உலகளவில் செயல்பட்டு வரும் வினோதமான அரசுத் துறைகள் !

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு நாடுகளும் தங்கள் மக்களின் பாதுகாப்பு கருதி பல விஷயங்களை முன்னெடுக்கிறது. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதற்காக பல பாதுகாப்பு நிறுவனங்களையும் நியமித்து வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் சொல்லவேண்டுமானால் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை ஆகியவை சொல்லலாம். இதே போல பிறநாடுகளிலும் சில நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள் அவர்கள் தங்கள் நாட்டு மக்களை, சுற்றுச்சூழலை,சட்டங்களை எல்லாம் அந்த நிறுவனங்களின் மூலமாக கையாள்கிறார்கள். இப்படி உலக நாடுகளில் விசித்திரமான காரணங்களாக்காக அரசாங்கம் நடத்துகிற சில நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொழிக்காக :

மொழிக்காக :

சீன மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பது என்பது சீனமக்களின் கனவுகளில் ஒன்று என்றே சொல்ல வேண்டும். ஆங்கில மொழியறிவு இருந்தாலும் அவற்றை மொழிப்பெயர்ப்பதில் ஏரளமான சிக்கல்கள் இருக்கின்றன.

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்கப்படும் போது சில இலக்கணப் பிழைகளால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் இருந்து சீன மொழிக்கு மொழிபெயர்ப்பதிலும் சிக்கல்கள் நிலவுகின்றன.

Image Courtesy

 சாஃப்ட்வேர் :

சாஃப்ட்வேர் :

பெரும்பாலும் இப்படி மொழிபெயர்ப்புக்கு தனியாக சாஃப்ட்வேர் விற்கிறது . ஆனால் அவை எல்லாம் சரியாக மொழிபெயர்க்கும் என்று சொல்லமுடியாது அந்த வார்த்தைகளை அப்படியே மாற்றுவதினால் சொற்பிழைகள் வார்த்தை பிழைகள் ஏற்படுவதுண்டு.

இதனால் சீனமொழியையும் ஆங்கில மொழியையும் சேர்த்து சிங்கிலிஷ் மொழியையும் பயன்படுத்துகிறார்கள். இது இரு மொழி பேசுபவர்களுக்கும் பெரும் இடைஞ்சலாய் இருந்திருக்கிறது.

Image Courtesy

சங்காய் :

சங்காய் :

இந்நிலையில் சாங்காய் மாநில அரசாங்கம் இதற்கென்றே தனி கமிஷனை ஏற்படுத்தியிருக்கிறது.ஆங்கிலமும் சீன மொழியும் கலந்து எழுதப்பட்டிருக்கும் போர்டுகளை எல்லாம் நீக்கி சீன மொழியில் எழுத உத்தரவிட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

ஜெய்பன் :

ஜெய்பன் :

GEIPAN என்ற நிறுவனம் ஃபிரஞ்சு அரசாங்கத்தால் நடத்தப்படுகிற ஒரு ஏஜன்ஸி ஆகும். இது வானத்தில் பறக்கிற அடையாளம் தெரியாத பொருட்களை ஆய்வு செய்வதற்கென்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இதனை 1977 ஆம் ஆண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். நாசா நிறுவனத்தினைப் போல பிரஞ்சு நாட்டில் இந்த நிறுவனம் பார்க்கப்படுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மட்டும் 1600க்கும் மேற்பட்ட விசித்திர பொருட்கள் வானில் பறப்பதை ஆராய்ந்திருக்கிறது இந்த நிறுவனம்.

Image Courtesy

டாப் சீக்ரட் :

டாப் சீக்ரட் :

இந்த நிறுவனம் அரசாங்கத்தின் மிகவும் ரகசியமான டாக்குமெண்ட்களை கையாள்கிறது. இவை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏ4 சீட் அளவில் இருக்கிறது. பல நேரங்களில் விசித்திர பொருட்களைக் கடந்து மேகம், நிலா,ஆகிய இயற்கையான நிகழ்வுகளைக் கூட எடுத்துக் கொள்கிறார்கள்.

