வடகொரியாவின் உண்மை முகத்தை காட்டும் தடை செய்யப்பட்ட புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வட கொரியா தன்னில் பல்வேறு ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது என்பதே உண்மை, பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து அங்கே மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

தன் நாட்டினைப் பற்றிய ரகசியங்கள் வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காக பலவற்றை தடை செய்வதும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு அதிக கவனம் செலுத்தி முறைப்படுத்துவதும் உண்டு. விதவிதமான சட்டங்கள் போட்டு மக்களை ஒடுக்குவதில் வடகொரியாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சொல்லலாம்.

நம்மூரில் மிகவும் பாதுகாப்பான இடம், பிரார்தனை செய்யும் இடங்கள் போன்ற வெகு சில இடங்களில் பாதுகாப்பிற்காக புகைப்படங்களை எடுக்ககூடாது என்று சொல்வோம், ஆனால் வடகொரியாவில் இந்தந்தந்த இடங்களில் போட்டோ எடுக்கக்கூடாது என்பதுடன் நீங்கள் எப்படி எடுக்கலாம், எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கும் சட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியில் கசிந்தால் மக்களின் வாழ்வியல் முறை பிறருக்கு தெரிந்து விடும் அல்லவா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மக்கள் கேட்ஜெட்டுகளை பயன்படுத்தும் வகையிலான போட்டோக்கள் எடுப்பது எந்த விதமான தொந்தரவுகளையும் கொடுக்காமல் இருந்திருக்கிறது, இதிலென்ன எங்கள் மக்கள் கணினியை எல்லாம் சர்வ சாதரணமாக பயன்படுத்துகிறார்கள் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள் பிறகு தான் அப்படி எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவது போல எடுக்கப்பட்ட புகைப்படங்களில் எல்லாம் கரண்ட் இல்லாமல் வெறும் போஸ் மட்டும் கொடுத்திருக்கிறார்கள் என்று!

Image Courtesy

#2

#2

வடகொரியாவில் மிகவும் குறைந்த அளவிலான மக்கள் தான் கார் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் நடந்தோ அல்லது இருச்சக்கர வாகனம் அல்லது சைக்கிளில் தான் பயணிக்கிறார்கள். அது அரை மணி நேர பயணமாக இருந்தாலும் சரி, நான்கு மணி நேர பயணமாக இருந்தாலும் சரி!

நான்கு மணி நேர சைக்கிளில் பயணித்து இரண்டு பேர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள், அதனை ஒரு புகைப்படக்காரர் புகைப்படமெடுக்கு அவருக்கு பயங்கரமான திட்டு விழுந்ததாம் காரணம்.... வட கொரியாவில் மக்கள் சோர்வாக இருப்பது போல புகைப்படம் எடுக்க தடையாம்!

Image Courtesy

#3

#3

வட கொரியாவில் இருக்ககூடிய கோடிக்கணக்கான குழந்தைகள் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய உணவே கிடைக்காத போது சத்தான உணவுகளை தேடி உட்கொள்ளவா முடியும்?

இதற்கு முக்கிய காரணமாக வட கொரியாவில் உணவு உற்பத்தி என்பது பெரிதும் குறைந்து விட்டது தான். பசியில் இருக்கும் குழந்தை அல்லது போதிய ஊட்டச்சத்து இல்லாமல் உடல் மெலிந்து காணப்படும் குழந்தை ஆகியவற்றை புகைப்படம் எடுக்க தடை! காரணம், அங்கிருக்கும் மக்களில் சத்துக்குறைபாடு உள்ளவர்கள் யாருமே இல்லை எல்லாரும் மகிழ்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறார்கள் என்று தான் அரசாங்கம் பிறருக்கு நம்ப வைக்க முயல்கிறது என்பதால்

Image Courtesy

#4

#4

வட கொரியாவில் பெரும்பாலான மக்கள் கார் வைத்திருக்கவில்லை என்பதால் பலரும் நடைபயணமாகவோ அல்லது இரண்டு சக்கர வாகனத்தில் தான் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

அதை விட கொடுமை, வட கொரியாவில் பொது மக்கள் போக்குவரத்திற்கு என்று எந்த வசதிகளும் இல்லை. நீங்கள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றாலும் நடந்தோ அல்லது இரண்டு சக்கர வாகனத்திலோ செல்லலாம் அப்படியில்லையெனில் சாலையில் வருகின்றவர்களிடத்தில் லிஃப்ட் கேட்டு செல்லலாம்.

