For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீரர்களுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க நிகழ்த்தப்பட்ட கொடூரம்!

போர் கைதிகளாய் சிறை பிடிக்கப்பட்டவர்களை வீரர்களுக்கு துப்பாக்கியினால் சுடும் பயிற்சி அளிக்க சுட்டுக் கொன்று குவித்திருக்கிறார்கள்.

|

ஆரம்ப காலங்களில் தங்களுடைய அடிமைகள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். குறிப்பாக சிறைக் கைதிகளக பிடிக்கப்பட்டவர்கள் என்று சொன்னால் சொல்லவே வேண்டாம்.நிறம்,மொழி,இனம் என தங்களுக்குள்ளாகவே ஒரு வட்டத்தை ஒருவாக்க ஒரு குழு மக்கள் இன்னொரு மக்களை அடக்கி ஆழ நினைத்து பல கொடூரங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின் சமயம் தங்களிடம் சிக்கிய மக்களை, சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை ஜப்பான் ராணுவத்தின் அணுகுமுறை உலகையே உலுக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரிட்டிஷ் ஆர்மி :

பிரிட்டிஷ் ஆர்மி :

பிரிட்டிஷ் இந்திய படையில் சீக்கியர்கள் ஒர் அணியாக இருந்தார்கள். அவர்களை கைப்பற்றிய எதிர் நாட்டுப் படையினர் கண்ணை கட்டிக் கொண்டு நீண்ட தூரம் நடக்க வைத்து ஒரு வெட்ட வெளிப் பகுதிக்கு அழைத்து வந்திருந்தனர்.

ஐம்பது மீட்டர் தொலைவில் அவர்களை வரிசையாக உட்கார வைத்திருந்தனர்.

Image Courtesy

தண்ணீர் கேட்கலாமா :

தண்ணீர் கேட்கலாமா :

ஒவ்வொருவருக்கும் இடையிலும் இரண்டு அடி கேப் விடப்பட்டு வரிசையாக உட்கார வைக்கப்பட்டார்கள். நீண்ட நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. இப்போது நாம் எங்கே வந்திருக்கிறோம், நம்மை என்ன செய்யப் போகிறார்கள். இங்கிருந்து எப்போது திரும்பச் செல்வோம் என்று எதுவும் தெரியாது.

வெயில் சுட்டெரிக்கிறது. தண்ணீர் தாகம் வேறு எடுக்கிறது. தங்களை கைது செய்து வந்தவர்கள் அருகில் இல்லை. நம்மை விட வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.

Image Courtesy

வேண்டுதல் :

வேண்டுதல் :

தாகத்தை அடக்க முடியவில்லை. பேசாமல் தண்ணீரை கேட்டுவிடலாமா என்று எத்தனிக்கையில். அப்படியே கீழே அமருங்கள் என்ற கட்டளை வருகிறது. என்னது கீழே உட்காரவா? காலை கீழே வைக்க முடியாத அளவுற்கு வெயில் சுட்டு பொசுக்குகிறது இங்கேயே.... எப்படி என்று யோசிக்கிறார் ம்ம்ம்... சீக்கிரம் உக்காரு என்று கட்டளை பறக்கிறது. கைகளும் கண்களும் கட்டப்பட்டிருப்பதால் வேறு வழியில்லை உட்காரத்தான் வேண்டும்.

எல்லாரும் உட்கார்ந்தார்கள். மீண்டும் அங்கே அமைதி.... இப்போது எல்லாரும் உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார் ஒருவர்.

Image Courtesy

 உணவு :

உணவு :

சிலர் எதோ மந்திரங்களை முணுமுணுக்கிறார்கள்.... சிலர் இங்கிருந்து தங்களை விடுவிக்கும் படி அழுது கெஞ்சுகிறார்கள் புலம்புகிறார்கள். நீண்ட நேரம் கழித்து தங்கள் முன்னால் ஒருவர் நடந்து செல்வதை உணர முடிகிறது.

