For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  திருமணத்தன்று மணமகளின் தந்தை செய்த வேலையப் பாருங்க!

  |

  மற்ற விஷயங்களை விட திருமணங்களின் போது தான் பெரும்பாலன் சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். இங்கே நாம் ஊரிலேயே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான திருமண சடங்குகளை பின்பற்றுவதை பார்த்திருப்போம். எல்லாமே நமக்கு வித்யாசமான அனுபவங்களை கொடுத்திருக்கும்.

  இப்போது அதைவிட சற்று வித்யாசமான அனுபவத்தை பெறப்போகிறீர்கள். மங்கோலியாவிற்கு சுற்றுலா சென்ற ஒரு புகைப்படக்காரர் அங்கு வசிக்கும் டஸ்டான் என்ற பழங்குடியன மக்களின் திருமணத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கே சென்று அவர் எடுத்தப்படங்களை எல்லாம் சமூக வலைதளத்தில் பகிர பயங்கர ஹிட் அடித்திருக்கிறது. அப்படி அவர்களின் திருமணத்தில் என்ன விசித்திரமாக நடக்கிறது வாருங்கள் பார்க்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மக்கள் :

  மக்கள் :

  டஸ்டான் என்ற இந்த பழங்குடியின மக்கள் டைகா என்ற மலையில் மிகவும் பின்தங்கிய பகுதியில் வசிக்கிறார்கள். அந்த மலைப்பகுதியில் ஒரு வகை மான் இனத்தை வளர்ப்பது தான் இவர்களது பிரதான தொழிலாக இருக்கிறது. மலைப்பகுதி என்றதும் மரங்கள் அடர்ந்த காடு என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

  அந்த பகுதி முழுவதும் ஐஸ் கட்டியினால் போர்த்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலம் மட்டும் புல் முளைத்திடும். இங்கே சுமார் நாற்பது குடும்பங்கள் வரை வசிக்கிறார்கள். இந்த டைகா மலைப்பகுதியில் சூரியன் தாமதமாகத்தான் உதிக்கிறது அதே நேரத்தில் மாலையில் வெகு சீக்கிரமே மறைந்து விடுகிறது.

   கலைமான் :

  கலைமான் :

  இங்கு வசிக்கும் மக்களுக்கு எல்லாமே இந்த கலைமான் தான். இந்தப் பகுதியில் இந்த விலங்கினைத்தவிர வேறு எந்த விலங்கும் இருக்காது. நீண்ட தூர பயணம், மூட்டை சுமக்க, ஏன் சில நேரங்களில் உணவுக்கு கூட இந்த கலைமான் தான். வெயில் காலங்களில் மட்டும் குதிரையை பயன்படுத்துகிறார்கள் இந்த மக்கள்.

  இந்த கலைமான் அதிகமாக உப்பு சாப்பிடுகிறது. அதுவும் குளிர் காலங்களில் அங்கு பொழியக்கூடிய அதீத குளிரை தாங்கிக் கொள்ள ஏதுவாக கலைமானுக்கு நிறைய உப்பு கொடுப்பதை இந்த மக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு கலைமான் ஒரு நாளைக்கு சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கிறது.

  நாற்பது குடும்பங்கள் வசிக்கும் ஒரு கூட்டம், கலைமானைத்தவிர வேறு எந்த விலங்கும் இல்லை, எந்நேரமும் உறைய வைக்கும் பணி கொட்டும் மக்களின் திருமணச் சடங்கு எப்படியிருக்கும்?

  நாள் :

  நாள் :

  பெரும்பாலும் இவர்கள் குளிர்காலத்தில் எந்த வைபவங்களையும் வைப்பதில்லை. வெயில் காலத்தில் தான் இந்த திருமணமும் நடந்திருக்கிறது. புகைப்படக்காரின் அனுபவங்களுடன் இனி தொடரலாம். டைகா மலைக்கு செல்லப்போகிறோம் என்ற தகவல் கிடைத்ததும் மிகவும் உற்சாகமானேன். முதலில் போட்டோ பிடிக்க தேவையான கருவிகளை எல்லாம் குதிரையில் ஏற்றினார்கள்.

  மங்கோலியாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மலையில் தான் டைகா மலை இருக்கிறது. இப்போது நாம் இந்த மலையின் கிழக்கு பகுதிக்கு செல்ல வேண்டும்.

  களேபரங்கள் :

  களேபரங்கள் :

  நம்மூர்களில் விழா என்றதும் இருக்கிற களேபரங்கள் எல்லாம் அங்கு இல்லை. மக்கள் உறவினர்கள் எல்லாரும் ஒரேயிடத்தில் சந்திக்க முடியும் என்பது தான் அவர்களது ஒரே நோக்கமாக இருக்கிறது. மணமகன் இருபது வயதான பட்டலாய் மணமகள் பதினெட்டு வயதுப் பெண்.

  இங்கிருக்கும் இயற்கை சூழல் காரணமாக அவ்வளவு எளிதாக மக்களால் பயணங்களை மேற்கொள்ள முடியாது. அதனால் இது போன்ற விழாக்களின் போது உறவினர்களை சந்திப்பது என்பதை மிகவும் அபூர்வமாக பார்க்கிறார்கள்.