Image Courtesy

ஒன்றாக இணைவோம் :

ஒன்றாக இணைவோம் :

போர் அச்சத்தில் இருக்கிற நாடுகள் வடகொரியா மற்றும் தென் கொரியா. ஆனாலும் இரண்டு நாடுகளும் ஒருநாள் ஒன்றிணையும் என்று நம்பிக் கொண்டிருக்கிறவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பு இது.

தென்கொரியா அரசாங்கம் இந்த ஒருங்கிணைப்பு அமைச்சகத்தை ஆரம்பித்திருக்கிறது. இதனுடைய முக்கிய நோக்கமே வட கொரியாவுடன் நட்புணர்வு பாராட்டுவது தான்.

Image Courtesy

என்ன செய்யும் :

என்ன செய்யும் :

தென் கொரிய மக்களிடத்தில் இப்படி வடகொரியாவுடன் ஒன்றிணைவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று விரிவாக சொல்ல வேண்டும். அதற்கான திட்டங்கள், பாலிசிகள் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்.

இதைத் தவிர வடகொரியாவில் நடைபெறும் தேசத் துரோக குற்றங்கள், மனித உரிமை மீறல் ஆகியவற்றையும் இவர்கள் கணக்கில் கொண்டு அதற்கேற்ப செயலாற்றவேண்டும்.

Image Courtesy

நாசா :

நாசா :

ப்ளாண்ட்டரி ப்ரோடெக்‌ஷன் என்ற இந்த அமைப்பினை நாசாவின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இந்த அமைப்பின் முக்கிய வேலை என்ன தெரியுமா? விண்வெளியிலிருந்து எந்த துகளும் பூமியை தாக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.

அதே போல பூமியிலிருந்து எதுவும் விண்வெளிக்கு செல்லாத வண்ணமும் தடுக்க வேண்டும். ஏவுகனை ஏவும் போது இவர்கள் தான் பாதையை வகுத்துக் கொடுப்பார்கள்.

Image Courtesy

சம்பளம் :

சம்பளம் :

பெரும்பாலான நாடுகளில் இதற்கென்று தனி அமைப்புகள் எல்லாம் இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அதற்கான அதிகாரிகளை எடுத்து அவர்கள் வேலை பாதையை திட்டமிட்டு வகுத்து கொடுத்த பிறகு அனுப்பிவிடுவார்கள். ஆனால் நாசா மற்றும் ஐரோப்பிய வானிலை மையம் இரண்டுமே நிரந்தரமாக இதற்கென்றே அதிகாரிகளை நியமித்து வைத்திருக்கிறது.

நாசா கடந்த 1967 ஆம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பினை நடத்திவருகிறது. இவர்களுக்கு ஆண்டுக்கு 1,87,000 டாலர் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

Image Courtesy

டீ :

டீ :

1897 ஆம் ஆண்டு டீ இறக்குமதி செய்வதற்கென்றே தனிச்சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற டீ தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்கிறதா என்பதை கண்காணித்துச் சொல்ல வேண்டும். இதற்காகவென்று அமெரிக்க அரசாங்கம் ஒர் அமைப்பை உருவாக்கியிருக்கிறது.

இதில் டீ எக்ஸ்பர்ட்கள் இருப்பார்கள்.

Image Courtesy

வருடம் ஒரு முறை :

வருடம் ஒரு முறை :

இந்த அமைப்புக் குழுவில் ஏழு ஆண்கள் இருப்பார்கள். இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை ஒரே இடத்தில் குழுமுவார்கள் அவர்களிடம் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய விருப்பம் தெரிவித்திருக்கும் நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட சாம்பில்கள் வைக்கப்பட்டிற்கும் அதனை ஏழு பேரும் சுவைப்பார்கள். பின்னர் எந்த நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.

மேல் முறையீடு :

மேல் முறையீடு :

இந்த ஏழு பேர் குழுவினரைத் தாண்டி மூன்று பேர் கொண்ட உயர் மட்ட குழு இருக்கும். இந்த ஏழு பேர் குழு அறிவித்த முடிவில் திருப்தி இல்லை எனும்பட்சத்தில் மேல் மட்ட குழுவில் நீங்கள் பரீசிலனைக்குச் செல்லலாம்.

இங்கே பிற உணவுகளைத் தாண்டி டீக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பதால் 1996 ஆம் ஆண்டு இந்த அமைப்பு நீக்கப்பட்டது. அதற்காக தரக்குறைவான டீத் தூளையோ அல்லது இலைகளையோ இவர்கள் இறக்குமதி செய்வதில்லை.

Image Courtesy

வார்டர் :

வார்டர் :

லண்டனில் புகழ்ப்பெற்ற லண்டன் டவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் யேமோன் வார்டர்ஸ். இந்த டவர் கட்டப்பட்ட 11 ஆம் நூற்றாண்டிலிருந்தே இவர்கள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த காலத்தில் இது சிறைச்சாலையாக இருந்திருக்கிறது. இப்போது இவர்கள் சுற்றுலா கைடாக இருக்கிறார்கள்.

Image Courtesy

காக்காவுக்காக :

காக்காவுக்காக :

இங்கே இந்த டவரில் வசிக்கும், வந்து இளைப்பாறும் காக்கைகளை பராமரிக்க ஒரு குழு இருக்கிறது. இந்த டவரில் எப்போது ஆறு காக்கைகள் இருக்க வேண்டும் என இரண்டாம் சாலர்ஸ் மன்னர் கட்டளையிட்டிருக்கிறாராம். இதன் பின்னணியாக இவர்கள் சொல்வது, ஒரு முறை அரசரும் அரசவையைச் சேர்ந்த வானியல் அறிஞரும் டெலஸ்கோப் வழியாக எதையோ பார்த்து ஆய்வு செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது ஒரு அண்டங்காக்கை அரசரின் மீது அதன் கழிவு விழுந்து விட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசர் இங்கிருக்கும் அத்தனை காக்கையையும் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் .

Image Courtesy

மனமாற்றம் :

மனமாற்றம் :

ஏரளமான அரசியல் குழப்பங்கள் எல்லாம் நிலவியதைத் தொடர்ந்து மனமாறிய மன்னர் அதனைக் கொள்வதை நிறுத்தச் சொன்னார். இனி அந்த டவரில் எப்போதும் அண்டங்காக்கை இருக்க வேண்டும், அப்போது தான் அரசவைக்கு நல்லது என்று சொல்லி வைத்தார். இரண்டாம் உலகப்போரின் போதும் இந்த ஆணை தொடர்ந்ததால் இந்த அண்டங்காக்கைகளை பெரும் போராட்டத்தில் காப்பாற்றியிருக்கிறார்கள்.

Image Courtesy

சீனா :

சீனா :

சீன அரசாங்கம் இதனை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் முக்கிய வேலை என்ன தெரியுமா வானிலையை கண்ட்ரோல் செய்வது அதாவது இவர்கள் எந்த இடத்தில் மழை பொழிய வேண்டும் எவ்வளவு நேரம் பொழிய வேண்டும் ஆகியவற்றையெல்லாம் இவர்களே முடிவெடுக்கிறார்கள்.

மிகப்பெரிய திருவிழா அல்லது கொண்டாட்டத்திற்கு முந்தைய நாட்களிலும் வறட்சி பாதித்து பகுதிகளிலும் மழையை பொழிய வைக்கிறார்கள்.

Image Courtesy

ஒலிம்பிக் :

ஒலிம்பிக் :

சீனாவில் நடைப்பெற்ற 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போதிலிருந்து தான் இந்த அமைப்பு செயல்படத் துவங்கியிருக்கிறது. இதில் 32000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

இவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு சீனாவில் கடுமையான பனிப்பொழிவினை உருவாக்கினார்கள். இதற்கு வானத்தில் சில்வர் ஐயோடைட் துகள்களை வானில் வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.

