For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குண்டாக இருப்பதினால் இப்படியெல்லாம் பிரச்சனையா?

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் ரோட்டில் நடந்து சென்றால் அவர்கள் எத்தகைய விமர்சனங்களை கடக்கிறார்கள் என்பதற்கு பெண் போட்டோகிராபர் ஒருவர் செய்த ப்ராஜெக்ட்

By Staff
|

உடல் எடைன் அதிகமாக இருப்பது குறித்த பயம் எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது, அவை உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை கொண்டுவரும் என்பதைத் தாண்டி தன்னை ஏளனம் செய்வார்களே என்ற பயமும் கவலையும் ஒரு காரணமாக இருக்கத்தான் செய்கிறது.

ஒவ்வொருவரின் உணவுப்பழக்கம் வாழ்க்கை முறை போன்ற காரணங்கள் தான் ஒருவரது எடையை நிர்ணயம் செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த உடல் எடை விஷயத்தில் உங்களது ஜீன் முக்கியமான பங்காற்றுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

Women Do Project To Catch a Wait Watchers

சில நேரங்களில் உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீன் காரணமாகவும் உடல் எடையில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் தெரிந்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்த சமூகம் :

இந்த சமூகம் :

நாம் எதைச் செய்தாலும் அது நல்லதாக இருந்தாலும் சரி,தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும் சரி, எதாவது விமர்சித்துக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொன்றையும் கவனத்தில் கொண்டு நம்முடைய நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டும் அவர்களை திருப்திபடுத்த முயன்றால் நீங்கள் துவங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டியது தான்.

 வெயிட் வாட்சர்ஸ் :

வெயிட் வாட்சர்ஸ் :

நாம் சாலையில் சென்று கொண்டிருக்கிறோம், அப்போது குண்டான நபர் ஒருவர் நம்மைக் கடந்து செல்கிறார் என்றால் என்ன செய்வீர்கள்? ஒரு கணம் வெறித்து வைத்தக்கண் வாங்காமல் அந்த நபரையே விசித்திரிமாக பார்த்திருக்கிறீர்களா?

கடந்த கால நினைவுகளை புரட்டுகளையில் நிச்சயம் இப்படியான சம்பவங்களை நினைவுகூரலாம். நம்மையும் அறியாமல் குண்டான நபர் மீதான பார்வை நமக்கு அப்படித்தான் இருக்கிறது.

போட்டோகிராபர் :

போட்டோகிராபர் :

போட்டோகிராபரான ஹாலி மோரிஸ் கேஃபிரோ தனக்கு அசௌகரியம் கொடுத்த இடங்கள் குறித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு பல இடங்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.

அடுத்த ப்ராஜெக்ட் :

அடுத்த ப்ராஜெக்ட் :

அப்படி சில இடங்களில் புகைப்படங்கள் எடுக்கச் சென்றபோது தான் இந்த ப்ராஜெக்ட் கிடைத்திருக்கிறது, இயல்பிலேயே சற்று பருமனாக இருந்த ஹாலியை பலரும் விசித்திரமாக வேடிக்கை பார்க்க இதையே ஏன் எடுக்கக்கூடாது என்று முடிவுக்கு வந்தார்.

வெயிட் வாட்சர்ஸ் என்று பெயிடப்பட்ட அந்த ப்ராஜெக்டில் ஹாலி பொது இடத்தில்,மக்கள் கூடியிருக்கக்கூடிய இடத்தில் மிகச் சாதரணமாக தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அல்லது ஏதேனும் போட்டோவுக்கு போஸ்கொடுக்கிறார். ஆனால் பின்னாலிருக்கும் மக்கள் ஹாலியை ஏளனப்பார்வையுடன் பார்க்கிறார்கள்.

2010 :

2010 :

2010 ஆம் ஆண்டு டைம்ஸ் சதுக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்த போது தனக்கு பின்னால் நின்றிருந்த நபர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தார்.

இது போல பல முறை தன்னுடைய உருவம் குறித்து கமெண்ட்களை வீசியிருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாது என்னுடைய வேலையை தொடர்ந்து கொண்டிருப்பேன்.

ஐடியா! :

ஐடியா! :

முதலில் மக்கள் அதிகம் கூடியிருக்கக்கூடிய ஒரு பொது இடம், அங்கே மிகச் சாதரணமான உடையில் தன்னை கேண்டிட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். முதலில் ட்ரைபேடை குறிப்பிட்ட இடத்தில் செட் செய்துவிட்டு, சற்றுத்தள்ளி உட்கார்ந்து போன் பேசுவது, ஐஸ்க்ரீம் சாப்பிடுவது என்று தன் வேலையை ஆரம்பித்துவிடுவார்.

அந்த இடத்திற்கு தகுந்தாற் போல உடையோ மேக்கப்போ இருக்காது, பிறரை ஈர்க்கும் வகையில்,தன் பக்கம் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் எந்த செயலும் அங்கே நடக்காது.

வரவேற்பு :

வரவேற்பு :

அதனை புத்தகமாக வெளியிட ஹாலிக்கு பயங்கர வரவேற்பு. கூடுதலாக உடற்பயிற்சி செய்யச் சொல்லியும், இப்படியான உடையை அணிந்து கொள்ளுங்கள், மேக்கப் செய்து கொள்ளுங்கள் இதனால் தற்போது பார்த்தது போல உங்களை பார்க்கமாட்டார்கள் என்று ஏகப்பட்ட அட்வைஸ் வேறு.

மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இம்முறை மக்களின் ரியாக்‌ஷனை ஹைலைட் செய்து படம் பிடிக்கத் துவங்கினார்.

ஹைப்போ தைராய்டு :

ஹைப்போ தைராய்டு :

எனக்கு ஈட்டிங் டிஸ்ஸார்டர் இருக்கிறது அதோடு ஹைப்போதைராய்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய உடல் நிலை குறித்து எனக்குத் தெரியும், இது யாரையும் கோபப்படுத்த வேண்டுமென்று எடுக்கவில்லை, நானும் வருத்தப்பட்டவில்லை, இந்த சமூகத்தின் பார்வை எப்படியிருக்கிறது என்பதை அறிய மட்டுமே இந்த யுக்தி என்கிறார் தீர்க்கமாக.

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Women Do Project To Catch a Wait Watchers

Women Do Project To Catch a Wait Watchers
Story first published: Wednesday, February 21, 2018, 15:57 [IST]
Desktop Bottom Promotion