For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடு ஆடி மாசம் எந்தெந்த ராசிக்கு நடுநிலையாக இருக்கும்? யாருக்கு உச்சம் உண்டாகும்?

வார ராசிபலன்கள் 30.7.18 to 5.8.18 வரை இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். அதிலும் ஆடி மாதத்தின் நடுப்பகுதி என்னென்ன நன்மைகளை தரப்போகிறது என பார்க்

|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

astrology

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 30.7.18 to 5.8.18 வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வெளி வட்டாரங்களில் உங்களுடைய மரியாதை உயர ஆரம்பிக்கும். புதிய வேலைகளுக்கான முயற்சிகள் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எந்த காரியமாக இருந்தாலும் அதை திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்துவீர்கள். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தாய்வழியிலான உறவுகளில் சுமூகமான நிலை உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இடத்திலிருந்து பண வரவு உங்கள் கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதமாகலாம். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரங்களில் இருநு்து வந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். திடீர் என்று உங்களுக்கு உண்டாகும் யோகத்தால் வெளியூா் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடவுள் ராகவேந்திரரை வழிபடுங்கள். நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்களுடன் பிறந்த சகோதரர்கள் மூலம் உங்களுடைய பலம் அதிகரிக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த ஒற்றுமை அதிகரிக்க ஆரம்பிக்கும். நண்பர்களின் வாயிலாக வருமானங்கள் உயர ஆரம்பிக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தொழிலில் பங்குதாரருடைய முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். பொழுது போக்குகளில் ஈடுபடும்போது கூட கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். மகா விஷ்ணுவை வழிபடுவது நல்லது.

மிதுனம்

மிதுனம்

குடும்பத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் இந்த வாரத்தில் உயர ஆரம்பிக்கும். தானியங்கள் மற்றும் பொருள் முதலீடுகளில் தாராளமாக இறங்கலாம். அதன்மூலம் லாபம் அதிகரிக்கும். வீ்ட்டில் குழந்தைகளின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் உதவியினால் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியோர்களுடைய ஆசிர்வாதம் உண்டாகும். சிலருக்கு சாஸ்திரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் அதிகமாகும். வியாபாரத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிந்தவர்களை இடம் மாற்றி புதிய நபர்களை நியமிக்கும் பணியைச் செய்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்நியர்களின் மூலமாக பொருள் வரவும் அதேசமயம் சில சங்கடங்களும் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு தொழில் தடைகளை நீக்கும்.

கடகம்

கடகம்

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் வெளியில் எதிர்பார்த்த கடன் உதவி கைக்கு வந்து சேரும். உங்களுடைய குணங்கள் மற்றும் எண்ணப் போக்குகளில் சிறுசிறு மாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய செயல்பாடுகளில் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் நீங்கி, புத்துணர்ச்சி பெருகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இதுவரை இருந்து வந்த இழுபறி நிலைகள் நீங்கும். வழக்கும் உங்களுக்கு சாதகமாகவே முடியும். தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். திட்டமிடாத அளவில் சில செலவுகள் வந்து சேரும். நீங்கள் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்களும் அதன்மூலம் கோபங்களும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தங்கள். வியாபாரங்களில் பொருளாதார வரவு அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடுங்கள் மன உளைச்சல்கள் தீரும்.

சிம்மம்

சிம்மம்

வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற போது கொஞ்சம் கவனமாக இருங்கள். அதேபோல் உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் பேசுகின்ற போது கொஞ்சம் நிதானமாக இருங்கள். விவாதங்களில் ஈடுபட வேண்டிய நிலை வந்ததென்றால் எதையும் பேசும்முன் கொஞ்சம் சிந்தித்து பேசுங்கள். தந்தையினுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஏதாவது ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்டு வந்தால், கொஞ்சம் மன உளைச்சல்கள் குறையும். யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் தர வேண்டாம். எதையுமே கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். தொழிலில் உங்களுடைய புதிய சூழல்களுக்கு ஏற்ப கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரங்களில் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் பணிகளில் இழுபறி நிலை உண்டாகும்.

கன்னி

கன்னி

வீட்டில் உள்ள பெரியோர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட பணி விவாகரங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய உடன் பிறப்புகளால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். கண்களில் இருந்து வந்த உபாதைகளின் வீரியங்கள் குறைய ஆரம்பிக்கும். உடல் நலனில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களின் மூலமாக நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அடுத்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். செய்கின்ற தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை சரியாகி, வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். உயர்ந்த பதவியில் இருக்கின்றவர்களுக்கு உடன் பணிபுரிகின்றவர்களின் ஆதரவுகள் பெருகும். நவ கிரகத்தில் உள்ள சுக்கிரனை வழிபடுங்கள்.

