For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விசித்திரமான ஜீன் கொண்ட கிராம மக்கள் உலகையே ஆச்சரியப்படுத்துகிறார்கள்!

மிகவும் அரிதான மற்றும் விசித்திரமான ஜீன்களை வைத்திருக்கும் கிராமங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

|

வழி வழியாக தொடர்கிற விஷயத்தை மரபணு ரீதியாக அதனை அடையாளப்படுத்துவோம்.நம் வீடுகளில் கூட அப்பிடியே தாத்தா மாதிரி இருக்கான் அப்பா மாதிரி என்று சொல்வது உருவ ஒற்றுமை மட்டுமல்லாது அவரது குணநலன்களை அந்த ஒற்றுமைகளை பற்றி பேசக் கேட்டிருப்போம்.

நல்ல விஷயங்கள் இப்படி வழி வழியாக வந்தால் நல்லபடியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் நபர்கள் சற்றே குறைவான விஷயங்கள் என்று சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள். அதனை மாற்ற என்னென்ன விஷயங்களை மாற்ற வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

முன்னால் உறவு விட்டுப் போகக்கூடாது என்று சொந்தங்களில் திருமணம் செய்தவர்கள் இன்றைக்கு நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று நெருங்கிய சொந்தங்களில் திருமணம் செய்வதையே தவிர்த்து வருகிறார்கள். இந்தக் கட்டுரையில் விசித்திரமான கிராமங்களைப் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

இங்கே விசித்திரம் என்று இவர்கள் பெயர் பெற்றதற்கு காரணம் இங்கிருக்கும் மக்களிடத்தில் மிகவும் அரிதான மரபணு இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ப்ரேசிலில் டவுன் பகுதியில் இருக்கும் மக்கள் வெயிலை ரசிப்பர். வெயிலை ரசிப்பதற்கென்றே பீச் பகுதிக்கு செல்பவர்கள் உண்டு. ஆனால் பிரேசிலில் மேற்கு பகுதியில் அமைந்திருக்கு ஒரு கிராமம் அராராஸ்.

இங்கு வசிக்கும் மக்களுக்கு சூரியன் என்றாலே அலர்ஜியாம். சூரியன் சருமத்தில் பட்டாலே எதோ சருமமே உருகி வழிந்திடும் அளவிற்கு எரிச்சலை ஏற்படுத்திவிடுகிறதாம்.

இதில் கொடுமை என்னவென்றால் இங்கிருக்கும் மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தானாம்.... இந்த சருமப் பிரச்சனையினால் பலரும் தங்களது தொழிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எரிச்சல் மட்டுமல்லாது கட்டி, கொப்புளங்கள் ஆகியவையும் ஏற்படுகிறது.

Image Courtesy

#2

#2

மார்ச் மாதம் 2013 ஆம் ஆண்டு கஜகஸ்தானில் உள்ள கலாச்சி மற்றும் கரஸ்னோகர்க் என்ற கிராமத்தில் திடீரென்று பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டிருக்கிறார்கள் பல நாட்கள் இப்பிடி தூக்கத்திலேயே இருந்தார்களாம் மக்கள்.

எந்த வயது வித்யாசமும் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். சில இடங்களில் அவ்வூரில் இருந்த கால்நடைக்கும் இந்த பிரச்சனை ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அங்கு ஆய்வு நடத்தியும் மக்களுக்கு ஏன் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவில், காற்றில் அதிகப்படியான கார்பன் மோனோ ஆக்ஸைட் கலந்திருந்தது தான் என்று கண்டுபிடித்தார்கள்.

Image Courtesy

#3

#3

ஜெர்மனியில் இருக்கிறது விவெல்ஸ்ஃபெல்த் என்ற கிராமம். இது ஜெர்மனியின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கு சுமார் 1500 மக்கள் வரையில் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு கேன்சர் நோயாளியாவது இருப்பார்களாம். இங்கு வசிக்கும் மக்களில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அருகில் இருக்கும் அணு உலை தான் காரணம் என்றும், அருகில் கப்பல் பெயிண்ட் அடிக்கும் இடம் இருக்கிறது, டாக்சிக் ஸ்ப்ரே அடிப்பது முக்கியமாக பயிற்களில் அளவுக்கு அதிகமான பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்படுவது தான் என்று கூறப்படுகிறது.

Image Courtesy

#4

#4

முதியவர்களை பராமரிக்கும் பிரச்சனை இருப்பதினால் நிறைய பேர் தங்கள் பெற்றோர்களையே வீட்டை விட்டே வெளியேறும் நிர்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.

