  காரணம் :

  காரணம் :

  எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. பிறக்கும் போதே சற்று மாநிரமாக இருப்பேன். என் கணவர் நல்ல நிறமாக இருப்பார். என்னை பெண் பார்க்க வரும் போதே என் புகுந்த வீட்டினர் நான் சற்று நிறம் குறைவாக இருக்கிறேன் என்பதற்காக வேண்டாம் என்றிருந்தனர். பின்னர் வேறு வழியின்றி என்னையே தேர்ந்தெடுத்தனர். திருமணமாகி வந்ததிலிருந்து நான் மாநிறமாய் இருப்பதை சுட்டிக் காட்டி என்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தனர். அதோடு என்னுடைய சமையலையும் தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டேயிருந்தனர்.

  மிகவும் கீழ்த்தரமாகவும் அவமானப்படுத்தும் வகையிலும் என்னை தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டேயிருந்ததால் கொல்ல முடிவு செய்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு உறவினர் இறந்துவிட்டார் என்றாராம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Women Murders Her Family Because of Silly Reason

  Women Murders Her Family Because of Silly Reason
  Story first published: Monday, June 25, 2018, 14:33 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more