Image Courtesy

#5

#5

நம்மூர் ஹைவேஸ்களில் எல்லாம் லாரி, வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் எல்லாம் விரைந்து சென்று கொண்டிருக்கும் ஆனால் இங்கே மக்கள் கூட்டம் கூட்டமாகவோ அல்லது தனியாகவோ நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆங்காங்கே வருகின்ற வாகனத்தை மறித்து லிஃப்ட் கேட்க காத்திருக்கிறார்கள். லிஃப்ட் கொடுப்பதிலும் சில வரைமுறைகள் இருக்கிறது, லிஃப்ட் கேட்பவர்களில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து லிஃப்ட் கொடுக்க வேண்டுமாம்!

Image Courtesy

#6

#6

விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் விவசாயத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவத்தில் புதிதாக சேர்ந்திருப்பவர்கள், குறைந்த ரேங்க் எடுத்திருப்பவர்கள், அல்லது ஷூட் செய்யும் போது தவறாக சுட்டவர்கள் போன்ற ராணுவ வீரர்களை எல்லாம் விவசாயம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

அவர்கள் விவசாயம் தொடர்பான வேலைகளில் ஈடுபடுவதற்கு ஈடாக உணவு அல்லது குறைந்த அளவிலான பணம் கொடுக்கப்படுகிறது.

Image Courtesy

#7

#7

வடகொரியாவின் தலைநகரான ப்யோங்யாங் என்ற ஊரைத் தவிர பிற ஊர்களில் எல்லாம் மக்கள் மிகவும் வறுமையான சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மிகவும் குறுகிய சாலையில் வறுமை சூழலில் வாழுகின்ற மக்களை புகைப்படமெடுக்க அனுமதியில்லை.

Image Courtesy

#8

#8

தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் அதோடு அந்த கட்டாயத்திலும் மக்கள் இருக்கிறார்கள். வீட்டின் பாத் டப்பில் கூட குடிக்கிற தண்ணீரை சேமித்து வைக்கும் நிலைமையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.

பெரும்பாலான வீடுகளில் குழாய் இல்லை, அடிபம்பில் பிடித்து தான் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.

Image Courtesy

#9

#9

வடகொரியாவில் உள்ள பல்வேறு ஊர்களில் கரண்ட் பயன்படுத்த தடை உள்ளது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டளையுடன் சில மணி நேரங்கள் மட்டும் கரண்ட் வசதி இருக்கிற ஊர்களும் இருக்கின்றன

Image Courtesy

#10

#10

தலைநகரான ப்யாங்கியாங்கில் மட்டுமே பொதுமக்கள் போக்குவரத்திற்கு பஸ் வசதி உள்ளது. தனியார் பேருந்துகளுக்கு அனுமதியில்லை. அதனால் அரசு பேருந்துகள் மட்டும் நீண்ட தூரத்திற்கு சென்று வருகிறது.

இந்த பேருந்தில் பயணிக்க நீண்ட தூரம், அதே சமயம் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Image Courtesy

#11

#11

வட கொரியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை காண்பது மிகவும் அரிது. அவ்வளவு எளிதாக எல்லாம் வெளிநாட்டு மக்கள் அங்கே சென்று வர முடியாது. சீனாவில் இருக்கக்கூடிய வடகொரியாவைச் சேர்ந்த ஹோட்டலில் தங்கி அங்கே ஏன் செல்கிறீர்கள் என்ற காரணத்தை முதலில் தெரியப்படுத்த வேண்டும். பின்னர்

வடகொரியா எம்பசியில் உங்களது பாஸ்போர்ட் கொடுத்துவிட்டு அனுமதிக்காக காத்திருக்க வேண்டும்.

பெரும்பாலும் இதற்கு நிறைய பணம் லஞ்சமாக கேட்கப்படுகிறது..... அவர்கள் சம்மதித்தால் மட்டுமே நீங்கள் அங்கே செல்ல முடியும்.

Image Courtesy

#12

#12

தலைநகரின் நடுவே இந்த கட்டிடம் இருக்கிறது. கிட்டத்தட்ட 105 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் இது. ஹோட்டலாக பயன்படுத்த திட்டமிட்டிருந்தார்கள். இதனை கட்டுவதற்கு 1987 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள் ஆனால் 1992 ஆம் ஆண்டு வரை கட்டி முடிக்கப்படவில்லை அதோடு பணப்பற்றாகுறை காரணமாக கட்டிட வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதன் பிறகு 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் கட்டிட வேலைகள் துவங்கின.

2011 ஆம் ஆண்டு வெளி வேலைகள் முடிந்தாலும் உள்ளே வேலைகள் முடிக்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டு கட்டிடம் திறக்கப்படும் என்று சொல்லப்பட்டு சில மாடிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு என்றார்கள்.... முழு ஹோட்டலும் இன்றளவும் திறக்கப்படாமலே இருக்கிறது.

Image Courtesy

#13

#13

வட கொரியாவில் பெரும்பாலான மக்களின் வீடுகளில் நாட்டின் மூன்று தலைவர்களின் புகைப்படங்கள் கட்டாயமாக இடம்பெற்றிருக்கும். அவர்கள் இரண்டாம் கிம் சுங், இரண்டாம் கிம் ஜோங் மற்றும் கிம் ஜாங் உன்.

ஒரு முறை வடகொரியாவில் வெள்ளம் ஏற்பட்ட போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த இவர்களது புகைப்படங்கள் தண்ணீரில் அடித்து செல்ல இறந்ததாம், இந்த புகைப்படங்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சிறுமி தன் உயிரையும் கொடுத்து அந்த புகைப்படங்களை மீட்டிருக்கிறாள். இன்றளவும் அந்த சிறுமியைப் பற்றி பேசி, அந்த அளவிற்கு இவர்களது புகைப்படங்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்கிறார்கள் வட கொரியப் பெற்றோர்கள்.

Image Courtesy

#14

#14

எப்போது வேண்டுமானாலும் போர் சூழல் வரலாம் என்ற காரணத்தினால் பல்வேறு சாலைகளில் குறிப்பாக எல்லையில் இருக்கிற சாலைகளில் எல்லாம் மிகப்பெரிய பாராங்கற்களுடன் தான் சாலைகள் இருக்கின்றன.

எதிரிகள் நுழையாமல் இருக்க, சுவற்றின் மேலே இருக்கும் இந்த கற்களை தள்ளிவிட எப்போதும் தயாராய் இருக்கிறார்கள். ஒன்று வீரர்கள் இந்த வழியாக வர முடியாது, அல்லது இந்த வழியாக வருகிறவர்கள் உயிரை கொடுக்க வேண்டியிருக்கும்.

Image Courtesy

#15

#15

அனுமதியின்றி ஆயுதங்கள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தால் ஒரு வருடமல்ல இரண்டு வருடமல்ல பல வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும். நீங்கள் மட்டுமல்ல உங்களது அடுத்த மூன்று தலைமுறையினரும் சிறையில் தான் இருக்க வேண்டும்.

Image Courtesy

#16

#16

தலைநகரில் டேக்ஸி வசதிகள் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் இதனை பயன்படுத்த முடியாது கோடிஸ்வரர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் இதனையும் அரசாங்கம் தான் நடத்துகிறது.

இங்கே வரும் சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிக்கிறார்கள் சில குறிப்பிட்ட நகரங்களுக்கு செல்ல ட்ரைன் வசதி இருக்கிறது, ஆனால் அவ்வூர் மக்கள் பயன்படுத்தக்கூடாது வெளிநாடுகளில் இருந்து வருகின்ற சுற்றுலா பயணிகள் அதில் பயணிக்கலாம்.