இதில் ஒர் கொடுமை என்னவென்றால் முதியவர்களுக்கு ஏற்படுகிற அம்னீசியா எனக்கூடிய மறதி நோய். இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெரியவர்களை தனியாக ஹோமில் சேர்பதை விட அவர்களுக்காக ஒரு கிராமத்தையே உருவாக்கப்பட்டது.

இவர்களை பராமரிக்க தன்னார்வலர்கள் பலர் இங்கே பணியாற்றுகிறார்கள். இந்த கிராமத்தின் பெயர் ஹோக்வே நெதர்லாந்தில் இருக்கிறது.

Image Courtesy

#5

#5

சீனாவின் சிச்சுவான் மாகாணத்திற்கு அருகில் இருக்கிற யாங்ஸி என்ற கிராமம். இந்த கிராமத்தில் இருக்கும் எண்பது சதவீதத்திற்கு மேல் உள்ள மக்கள் குள்ளர்களாக இருக்கிறார்கள். 120 செ.மீ உயரம் தான் அதிகபட்சமாக இருக்கிறார்கள்.

இந்த கிராமம் இருக்கிற மணலில் மெர்குரி அதிகமாக கலந்திருக்கிறது அவற்றில் விளையும் உணவுகளை உட்கொள்வது இதற்கு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

#6

#6

இக்காரியா என்ற கிராமத்தில் வாழும் மக்களின் சராசரி வயது 90. இங்கு பல பெரியவர்கள் 100 வயதை கடந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்த கிராமத்தில் வாழும் மக்கள் மட்டும் 100 ஆண்டினை கடந்து வாழ்வதற்கு முக்கிய காரணம் என்னவென்று தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதியம் தூங்கும் பழக்கம், மன அழுத்ததிலிருந்து வெளியேற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், துரிதம், முன்னேற்றம், நேரமின்மை போன்றவற்றில் சிக்காமல் அவர்கள் கடைபிடிக்கிற வாழ்க்கை முறை, மிக முக்கியமாக அவர்களது உணவுப்பழக்கம். சர்க்கரை அதிகம் சேர்க்காதது, ஆட்டுப் பாலை குடிப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கிறது.

இங்கிருக்கும் மக்களுக்கு பெரும்பாலும் இயற்கை மரணங்களாகவே இருக்கிறது. நோய் தாக்கி, அது முற்றி அதானால் ஏற்படுகிற மரணங்கள் வெகு குறைவு

Image Courtesy

#7

#7

உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் நாடு வெலிகயா கோபன்யா. இங்கே 4000 குடும்பங்கள் வரை வசிக்கிறார்கள். இங்கே பெரும்பாலும் இரட்டை குழந்தைகள் பிறக்கிறதாம். இது ஒன்று சமீபத்தில் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தவை அல்ல கடந்த மூன்று தலைமுறைகளாகவே இப்பிடி இரட்டை குழந்தைகள் பிறப்பது இங்கே வழக்கமாக இருக்கிறது.

மனிதர்கள் மட்டுமல்ல இந்த கிராமத்தில் இருக்கிற மாடும் இரண்டு கன்றுக்குட்டிகளை ஒரே நேரத்தில் பிரசவிக்கிறது.

Image Courtesy

#8

#8

இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் பெங்கலா இங்கே சுமார் மூன்றாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40 சதவீதத்துக்கும் மேல் காது கேட்காதவர்களாக வாய் பேசாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் இந்த கிராமத்தில் இருக்கிற பெரும்பாலான மக்கள் சைகை மொழியை பேசுகிறவர்களாக இருக்கிறார்கள்.

இந்த கிராமத்தில் வாழ்கிற மக்களில் தலைமுறை தலைமுறையாக இந்த பிரச்சனை தொடர்கிறதாம். சைகை மொழியை பள்ளியிலேயே ஒரு பாடமாக சொல்லி கொடுக்கப்படுகிறது.

Image Courtesy

#9

#9

குழந்தை பிறக்கும் போது அதன் பிறப்புறுப்பை பார்த்து பிறந்திருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று பார்த்து சொல்வார்கள். டொமினியன் ரிபப்ளிக் என்ற இடத்தில் உள்ள சலினாஸ் என்ற இடத்தில் பிறக்கும் போது பிறப்புறுப்பு இருப்பதில்லை.இல்லையென்றால் இவர்களை பெண் குழந்தை என்று பாவித்து வளர்க்கத் துவங்கி விடுவார்கள்.

பருவ வயதை எட்டியதும் இவர்களுக்கு ஆணுறுப்பு வளரத் துவங்குகிறது. இந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு மிக அரிதான மரபணு பிரச்சனை இருப்பதினால் தான் இந்த பிரச்சனை என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Villages Which Have Rare Genes

Villages Which Have Rare Genes
Desktop Bottom Promotion