Latest Updates
-
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்..
விமானப் பணிப்பெண்ணை சீண்டியவனுக்கு கிடைத்த சரியான தண்டனை! (வீடியோ)
தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற இளைஞனுக்கு தக்க பாடம் கற்பித்திருக்கிறார் விமான பணிப்பெண்
இத வெளிய சொன்னா உனக்கு தான் அசிங்கம் என்று தனக்கு நேர்ந்த அவலங்களை வெளியில் சொல்லக்கூடாது, பொறுத்துக் கொள் என்று சொல்லி வைக்கப் பழகி சமூகத்தாரிடம் இன்றைக்கு தைரியமாக ஆம், நான் பாதிக்கப்பட்டேன் அவன் தான் குற்றவாளி என்று சொல்ல முன் வந்திருக்கிறார்கள் பெண்கள்.
நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டியது, வரவேற்கவேண்டியது. ஏன் தெரியுமா? வெளியில் சொல்லமாட்டார்கள், நாம் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்கிற எண்ணத்திலிருந்து அவர்கள் வெளிவர வேண்டும். இது அவமானம் அல்ல, பாதிக்கப்பட்டவர் அவமானப்பட வேண்டியதில்லை தவறு செய்தவர்கள் தான் செய்த செயலைக் கண்டு கூனிக்குறுக வேண்டும் என்று எடுத்துச் சொல்ல இந்த ஒரு சம்பவம் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வேலைக்கு :
வேலைக்கு செல்லும் போதும், வரும் போதும், வேலை பார்க்கிற இடத்திலும் பெண்கள் எண்ணற்ற பாலியல் வன்கொடுமைகளை சந்திக்கிறார்கள். அதற்காகவே எல்லா அலுவலகங்களிலும் தனி அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
எல்லா நேரத்திலும் நம்மை காப்பாற்ற யாராவது ஒருவர் வருவார் என்று காத்துக் கொண்டிருக்க முடியாது நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

தண்டனை :
தன்னிடம் ஒருவன் அத்துமீறும் போது அதை அந்த இடத்திலேயே எதிர்த்து குரல் கொடுப்பதற்கு இன்று பல பெண்கள் முன்வந்திருக்கிறார்கள். காலை முதல் மாலை வரை வேலை பார்க்கும் அலுவலகத்தை விட தினம் தினம் பொதுமக்களை புதிய ஆட்களை சந்திக்கும் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். ஒவ்வொருவரும் எந்த கண்ணோட்டத்தில் தன்னிடம் அணுகுகிறான் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம்.
ஹைதிராபாத் விமானநிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.

பயணம் :
பிற நேரத்தை விட பயணங்களின் போது நிறைய அசௌகரியங்களை குறிப்பாக பாலியல் சீண்டல்களை பெண்கள் சந்தித்திருப்பார்கள். அது பேருந்து, ரயில், விமானம் என எந்த வித்யாசமும் இல்லாது எல்லா இடங்களிலும் பெண்கள் இது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.
விமான பயணம் என்பது பிற பயணங்களை விட சற்றே பதட்டம் நிறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். திடீரென்று விமானக் கோளாறு காரணமாகவோ அல்லது சூழல்,வானிலை காரணங்களுக்கு விமானம் நிறுத்தப்படும். இமிகிரேசனை தாண்டி விமானத்திற்குள் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பயணிகளுக்கு மட்டுமல்ல விமானத்தில் செல்லக்கூடிய பணிப்பெண்கள் உட்பட அதில் பணிபுரிபவர்கள் எல்லாருக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கிறது.

விமான பணிப்பெண் :
ஹைதிராபாத்தில் இருக்கக்கூடிய ராஜிவ் காந்தி விமான நிலையத்தி இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் பார்க்கிங் ஏரியாவிலிருந்து விமான நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்.
பிற பயணிகள் அல்லது விமானநிலையத்திற்கு வந்த வேறு யாராவதாக இருக்கும் என்று நினைத்து தன்னுடைய காலை ஷிப்டின்னை பதிவு செய்வதற்காக வேகமாக நடந்து கொண்டிருந்தார்.

