Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
ஃபிபா உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது ஏன்?
ஃபிபா உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது ஏன்?
ஒலிம்பிக்ஸ், ஃபிபா, உலகக் கோப்பைப் போட்டிகள் என சில சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால், என்றாவது ஏன் இந்த போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நடத்தப்படுகிறது. இரண்டாண்டுகள், மூன்றாண்டுகள் அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தினால் என்ன? எந்த காரணத்திற்காக இந்த நான்காண்டு இடைவேளை இவர்கள் பின்பற்றுகிறார்கள் என நீங்கள் யோசித்தது உண்டா?
'யோசிச்சிருக்கேன்... ஆனா, சரியான பதில் எதுவும் கண்டுபிடிக்க முடியல...' என்று கூறும் நபரா நீங்கள்...? இதோ! அதற்கான காரணங்களாக அறியப்படும் சில விஷயங்களை இந்த தொகுப்பில் காணலாம்...

பாரம்பரியம்!
ஒலிம்பிக் போல கால்பந்தாட்ட உலகக்கோப்பை நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது ஏன்?
பண்டைய கிரேக்க வரலாற்றில் ஒலிம்பியாட் என்பது நான்கண்டு காலத்தை குறிப்பது ஆகும். எனவே, ஒலிம்பிக் விளையாட்டு நான்காண்டுகள் நடைப்பெற்றது என்பதற்காக போட்டியாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறதா? என்றால்... இல்லை.
இது போட்டியாக இல்லை. ஆனால், அந்த பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில், கால் பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளையும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தினார்கள் என கூறப்படுகிறது.

லாஜிஸ்டிக்ஸ்
ஒலிம்பிக் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை பின்பற்றி வருவதால் தான் கால்பந்தாட்ட உலகக் கோப்பை நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என்றால்.. அது மட்டும் காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை குறைவு. ஆகவே, உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளும் குறுகிய காலக்கட்டத்திற்குள் நடத்திவிட முடியும்.

தகுதிச்சுற்று!
ஆனால், கால்பந்தாட்ட விளையாட்டில் அப்படி இல்லை. உலகின் பெரும்பாலான நாடுகளை சேர்ந்த அணிகள் ஃபிபா உலகக் கோப்பைப் போட்டியில் பங்குபெற முன்வருகின்றன. எனவே, தகுதிச்சுற்று போட்டிகள் மட்டுமே உலகக் கோப்பை போட்டிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற துவங்கிவிடுகிறது. கண்டங்கள் சார்ந்தும், சிறுசிறு நாடுகளுக்கு எல்லாம் தனியாக என இந்த தகுதிச்சுற்று போட்டிகள் நடைப்பெறுகின்றன.

கௌரவம்!
உலகக் கோப்பை போட்டிகள் என்பது கௌரவமாக காணப்படும் நிகழ்வு. நீண்ட போட்டிகள், கடின பயிற்சிகள் என போராடி வெல்லும் அந்த சாம்பியன் பட்டதை குறுகிய காலத்தில் அடுத்தடுத்து நடத்தினால், கால்பந்தாட்ட வீரர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் கூடவே கோபம் வரத்தான் செய்யும்.

அவமானம்?!
அதிலும், முக்கியமாக கால்பந்தாட்டம் என்பது உலகின் கௌரவமான விளையாட்டாகவும் கருதப்படுகிறது. இதில், தோல்வி அடைந்தால் நாட்டிற்கே அவமானம் என கருதும் நாடுகளும் சில இருக்கின்றன.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை என்பது கௌரவமாகவும், அதை கொண்டாடுவத்ற்குமான காலக்கட்டமாகவும் காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications