Latest Updates
-
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்த வாரத்தில் எந்தெந்த ராசிக்கு என்னென்ன நடக்கப்போகிறது?... (7.5.18 முதல் 13.5.18 வரை)
இன்று முதல் உங்கள் ராசிக்கு இந்த வாரம் முழுவதும் ராசிக்கான பலன் எப்படி இருக்கும் ,
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். ஒவ்வொரு நாளின் பலன் சில குறிப்பிட்ட தினங்கள் வரை நீடிக்கும். அப்படி இந்த வாரம் முழுக்க 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் உண்டாகப் போகின்றன என்று பார்ப்போம்.

மேஷம் -
பொருளாதாரத்தை மேம்படுத்த பல புதிய முயற்சிகளை இந்த வாரத்தில் செய்வீர்கள். மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்புகள் உயரும். நண்பர்களுடைய ஆதரவால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையால் லாபத்தை பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்க துணிவீர்கள். நவகிரகங்களில் ஒன்றான புதனை வழிட்டால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்
மாணவர்கள் எதையும் சற்று கவனத்துடன் கையாள வேண்டும். புதிய உறவுகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாமீன் போடுவதை தவிர்த்திடுங்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வந்தால் சுபிட்சம் உண்டாகும்.

மிதுனம்
நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு, மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்த்திடுங்கள். பணி விஷயங்களில் கால தாமதம் உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டியிருக்கும். நிறைய புதிய இனுபவ நுட்பங்களை பெறுவீர்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

கடகம்
புதிய வேலைக்கான அஸ்திவாரத்தைப் போடுவீர்கள். வெளியிடங்களில் எதிர்பார்த்து காத்திருந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணம் குறித்த பேச்சுவார்த்தைகளில் சுபமான முடிவுகள் உண்டாகும். பொருளாதார மேம்பாடு உண்டாகுமு். நண்பர்களால் நன்மை நடக்கும். துர்க்கையை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்
நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். புனித யாத்திரைகள் செல்வதற்கான சூழல்கள் உண்டாகும். நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வந்த பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் நிதானமாகவும் அனுசரிப்புடனும் நடந்து கொள்வது நல்லது. தொழிலுக்காக எதிர்பார்த்த இடங்களில் கடனுதவிகள் கிடைக்கும். தினமும் காலையில் கந்த சஷ்டி சகவம் படித்து வர உறவுகளுக்கிடையே மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி
தொழிலில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் குழந்தைகள் மூலம் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். வேலையில் இழுபறி நிலை உண்டாகும். பெரியவர்களிடம் கனிவுடனும் அனுசரணையுடனும் நடந்து கொள்ளுங்கள். புதிய நபர்களை வேலைக்கு அமர்த்தும்போது நன்கு விசாரித்து செய்யுங்கள். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எவ்வளவு சிரமங்கள் வந்து போனாலும் உங்களடைய திறமைக்கு ஏற்ற லாபம் நிச்சயம் கிடைக்கும். சிவனை வழிபட்டு வருவது மேன்மையைத் தரும்.

துலாம்
தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். வாகனப் பயணங்களில் கவனமாக செயல்பட வேண்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புண்ணிய காரியங்களில் கலந்து கொள்வீர்கள். கடன்காரர்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் குறையும். வெள்ளிக்கிழமை தோறும் அஷ்ட லட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம்
உடன் பிறந்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் உண்டாகும் இழுபறியால் கவலைகள் தோன்றும். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். செய்யும் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவால் லாபம் உண்டாகும். முயற்சிகள் பலிக்க சற்று கால தாமதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுய தொழில் மேற்கொள்ள சாதகமான சூழல் உண்டாகும். தினமும் பிள்ளையாரை வழிபட்டு வந்தால் கஷ்டங்கள் பனிபோல விலகும்.

தனுசு
குடும்ப உறவினர்களிடம் கொபத்தை தவிர்த்து, நிதானமாக நடந்து கொள்ளுங்கள். நண்பர்கள் மூலம் வீண் செலவுகள் வந்து சேரும். புதிய நபர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையுடன் பழகுங்கள். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை வழி உறவினர் வழி நன்மைகள் உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியை தேடித்தரும்.

மகரம்
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் போதிய அங்கீகாரம் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் நலத்தில் ஆரோக்கியம் செலுத்த வேண்டும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்யுங்கள். கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். நந்தியை வழிபடுங்கள். கவலைகள் நீங்கும்.

கும்பம்
வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சொத்து விஷயங்களில் கவனமாக இருங்கள். அலைச்சல்களின் காரணமாக சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் சேமிப்புகள் கிடுகிடுவென உயரும். தொழில் அபிவிருத்திக்காக குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரிகளிடம் கொஞ்சம் மனக்கசப்புகள் வந்து போகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். விஷ்ணு வழிபாட்டை மேற்கொண்டால் செல்வ வளம் பெருகும்.

மீனம்
வீடு, மனை வாங்குவதற்கு சரியான நேரம் இது. குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். தனலாபம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறந்த பணிவாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களின் அமோக ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். பொன் மற்றும் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் தானாக வந்து சேரும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.



Click it and Unblock the Notifications