  சடங்குகள் :

  சடங்குகள் :

  எல்லா உறவினர்களும் வந்த பிறகு சடங்குகள் ஆரம்பமாகிறது. முதலில் மணமகனின் அப்பா வடக்குப் பக்கமாக பார்த்தபடி உட்கார்ந்து எதிரில் உட்கார்ந்திருக்கும் மணமகளின் அப்பாவிடம் தன் மகனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து தாருங்கள் என்று கேட்கிறார். முன்னரே எல்லாம் முடித்திருந்தாலும் சம்பிரதாயத்திற்காக இதைக் கேட்கிறார்கள்.

  இரு வீட்டு தந்தையர்களும் சம்மதம் என்று சொன்னவுடன் திருமண வைபவங்கள் ஆரம்பமாகிறது. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? மணமகளின் தந்தை அவ்வளவு எளிதாக திருமணத்திற்கு சம்மதிக்காதது போல கொஞ்சம் நேரம் போக்கு காட்டுவாராம்.... அவருக்கு பிடித்தமான உணவுகள், இசை,அலங்காரப் பொருள் ஆகியவற்றை எல்லாம் கொடுத்து சம்மதிக்க வைக்கிறார்கள்.

  சம்மதம் :

  சம்மதம் :

  நீண்ட இழுப்பறிக்குப் பின் தன்னுக்கு சம்மதம் என்பதை ஒரு சில்க் துணியை எடுத்து காண்பிக்கிறார். இந்த நடைமுறை, உணவு பரிமாறும் மேடை, மக்கள் அணியும் உடை ஆகியவை அனைத்துமே தங்களின் கலாச்சாரத்தை பிரதிபளிப்பவையாக இருக்கிறது. மங்கோலியாவின் பாரம்பரிய உணவான ஹுசுர் என்ற உணவைத் தான் விருந்தில் முதலில் வைக்கிறார்கள். அதன் பிறகு மற்ற உணவு வகைகள் பரிமாறப்படுகிறது.

  கதை கதையாம் :

  கதை கதையாம் :

  அந்த கூட்டத்தின் மூத்தவர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். முதலில் மணமக்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி இந்த சூழலில் பொருளீட்ட வேண்டும். கலைமானை எப்படி பராமரிப்பது கால சூழல், இயற்கை சூழல்,வைத்திய முறைகள்,ஆகியவை குறித்தெல்லாம் சொல்கிறார்கள்.

  கடைசியாக தங்கள் மூதாதையர்களைப் பற்றி சொல்கிறார்கள். நாம் ஏன் இங்கு வசிக்கிறோம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த மலைப்பகுதியில் வசிக்க என்ன காரணம், நாம் தொடர்ந்து இங்கு வசிக்க வேண்டியது அவசியம் குறித்து விரிவாக சொல்லப்படுகிறது.

  வெள்ளை குதிரை :

  வெள்ளை குதிரை :

  திருமணத்திற்கு செல்லும் போது வெள்ளைக்குதிரையில் தான் பொருட்களை எல்லாம் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். கெட்ட ஆவி இதனால் தங்களை நெருங்காது என்று நினைக்கிறார்கள். அதோடு வெள்ளை நிறம் தான் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நினைக்கிறார்கள்.

  புடை சூழ வெள்ளைக்குதிரையில் மணமக்கள் வாழக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கே கலைமான் பால் கொடுக்கப்படுகிறது. அந்த பாலை பூமிக்கும் வானத்திற்கும் சமர்பிப்பதாக பிரார்தனை செய்து கொடுக்கிறார்கள். முன்னதாக அவர்கள் வசிக்கக்கூடிய கூடாரத்தை மூன்று முறை சுற்றி வந்து வணங்குகிறார்கள்.

  உணவு :

  உணவு :

  அவர்களின் பாரம்பரிய உணவைப் போக ஆட்டுக்கறி பிரதானமாக விருந்தில் இடம் பெறுகிறது, இவற்றை மணமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து தயாரித்து இங்கே கொண்டு வந்து பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். விருந்து முடிந்ததும் மல்யுத்த போட்டி நடக்கிறது.

  ஆண்கள் எல்லாரும் மல்யுத்த போட்டியில் பங்கேற்க பிறர் சுற்றி நின்று உற்சாகப்படுத்துகிறார்கள்.

  இரவு :

  இரவு :

  இந்த சம்பிரதாயம் முடிந்ததும் மீண்டும் மணமக்கள் அவர்களின் கூடாரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உடை மாற்றிக் கொள்கிறார்கள். அதாவது இப்போது அவர்கள் கணவன் மனைவி ஆகிவிட்டார்கள் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினரை எப்படி கவனிக்கிறீர்கள் என்ற ரீதியில் இரவு விருந்து விருந்தினர்களுக்கு மணமக்கள் தான் படைக்க வேண்டும்.

  இரவு உணவு முடிந்ததும் திருமணப்பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

  பணம் :

  பணம் :

  திருமணத்தன்று பரிசாக கண்டிப்பாக பணம் மட்டும் தான் கொடுக்க வேண்டும். பொருட்களை விட பணம் தான் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமாக இருக்கிறது என்பதால் இந்த நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்கிறார்கள். கூடாரத்திற்குள் ஒரு கொடியை தொங்கவிட்டு அதில் ஒவ்வொரு உறவினரும் தங்களின் பெயரைச் சொல்லி பரிசுப் பணத்தை கொடியில் தொங்கவிடுகிறார்.

  அந்த நிகழ்வுடன் திருமண சடங்குகள் நிறைவடைந்தன.

  All Source

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Wedding Tradition Of Taiga People Of Mongolia

  Wedding Tradition Of Taiga People Of Mongolia
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more