Image Courtesy

அன்னப் பறவை :

அன்னப் பறவை :

பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து இந்த திட்டம் செயல்படுகிறது. அதாவது தேம்ஸ் நதிக்கறையில் அமைதியாக வளம் வருகிற அன்னப்பறவையை பாதுகாக்க வேண்டும் என்று அப்போது மன்னரிடமிருந்து ஆணை வந்திருக்கிறது. அதனை இன்றளவும் கடைபிடிக்கிறார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டில் இதற்கென்றே ஒர் அமைப்பினை உருவாக்கி அவர்கள் தேம்ஸ் நதிக்கறையில் வாழ்கிற அன்னப்பறவையின் எண்ணிகையை சரிபார்க்க வேண்டும் . அதோடு அதற்கு எந்த தொற்றும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்திட வேண்டும்.

1993 ஆம் ஆண்டு இந்த அமைப்பில் பிளவு ஏற்பட்டது. அதன் பிறகு ஆக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓர் பேராசாரியர் டேவிட் பார்பர் இப்போது பார்த்துக் கொள்கிறார் இரண்டாம் எலிசபத் மகாராணி அன்னப்பறவைகளின் கடவுள் என்று வர்ணிக்கப்படுகிறார்.

Image Courtesy

சவுதி அரேபியா :

சவுதி அரேபியா :

சவுதி அரேபியா மக்களிடையே நல்லொழுக்கத்தினை கடைபிடிக்க வைக்கும் விதமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் போதைப் பழக்கம், மது ஆகியவற்றை விற்பனை செய்வதை தடை செய்வது, பெண்கள் சரியாக உடை அணிந்திருக்கிறார்களா என்பதை கண்காணிப்பது, ஆண்கள் சரியாக பள்ளிவாசலுக்குச் செல்கிறார்களா? திருமணம் ஆவதற்கு முன்னால் ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளாமல் இருக்கிறார்களா, பூனை மற்றும் நாயைக் கொண்டு சாலையில் பொது இடத்தில் நடக்காமல் இருக்கிறார்களா ஆகியவற்றினை இவர்கள் கண்காணிப்பார்கள்.

Image Courtesy

மாந்தரீகம் :

மாந்தரீகம் :

அதே போல சவுதி அரேபியாவில் மாந்திரீகத்தில் ஈடுபடுவதையும் தடை செய்திருக்கிறது. அதனையும் இவர்கள் கண்காணிப்பார்கள். இந்த குழுவில் முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அமைப்பு பல நேரங்களில் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் பள்ளியொன்றில் தீவிபத்து நிகழ்ந்திருக்கும் சமயத்தில் இந்த அமைப்பினர் அவர்களை மீட்பதற்காக சென்றிருக்கிறார்கள். அப்போது மாணவிகள் சரியாக தங்கள் உடலை மறைத்துக் கொள்ளவில்லை எனச் சொல்லி அவர்களை காப்பாற்றாமல் விட்டுவிட்டார்கள் இதில் பதினான்கு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் பல்வேறு அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

Image Courtesy

பணம் :

பணம் :

அமெரிக்காவில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இவர்களது முக்கிய வேலை மக்களிடையே புழக்கத்தில் இருக்கக்கூடிய டாலர் நோட்டுகள் திரும்ப அரசாங்கத்திற்கு வரும் போது மிகவும் டேமேஜ் ஆன நிலையில் வருகிறதா என்பதை கண்காணிப்பது.

இது 1866 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, இங்கே பழுதடைந்த டாலர் நோட்டுகள் மற்றும் காயின்களுக்கு பதிலாக அதனை வாங்கிக் கொண்டு புதிய டாலரை வழங்குகிறார்கள். இங்கே எரிந்தது, பாதி கிழிந்த டாலர் நோட்டு, பல காலங்களாக மண்ணில் புதைந்தவை என மிகவும் விசித்திரமாக எல்லாம் வருமாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Unusual Government Agencies Around the World

Unusual Government Agencies Around the World