மிகவும் விசித்திரமான சாலை விதிமுறைகளை பின்புற்றும் நாடுகள்!

Posted By:
Subscribe to Boldsky

தமிழ்நாட்டில் சாலையோரத்தில் நின்று 100ரூபாய் லஞ்சம் கேட்கும் போலீசாரை நிறைய பார்த்திருப்போம். அதோடு ஹெல்மோட் போடாததால் ஒரு இளைஞனை தாய் கண் முன்னே மூன்று போலீசார் சேர்த்து அடித்த வீடியோ சில தினங்களுக்கு முன்னர் சமூகவலைதளங்களில் மிக வேகமாக பரவி வந்தது.

சாலையில் பயணிப்பதே பெரும் சவாலான பணியாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்து வருத்தப்படுவர்களுக்கு இங்கே சில தகவல்களை கொடுத்திருக்கிறோம். சாலையில் செல்லும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று சொல்லி ஒரு பெரிய புத்தகத்தையே கொடுக்கிறார்கள்.

பல விஷயங்களை இதெல்லாம் சட்டத்திற்கு புறம்பானது என்று சொல்லி ஒதுக்கியும் வைத்திருக்கிறார்கள். இங்கு போல ஒரு சில காரணமல்ல எக்கச்சக்கமான காரணங்களை பட்டியல்லிட்டு ஓட்டுநரை கதிகலங்க வைக்க முடியும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜப்பான் :

ஜப்பான் :

லேசாக மழை விழுந்தால் நம்மவூர் சாலைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். காரில் பயணிப்பவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டு போவார்கள்.

ஆனால் ஜப்பானில் இது சாத்தியமல்ல. ஏன் தெரியுமா? சாலையில் நடந்து சென்று கொண்டிருப்பவர்கள் மீது வண்டியில் செல்வோர் தண்ணீரை வாரி இறைத்தால் அது சட்டப்படி குற்றம்.

Image Courtesy

சீனா :

சீனா :

சீனாவில் நடந்து செல்பவர்களை சற்று மரியாதைக் குறைவாகத்தான் பார்க்கிறார்கள். பாதசாரிகளுக்காக வண்டியை நிறுத்தக் கூடாது. சீனாவில் சாலையை கடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல அதனாலேயே பெரும்பாலும் கூட்டம் சேருகிற வரை காத்திருந்து குறைந்தது பத்து பேர் வரையாவது சேர்ந்த பின்னர் தான் சாலையை கடப்பார்களாம்.

Image Courtesy

தென்னாப்பிரிகா :

தென்னாப்பிரிகா :

தென்னாப்பிரிகாவில் மனிதர்களுக்கு கொடுக்கிற அதே மரியாதையை விலங்குகளுக்கும் கொடுக்கிறார்கள். சாலையில் செல்லும் போது மனிதர்களை விட விலங்குகள் ஏதேனும் சாலையில் செல்கிறதா என்பதையும் கவனித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

விலங்குகள் அடிக்கடி வரும் வழியென்றால் மெதுவாகத்தன செல்ல வேண்டும். மாறாக சாலையில் தான் எந்த விலங்கும் இல்லையே என்று வேகமாகச் சென்றாலும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

Image Courtesy

ஜெர்மனி :

ஜெர்மனி :

ஜெர்மனியில் நம்ம ஊர் ஹை வேஸ் போல வேகமாக செல்லக்கூடிய வாகனங்கள் செல்வதற்கென்றே ஒரு வழித்தடத்தை அமைத்திருக்கிறார்கள். அதற்கு ஆட்டோபஹ்ன் என்று பெயர். இந்த வழியாக செல்ல வேண்டுமென்றால் ஒரே விதி அதி வேகமாக செல்ல வேண்டும்.

ஆம் இதில் செல்லக்கூடிய வாகனங்கள் எல்லாம் ஹை ஸ்பீடில் செல்ல வேண்டும். மெதுவாக செல்லும் வாகனங்கள், அதிக சுமை ஏற்றியிருக்கும் வாகனங்கள் இதன் வழியாக செல்ல அனுமதிக்கப்படாது. இன்னொரு முக்கியமான விஷயம் இதன் வழியே செல்லும் போது நீங்கள் வண்டியை நிறுத்துவதோ அல்லது ஸ்லோ செய்வதோ கூடவே கூடாது. வண்டி கோளாறு ஏற்பட்டு நடுவில் நின்றாலும் அதற்கும் அபராதம் விதிப்பார்களாம்.

வண்டிகள் செல்லும் வேகத்திறனைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்றும் இது குறித்து பேச்சு எழுந்திருக்கிறது.

