Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
மணமேடையில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட ஆணை பளாரென அறைந்த மணமகள் - (வீடியோ)
மணமேடையில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட ஆணை பளாரென அறைந்த மணமகள் - (வீடியோ)
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிரென்று நீண்ட காலமாக கூறி வருகிறோம். திருமணம் என்பது இருவர் இணைதல் என்று கூறினாலும், இந்திய திருமணங்கள் சொந்த பந்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களின் கூட்ட நெரிசலில் புகை மண்டலத்தின் நடுவே இரைச்சலான சத்தங்கள் காதை அடைக்க தான் நடக்கிறது.
சடங்கு, சம்பிரதாயம் என்று கூறி இதை காலம், காலமாக பின்பற்றி வருகிறோம். அச்சிடப்படும் பத்திரிகை, உடுத்தும் உடை, உண்ணும் உணவு, தாலி என அனைத்திலும் மாற்றம் கண்டாலும், இந்த சடங்கு சம்பிரதாய முறைகளில் மட்டும் மாற்றங்கள் ஏற்படுவதாக இல்லை.
முன்னரெல்லாம் நிச்சயத்தின் போது ஏதாவது அபசகுனம் நடந்தாலே.. அந்த பெண் ராசி இல்லாதவள் என்று பச்சை குத்தி ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், இந்த 21வது நூற்றாண்டில் மணப்பெண்களே ஆண்களை ஒதுக்கும் தைரியமான நிலை பிறந்துள்ளது.
தனக்கு பிடிக்காததை செய்தால், அவன் தனக்கு தேவை இல்லை என்பதில் பெண்கள் கவனமாக இருக்கிறார்கள். மணமேடையில் வைத்து திருமணத்தை நிறுத்திய சம்பவங்கள் கூட இந்தியாவில் நடந்துள்ளன. அஞ்சி, நடுங்கி, ஆணை சார்ந்து தான் என் வாழ்க்கை என்ற மனப்பான்மையை பெண்கள் மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
சென்ற வாரம் கூட, மணமகன் இடி, மின்னலுக்கு அஞ்சியதை கண்டு திருமணத்தை மணப்பெண் ஒருவர் கேன்சல் செய்தார்.அதற்கு முன் ராஷிகா என்ற பெண் பாதி திருமண உடை, பாதி ஜீன்ஸ்ல் நடனமாடிய வீடியோ வைரலாக பரவியது.

வைரல் சம்பவம்!
இந்திய திருமண நிகழ்வுகளில் சடங்கு சம்பிரதாயங்களை தாண்டி சில விளையாட்டுகளும் நடக்கும், சிலவன சாதரணமாக இருக்கும், சிலவன நண்பர்கள் உறவினர்கள் சூழ கலகலப்பாக நடக்கும்.
அப்படியான ஒரு விளையாட்டின் போது தான் மணப்பெண் ஒருவர் சமீபத்தில் தனது அனுமதின்றி தூக்கிய ஆணை மணமேடையில் வைத்து ஓங்கி அறைந்த சம்பவம் வீடியோ காட்சியாக வைரலாக பரவி வருகிறது.

சடங்கு!
திருமண நிகழ்வின் போது தாலி கட்டிய பிறகு, மாலை மாற்றும் சடங்கு பரவலாக இந்திய திருமண விழாக்களில் காணப்படும். அப்படியான மாலை மாற்றும் நிகழ்வின் போது வேடிக்கையாக, கலகலப்பாக சிலர் டக்கென மாலை போடாமல், தவிர்ப்பது போல விளையாடி மகிழ்வார்கள். சிலர் மணப்பெண், மணமகனை தூக்கிப்பிடித்து விளையாடுவார்கள்.
ஒரு ஆண் மன மேடையில் இருந்த திருமணமான பெண்ணை, அவரது அனுமதி இன்றி தூக்கி இருக்கிறார். சற்றும் எதிர்பாராத போது இந்த சம்பவம் நடக்கவே, மாலையை மணமகன் குழுத்தில் அணிவித்து கீழே இறங்கிய பெண், தன்னை தூக்கிய அந்த ஆணை பளாரென்று அறைந்திருக்கிறார்.

நடந்த காட்சி!
மணமகனும், மணப்பெண்ணும் மாலை மாற்றிக் கொள்ள வேண்டிய நிகழ்வுக்காக காத்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு பின்னே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஒரு உறவினர் (மணப்பெண்ணை தூக்கியவர்).
மாலை மாற்றும் நிகழ்வு ஆரம்பிக்கும் போது, மணமகனின் உறவினர் ஒருவர் அவர் வேண்டாம், வேண்டாம் என்று கூற, கூற அவரை தூக்கிப் பிடிக்கிறார். இப்போது மணமகளை ஒருவர் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்ற சூழல்.

கோபம்!
யாரிடமும் எதையும் கேட்காமல். பின்புறம் இருந்து தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த உறவினர், மணமகளை அவரிடம் அனுமதி பெறாமலேயே தூக்கிவிட்டார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர்.
உடனே, அவரை கீழே இறக்கிவிடும்படி தோளை தட்டிய மணப்பெண்... சற்றும் எதிர்பாராத நேரத்தில், தன்னை தூக்கிய உறவினரை பளார் என்று அறைந்தார். அப்போது அருகே நின்று கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றனர்.
வேறொரு உறவினர் பெண், அடிவாங்கிய அவரிடம் என்ன ஆனது என்று கேட்க, அடிவாங்கிய கோபத்தில், தன்னை விசாரித்த பெண்ணை ஓங்கி அறைந்துவிட்டு மணமேடையில் இருந்து இறங்கி வேகமாக சென்று விட்டார் அந்த ஆண்.
வீடியோ காட்சி!
ஒருவேளை, அந்த ஆண் வேண்டுமென்றே இந்த காரியத்தை செய்யாமல் இருந்திருக்கலாம். மணமகனை ஒருவர் தூக்கிவிட்டார். மணமகளையும் தூக்கினால் தான் உயரும் சரியாக பொருந்தும் என்று விளையாட்டாக அவர் தூக்கி இருக்கலாம்.
ஆனால், எதுவாக இருந்தாலும், அந்த பெண்ணிடம் அனுமதி வாங்காமல் செய்தது தவறு தான். அல்லது வேறு சில பெண்களை அழைத்து மணமகளை தூக்கிப்பிடிக்க கூட கூறி இருக்கலாம். அனைவரும், எல்லா சூழலிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
எதுக்கும் மாப்பிளையும் வருங்காலத்துல உஷாரா எல்லாத்துக்கும் பர்மிஷன் வாங்கிக்கிட்டா நல்லா இருக்கும். அடி பலமாவே விழும் போல.



Click it and Unblock the Notifications