துலாம்

துலாம்

உங்களுடைய புதிய புதிய முயற்சிகளால் முன்னேற்றங்கள் உண்டாக கொஞ்சம் கால தாமதமாகும். வேலையில் உங்களுடைய பொறுப்புகளும் அதிகாரங்களும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பும் நட்பும் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விவாகரங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். நீங்கள் எதிர்பாராத நிலையில் சுப செய்திகளினால் உங்களுக்கு சுப விரயச் செலவுகள் உண்டாகும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தைகளின் வழியிலான உறவுகளால் அதிக அலைச்சல்கள் உண்டாகும். நீங்கள் செய்கின்ற செயல்களுக்கான அங்கீகாரமும் பாராட்டுக்களும் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கால தாமதமாகவே கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுகள். வினைகள் மெல்ல விலகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வெளியூர் பயணங்களின் வழியில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். கால்நடைகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். வேலை செய்கின்ற இடங்களில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களைத் தவிர்த்து, அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வீட்டுக்குத் தேவையான புதிய பொருள்களை வாங்கி, வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள். மனதுக்குள் நினைத்த பிரார்த்தனைகள் நிறைவேறும். தொழிலில் புதிய புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். விரும்பிய பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய நட்பு வட்டாரம் பெருக ஆரம்பிக்கும். சித்தர் வழிபாடு மனதுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

தனுசு

தனுசு

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவினால் குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். தானியங்களின் வாயிலாக பொருளாதார லாபங்கள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய எண்ணங்களினால் தொழிலிலும் பல மாற்றங்கள் உண்டாகும். மனதில் சோர்வுகள் உண்டானதால் வேலையில் கொஞ்சம் கவனமின்றி தேவையில்லாத சொற்களுக்கு ஆளாக நேரிடும். நீங்கள் எதிர்பார்க்காத உதவிகளின் மூலமாக, உங்களுக்கு தொழில் மேன்மைகள் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விவாகாரங்களில் கொஞ்சம் வீண் செலவுகள் அதிகரிக்கும். உங்களுடைய பழைய கடன்களைத் திருப்பி அடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். பிறருடைய வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல்கள் ஏற்படும். துர்க்கா தேவியை வழிபடுங்கள்.

மகரம்

மகரம்

தொழிலில் கூட்டாளிகள் எடுக்கும் முடிவுகளினால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, சோர்வுகள் அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுடைய கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகளின் சாதகமான முடிவுகளைத் தரும். போட்டிகளி்ல வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுகளுக்கு உரிய மரியாதை அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரர்களுடைய உதவியினால் லாபங்கள் பெருகும். போட்டித் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீங்கள் நினைத்த செயல்களை முடிப்பதற்கு சிறிது கடுமையாக முயற்சிக்க வேண்டும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வாருங்கள்.

 கும்பம்

கும்பம்

புதிய புதிய உறுப்பினர்களுடைய வருகையினால் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சமூக சேவை புரிகின்றவர்களுக்கு கொஞ்சம் சாதகமற்ற சூழல்கள் உ்ணடாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணி சம்பந்தப்பட்ட கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயில்கின்றவர்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்த கொஞ்சம் சாதகமற்ற சூழல்கள் உருவாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். வியாபாரங்களி்ல முன்னால் விலகிச் சென்றவர்கள் இப்போது நெருங்கி வர ஆரம்பித்து விடுவார்கள். எடுத்த காரியங்கள் கொஞ்சம் இழுபறியாக இருப்பதால் அலைச்சலும் பதட்டமும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சின்ன சின்ன மறதியினால் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. நவகிரகத்தில் உள்ள புதனை வழிபட்டு வந்தால் பிரச்னைகள் தீர்ந்து போகும்.

மீனம்

மீனம்

புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுடைய புத்திக்கூர்மை அதிகரிக்கும். அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் சில விரயச் செலவுகள் ஏற்படும். புதுப்புது தொழில்நுட்ப வித்தைகளை பயில முயற்சி செய்வீர்கள். பிறருடைய செயல்பாடுகளை குறை சொல்வதைத் தவிர்க்கவும். தந்தையுடைய செயல்பாடுகளை குறை சொல்வதைத் தவிர்த்து விடுங்கள். விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் மரியாதைகள் பெருகும். உறவினர்கள் மூலம் கலகலப்பான சூழல்க்ள உருவாகும். விநாயகரை வழிபடுங்கள். சிறுசிறு வினைகளும் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

weekly predictions 30.7.18 to 5.8.18 what says you should know according your astro signs

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
Story first published: Monday, July 30, 2018, 15:34 [IST]
Desktop Bottom Promotion