Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
திருமணமான முதல் 5 நாள், மருமகளை நிர்வாணமாக அமர வைக்கும் வினோத சடங்கு!
இந்தியாவின் இப்பகுதியில் முதல் 5 நாள் மருமகளை நிர்வாணமாக அமர வைக்கும் வினோத பழக்கம்!
இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ந்துக் கொண்டே வருகிறது. நிலாவில் பெரும் ஆராய்சிகள் நடக்கின்றன. கூடிய விரைவில் வல்லரசு நாடாகிவிடும் என இந்தியாவின் ஏறுமுகத்தை பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னும் பல மாநிலங்களில் பழங்குடி மழைவாழ் மக்கள் மத்தியில் சில பழமையான, விசித்திரமான சடங்கு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

Image Source: Google
பழமைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால், அறிவியல் வளர்ந்த பிறகு கண்மூடி தனமாக வெறுமென காரண, காரியமே இல்லாமல் சில மோசமான சடங்குகளை பின்பற்றுவதை தான் திருத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் இருக்கும் ஒரு பழங்குடி மலைவாழ் மக்கள் மத்தியில் இன்றளவும் பழக்கத்தில் பின்பற்றப்படும் வினோதமாக கருதப்படும் ஒரு சடங்கினை பற்றி தான் இந்த தொகுப்பினில் காணவிருக்கிறோம்...

பழங்குடியினர்!
ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு மலைவாழ் பழங்குடியினர் மத்தியில், ஒரு சடங்கு முறை இன்றளவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதை யாராலும் கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆம்! திருமணமான நாளில் இருந்து முதல் ஐந்து நாட்கள் மணப்பெண் நிர்வாணமாக வீட்டில் இருக்க வேண்டும்.

வினோதம்!
இதுவரை நாம் அறிந்ததில், படித்ததில் இது மிகவும் வினோதமான சடங்காக இருக்கிறது. மிக நீண்ட காலமாக இந்த சடங்கு முறையை ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அந்த மலைவாழ் பழங்குடியினர் பின்பற்றி வருகிறார்கள் என கூறப்படுகிறது.

குக்கிராமம்!
ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த சடங்கை பின்பற்றி வரும் அந்த பழங்குடியினர் ஒரு குக்கிராமத்தில் வசித்து வருகிறார். இங்கே இன்றளவிலும் திருமணம் முடித்த புதுப்பெண் முதல் ஐந்து நாட்கள் கணவன் வீட்டில் நிர்வாணமாக ஒரு அறையில் தங்க வேண்டிய சடங்கு முறை பின்பற்றப்படுகிறது.

தடை!
புதுமணப்பெண் நிர்வாணமாக இருக்கும் அந்த ஐந்து நாட்களில் கணவன் - மனைவி இடையே தாம்பத்தியம் குறித்தோ, ரொமான்ஸ் சார்ந்த பேச்சுக்களோ இருக்கவே கூடாது.
ஏன், அந்த ஐந்து நாட்களில் புதுமண தம்பதியினர் உடல் ரீதியான உறவில் இணையவோ ஒருவரை ஒருவர் தொட்டு கூட பேச கூடாது என்றும் அறியப்படுகிறது.

நம்பிக்கை!
ஹிமாச்சல பிரதேசத்தின் அந்த குக்கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் பழங்குடி மக்கள் இந்த சடங்கின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த சடங்கு நல்லப்படியாக முடிந்து விட்டால், கணவன் - மனைவி உறவில் ஒரு கட்டுப்பாடு இருக்கும். அந்த திருமண வாழ்க்கை ஒருபோதும் தோல்வியில் முடியாது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கேடு!
ஒருவேளை யாரேனும் ஒரு புதுமண தம்பதியர் அந்த ஐந்து நாட்களில் புதுமணப்பெண் நிர்வாணமாக இருக்கும் போது தொட்டு பேசி விட்டாலோ, அல்லது உறவுக் கொண்டு விட்டாலோ, அது அந்த கிராமத்திற்கு கேடு விளைவிக்கும் அல்லது பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என்று அந்த மலைவாழ் பழங்குடியினர் நம்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications
