For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீதா அம்பானியின் ஐ.பி.எல் முகம் - புகைப்படங்கள்!

ஐபிஎல்-ல் நீதா அம்பானி, பலரும் கண்டிராத தருணங்களும், புகைப்படங்களும்!

By Staff
|

குஜராத்தில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து இன்று, இந்தியாவின் முதல் பணக்கார குடும்பத்தை வழிநடத்தி வரும் பெண்மணி நீதா அம்பானி. ஐபிஎல் போட்டிகளில் இவரது பங்கு பெரியது என்றே கூறலாம். இவரது அணியான மும்பை இந்தியன்ஸ் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக திகழ்கிறது.

இதுவரை நடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை வென்று முதல் இடத்திலும், இரண்டு முறை கோப்பை வென்று இரண்டாம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன.

நீதா அம்பானி ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார். இவர் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் நிறுவனரும், தலைவரும் ஆவார். சிறந்த தொழிலதிபராக இருந்தாலும், தனது அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளையும் தவறாமல் பார்த்துவிடும் பழக்கம் இவருக்கு இருக்கிறது. அந்தளவிற்கு இவர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்-ஐ நேசிக்கிறார் என்பது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அறிந்த உண்மை.

இங்கே, பலரும் பார்த்திடாத நீதா அம்பானியின் ஐபிஎல் புகைப்படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஹர்பஜன் சிங் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார். இவர் மொத்தம் விளையாடிய 136 போட்டிகளில் 127 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 5/18 என்பது இவரது சிறந்த பந்துவீச்சாக பதிவாகியிருக்கிறது. இவர் ஒரே இன்னிங்க்ஸில் நான்கு விக்கெட்டுகள் ஒருமுறையும், ஐந்து விக்கெட்டுகள் ஒருமுறையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Image Source

#2

#2

கடந்த பத்து வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வந்த ஹர்பஜன் சிங், இந்தாண்டுக்கு எடுக்கப்பட்ட ஏலத்தின் போது பொது ஏலத்திற்கு வந்தார். அந்த தருணத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. தான் சென்னை அணிக்கு தேர்வானதில் இருந்து அன்று முதல் இன்று வரை தமிழ் கற்றுக் கொண்டும், தமிழில் தட்வீட் பதிவிட்டுக் கொண்டும் அசத்தி வருகிறார்.

Image Source

#3

#3

இந்தியர் தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகியுமான லலித் மோடி தான் ஐபிஎல்ன் முதல் தலைவர் ஆவர். 2008-2010ம் ஆண்டு வரை முதல் மூன்று ஆண்டுகள் இவர் தான் தலைவர் பதிவில் இருந்தார். 2005-2010வரை இவர் பிசிசிஐ-யின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக இவர் ராஜாஸ்தான் கிரிக்கெட் அசோஸியேஷன் பிரெசிடென்ட்டாகவும் (2005-09;2014-15) இருந்துள்ளார்.

Image Source

#4

#4

ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளரும் இந்தியாவில் இருந்து 9000 கோடி கடனுடன் லண்டனுக்கு தப்பித்து சென்ற விஜய் மல்லையாவுடன் ஐபிஎல் நிகழ்வின் ஒரு தருணத்தில் நீதா அம்பானி.

Image Source

#5

#5

ஐபில்'ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆறு வருடங்கள் கேட்பனாக விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். இவர் மொத்தம் விளையாடிய 78 போட்டிகளில் 2334 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோராக ஒருமுறை ஆட்டமிழக்காமல் சரியாக சதம் அடித்திருந்தார் சச்சின்.

Image Source

#6

#6

மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் தலைமையில் ஒருமுறையும் (2013), ரோஹித் ஷர்மா தலைமையில் இருமுறையும் (2015,2017) கோப்பை வென்றுள்ளது. இதுப்போக 2010ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து ஒருமுறை ரன்னர் அப்பாகவும் வந்திருந்தது. அந்த ஐபிஎல் காலண்டரில் சச்சின் மொத்தம் 618 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

#7

#7

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் ஊழல் பிரச்சனைக்கு பிறகு 2013ல் ஐபில் தலைவராக பதவிக்கு வந்தார் ராஜீவ் சுக்லா. இவர் ஒரு இந்திய அரசியல்வாதி, ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகரும் கூட.

Image Source

#8

#8

ராஜீவ் சுக்லா ஐபில் தலைவர் மட்டுமின்றி, பி.எ.ஜி பிலிம்ஸ் லிமிட்டட் நிறுவனர், இயக்குனராகவும், உத்திரபிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளராகவும், இந்திய கிரிக்கெட் அணி மேலாளராகவும் பதவிகளில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

#9

#9

ஐபிஎல் இருபது ஓவர் போட்டிகளில் பங்குபெறும் கொல்கட்டா அணியின் துணை உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் தீவிர ரசிகரான ஷாருக் அவருக்காகவே கொல்கட்டா அணியை தான் வாங்குவதாக கூறினார். இவரது அணி காம்பீர் தலைமையில் இரண்டு முறை (2012, 2014) கோப்பை வென்றுள்ளது.

Image Source

#10

#10

தங்களது நூறாவது ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான். இந்த பெருமை வேறு அந்த அணிக்கும் இல்லை. ஐசிசி போட்டிகளில் எப்படி இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பரம எதிரிகள் போல காணப்படுகிறதோ. அதே போல ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் போட்டிகள் காணப்படுகிறது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unseen Photos of Nita Ambani in IPL

These Unseen Photos Of Nita Ambani From IPL Will Leave You Astonished
Desktop Bottom Promotion