Image Courtesy

தாய்லாந்து :

தாய்லாந்து :

அது இரு சக்கரமோ, நான்கு சக்கரமோ அதில் பயணிப்பவர்கள் எல்லாம் உரிய ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ஆண், பெண் குழந்தைகள் என யாராக இருந்தாலும் சரி. முக்கியமாக மேலாடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

Image Courtesy

 இத்தாலி :

இத்தாலி :

இத்தாலியில் இருக்கிற வரலாற்று புரதான இடங்களில் பயணிக்க சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான விதிகள் விதிக்கப்படும். இந்த நேரத்தில் இவ்வளவு வாகனங்கள் தான் செல்ல வேண்டும் என்று வரையறுத்து தான் வாகனங்களை அனுப்புகிறார்கள். அதற்காக முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியது அவசியம்.

Image Courtesy

 டென்மார்க் :

டென்மார்க் :

டென்மார்கில் நீங்கள் காரை கிளப்புவதற்கு முன்னால் குனிந்து வீல்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதை ஒரு பழக்கமகவே தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.

கார் எடுப்பதற்கு முன்னால் சக்கரத்துக்கு அடியில் விலங்குகளோ அல்லது குழந்தைகளோ சிக்கியிருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும் என்பது அங்கே கட்டாயமாக்கப்பட்ட ஓர் விதியாம்

Image Courtesy

ரஷ்யா :

ரஷ்யா :

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இந்த சட்டம் இருக்கிறது அதாவது உங்களுடைய கார் சுத்தமாக இருக்க வேண்டும். கார் சுத்தமாக இல்லையென்றாலும் அதிகாரி உங்களிடம் அபராதம் விதிப்பார். காரின் சுத்தத்திற்கு எந்த வரையறையும் இல்லை என்பதால் பயணிப்பவர்களின் கதி திண்டாட்டம் தான்.

ஆரம்பத்தில் குளிர் காலங்களில் லைசன்ஸ் கண்ணில் படும்படி வைக்க வேண்டும் என்பதற்காக இந்த விதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. மெல்ல காரை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று வந்து நின்றிருக்கிறது. அதுவும் உங்களது வீட்டிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கார் வாஷ் செய்யப்படுகிற இடத்தில் மட்டும் தான் காரை சுத்தம் செய்ய வேண்டுமாம்!

Image Courtesy

காஸ்டா ரைகா :

காஸ்டா ரைகா :

வண்டி ஓட்டும் போது பீர் குடிக்கலாம். ஆனால் அது அளவுக்கு மீறி போய்விடக்கூடாது. நடுவில் போலீசார் சோதனையிடும் போது உங்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.75 சதவீதத்திற்குள் இருக்கலாம். இதைத் தாண்டி ஒரு புள்ளி அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு நேராக சிறைத்தண்டனை தான். எச்சரித்து அனுப்புவதோ, அபராதம் விதிப்பதோ எல்லாம் இல்லை .

Image Courtesy

 ஸ்காண்டிவியா :

ஸ்காண்டிவியா :

இங்கே எந்த நேரத்தில் வண்டியை சாலையில் ஓட்டினாலும் வாகனத்தின் ஹெட் லைட் எரிய வேண்டும்.இது அந்த ஊரில் வாகனம் ஓட்டுவோர் வாகனங்களை அவதானதித்துச் செல்ல உதவும் என்பதால் இப்படியொரு விதி உருவாக்கப்பட்டதாம்.

Image Courtesy

ஸ்பெயின் :

ஸ்பெயின் :

ஸ்பெயின் நகரத்தில் இருக்கும் சில குடியிருப்பு பகுதிகளில் குறிப்பிட்ட வீட்டிற்கு அருகில் தான் நீங்கள் வாகனங்களை நிறுத்த முடியும். அங்கே பார்கிங் என்றோ நோ பார்கிங் என்றோ போர்டு எதுவும் இருக்காது.

பின் வாகனம் நிறுத்துமிடத்தை எப்படி கண்டுபிடிப்பார்கள் தெரியுமா? அந்த வீட்டின் கதவு எண்ணை வைத்து தான். அந்த வீட்டின் எண் இரட்டைப்படை எண்ணாக இருந்தால் நீங்கள் வாகனங்களை நிறுத்தலாம். ஒற்றைப்படை எண் என்றால் நிறுத்தக்கூடாது.

Image Courtesy

மணிலா :

மணிலா :

மணிலாவில் ஏற்படுகிற கடுமையான ட்ராஃபிக்கினைத் தொடர்ந்து இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கலர் கோடிங் என்று இதனை அழைக்கிறார்கள். அதாவது இந்தந்த நிறம் கொண்ட வாகனம் இந்த சாலையில் குறிப்பிட்ட நேரத்தில் தான் பயணிக்க வேண்டும். வண்டி எண் 1 என இருப்பவர்கள் காலை ஏழு மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே இந்த சாலையில் செல்ல அனுமதி.

இப்படி சாலையில் வாகனத்தின் எண்ணிக்கையை குறைக்க சட்டங்கள் இயற்றியிருக்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Weird Driving Rules Around the World

Weird Driving Rules Around the World
Story first published: Friday, April 6, 2018, 17:31 [IST]