சீண்டல் :
ஆனால் அந்த இரண்டு இளைஞர்கள் தன்னை பின் தொடர்ந்து தான் வருகிறார்கள் என்பதை யூகித்து, சற்று திரும்பி ப்ரீ பெயிட் டாக்சி கவுண்டருக்குச் செல்லும் மாற்று வழியில் சென்றார். நினைத்தது போலவே அந்த இரண்டு இளைஞர்களும் பின்னாலேயே வந்து விட்டார்கள்.
லேசாக பயம் தொற்றிக் கொண்டது அந்த பெண்ணிற்கு அவர்கள் அதோடு விட்டார்களா? மோசமான கமெண்ட்களை வீசினர் அதோடு மேலே வந்து இடிப்பது போல அந்த பெண்ணின் மேல் தடுமாறி விழுவது போலவே வந்தார்கள்.

புகார் :
அந்த பெண் சிறிதும் தாமதிக்கவில்லை உடனேயே அங்கு நின்றிருந்த டிராபிக் போலீசிடம் முறையிட்டார். உடனே அந்த போலீஸ் அந்த இரண்டு இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்தில் இருந்த காவல்கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்றார்.
அங்கே விசாரணை நடத்தப்பட்டது அப்போது அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் குடித்திருப்பது தெரியவந்தது.

மன்னிப்பு :
போலீஸ் வந்ததுமே பயந்த அந்த இளைஞர்கள் தாங்கள் சீண்டிய விமானப்பணிப்பெண்ணிடம் மன்னித்து விடும்படியும் தங்களை விட்டும்படியும் கெஞ்சியிருக்கிறார்கள். இனிமேல் இது போன்று தவறு நடக்காது என்று சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரிகளும் அந்த இளைஞர்களை மிரட்டிய நிலையில், அந்தப் பெண் ஒரு முடிவுக்கு வந்தார்.

காலில் விழு :
இனிமேல் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி காலில் விழு.... காலில் விழுந்து மன்னிப்புக் கேள் என்றிருக்கிறார் அந்தப் பெண். முதலில் தயங்கியவன் சற்று தள்ளி நின்று கொண்டு மன்னித்து விடுங்கள் மன்னித்துவிடுங்கள் என்று மட்டும் சொல்லியிருக்கிறான்.
ஆனால் அந்தப் பெண் விடுவதாய் இல்லை. காலில் விழு... காலில் விழுந்து மன்னிப்புக் கேள், குனி என்று தொடர்ந்து சொல்ல அந்த இளைஞன் வேறு வழியின்றி அருகில் வந்து கீழே குனிந்திருக்கிறான். அப்போதும் காலைத் தொடு என்று அந்தப் பெண் கட்டளையிட்ட பிறகு அதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் அந்தப் பெண் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
வீடியோ :
சுற்றிலும் அதிகாரிகள், போலீஸ் நிற்க அந்த விமானப் பணிப்பெண் அந்த இளைஞனிடம் காலில் விழு என்று கட்டளையிடுவதும் அதற்கு அந்த இளைஞன் தயங்கிக் கொண்டே காலில் விழும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்ட சமூகவலைதளங்களில் எல்லாம் பரவியிருக்கிறது.
அந்த இரண்டு இளைஞர்களும் மாணவர்கள் என்பதாலும், அவர்களின் எதிர்காலம் கருதியும் அந்தப் பெண் மன்னித்து விட்டிருக்கிறார். அந்த இளைஞர்கள் மீது எழுத்துப்பூர்வமான எந்த புகாரும் அளிக்கவில்லை. இதனால் விமான நிலையத்திலிருந்து சில மணி நேரங்களில் அந்த இளைஞர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்கள்.



Click it and Unblock the Notifications