அவர் தங்களுக்கு முன்னால் எதையோ வைக்கிறார். காதின் வழியே தான் அத்தனையையும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

எதற்கான எண் :

எதற்கான எண் :

அட முன்னால் உணவு வைக்கப்படுகிறதா? அல்லது தண்ணீர்.... வரிசையாக நம் ஒவ்வொருவரின் முன்னாலும் எதோ வைக்கப்படுகிறது பின் தட்டப்படுகிறது, உணவு என்றால் தட்ட வேண்டிய அவசியம் இருக்காதே என்று யோசிக்கிறார்கள்.

பின் மீண்டும் அங்கே அமைதியாகிவிட்டது. பின்னர் கைகளை அவிழ்த்து விடப்போகிறார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஒவ்வொரு விநாடியும் சுவாரஸ்யம் கூடியது.

Image Courtesy

 முதல் குண்டு :

முதல் குண்டு :

எல்லாரும் வேண்டிக் கொண்டீர்களா? என்று ஒரு குரல் கேட்டது.... ஆம்... முடிந்தது..என்று பல்வேறு பதில்கள் வந்து விழுந்தன. ம்ம்ம்ம் இப்போது நீங்கள் தயார் என்று சொல்லிவிட்டு ஒரு எண்ணைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்றார்.

மறு நொடி துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. என்ன சத்தம் என்று யூகிப்பதற்குள் அடுத்தடுத்து துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

Image Courtesy

 துடிதுடித்து மரணம் :

துடிதுடித்து மரணம் :

சம்மனமிட்டு உட்கார்ந்திருந்தவர்கள் அப்படியே பின்னோக்கி விழுந்தார்கள். இது விடுவிப்பதற்கான இடமல்ல தங்களை கொன்று குவிப்பதற்கான இடம் என்பது அப்போது தான் உணர்கிறார்கள்.

நெஞ்சில் சிலருக்கு நெற்றியில், சிலருக்கு கழுத்தில் குண்டுகள் பாய்ந்து ரத்தம் வழிகிறது. பலரும் அப்போதே மரணித்திருந்தார்கள். சிலரது உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

Image Courtesy

முட்டாள் :

முட்டாள் :

ஈட்டியைக் கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்த உடலை தட்டி திருப்பி போடுகிறார்கள். இதற்கு மேலும் நம்மை காப்பாற்றப் போகிறார்கள். மருத்துவ சிகிச்சை அளிக்க கொண்டு போகிறார்கள் என்று எதிர்ப்பார்த்தால் இங்கே நம்மை விட முட்டாள் வேறு யாருமல்ல.

Image Courtesy

பயிற்சி :

பயிற்சி :

இங்கே துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டு வந்தவர்கள். இந்த கைதிகளைக் கொண்டு போர் வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆம், அவர்கள் சுட்டு பயிற்சிப் பெறவும் கைதிகளை உண்மையிலேயே சுட்டு கொன்று குவித்திருக்கிறார்கள்.

முதலில் கைதிகள் ஒவ்வொருவருக்கும் எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த எண்ணை நீ ஒரே குண்டில் கொல்ல வேண்டும். இது தான் அந்த வீரர்களுக்கு சொல்லப்பட்ட விதி. ஈட்டியைக் கொண்டு நகர்த்திப் பார்த்தது அந்த கைதிக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்பதை சோதிக்கத்தான்.

Image Courtesy

சீனர்கள் :

சீனர்கள் :

சீனாவில் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் இதைவிட மிகவும் கொடூரமான தண்டனைகளை எல்லாம் பெற்றிருக்கிறார்கள். இதே போல சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைத் தவிர அவர்களை உயிருடன் எரிப்பது, ஈட்டியைக் கொண்டு உடல் உறுப்புகளை சிதைப்பது, தலையை வெட்டுவது, மருந்துகளை சோதிக்கும் விலங்குகளுக்கு பதிலாக இந்த கைதிகள் பயன்படுத்தப்பட்டார்கள்.

இதை விட அணு அணுவாக சித்திரவதை செய்தும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Using Prisoners As Shooting Target Practice

Using Prisoners As Shooting Target Practice
Story first published: Saturday, April 28, 2018, 9:42 [IST]
Desktop Bottom Promotion