Image Courtesy

#17

#17

நாட்டின் எல்லையில், கடற்கரை ஆகிய இடங்களில் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டிருக்கும், இது மக்களின் பாதுகாப்பிற்காக அல்ல, மக்கள் தங்கள் ஊர்களை விட்டு வெளியே சென்று விட க்கூடாது என்பதற்காக தங்கள் நாட்டு எல்லையை கடக்க முயன்றால் எலக்ட்ரிக் ஷாக் அடித்து இறக்க நேரிடும் என்பதால் அவ்வழியை பயன்படுத்தவே மக்கள் பயப்படுகிறார்கள். இந்த இடங்களில் உள்ள வேலிகள் எப்போதும் கரண்ட் பாய்ந்து கொண்டிருக்குமாம்.

Image Courtesy

#18

#18

தலைநகரில் பல உயர்ந்த கட்டிடங்கள் இருப்பதைப் பார்த்து வட கொரியா மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். வெளிநாடுகளில் இருப்பது போல ஐம்பது மாடி, நூறு மாடி கட்டிடங்கள் நிறையவே இருக்கிறது.

இவையெல்லாம் வெளியிலிருந்து பார்க்கத்தான் பிரம்மாண்டமாக இருக்கும், ஆனால் உண்மையில் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாமலேயே இருக்கின்றன, அவற்றில் பலவற்றிற்கு கரண்ட் இருக்காதாம்..... ஒவ்வொரு நாளும் லிஃப்ட் இயக்க முடியாமல் இருபதாவது மாடி, நாற்பதாவது மாடி ஏறி இறங்க வேண்டுமென்றால் வட கொரிய மக்கள் ரொம்பவே பாவம் தான்.....

Image Courtesy

#19

#19

உங்கள் வீட்டில் டிவி அல்லது ரேடியோ இருந்தால் நீங்கள் கண்டிப்பாக அதிபர் பேசுவதை பார்ப்பது அல்லது கேட்பது கட்டாயம். அது வீடாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி, அதிபர் உரையாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் உடனேயே தங்கள் வேலைகளை விடுத்து அதிபர் பேசுவதை கேட்க தயாராகி விடுகிறார்கள்.

இதை மாற்றினாலோ அல்லது மறுத்தாலோ உங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

Image Courtesy

#20

#20

வெளிநாட்டிலிருந்து பார்க்கப்படுகிற சேட்டிலைட்க்கு தங்கள் நாடு மிகவும் வளர்ச்சியடைந்த நாடு என்று காண்பிக்க ஆங்காங்கே கிராமங்களில் மிக உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

பெரும்பாலும் இங்கே மக்கள் வசிப்பதில்லை. அவ்வப்போது அரசங்கமே மக்களை வெளியூரில் வாழுகின்ற மக்களை இனி இங்கே தான் வாழ வேண்டும் என்று சொல்லி இறக்கிவிடுவது உண்டு. மிகவும் நவீனமான கட்டிடங்கள் தென்பட்டால் அங்கே மக்கள் வசிப்பதில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

Image Courtesy

#21

#21

பெரும்பாலான மக்கள் போதிய உனவு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள். சர்வதேச சந்தையில் வட கொரியாவிற்கு பலத்த அடி ஏற்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் இருக்கிறது.

தலைநகரில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிலியே எல்லாம் இப்படி காலியாக இருக்கும் பட்சத்தில் வடகொரியாவின் பிற ஊர்களின் நிலைமையை நினைத்துப்பாருங்கள். உள்ளூரில் விளையக்கூடிய ஆப்பிள், டர்னிப் போன்றவை தான் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கிறது.

Image Courtesy

#22

#22

மக்களை நம்ப வைப்பதற்காக, வெளிநாடுகளுக்கு வடகொரியா மிகவும் சுதந்திரமான நாடாக இருக்கிறது என்பதை காட்ட நடிகர்களை வைத்து எங்கள் ஊரில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கிறார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

எங்கும், ஒவ்வொரு கிராமத் தெருக்களிலும் மிலிட்டிரி இருக்கிறது, அதோடு அனைத்து இடங்களிலும் கேமரா மற்றும் மைக் கொண்டு மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். அது தலைநகராக இருந்தாலும் சரி, கடைக்கோடி ஊராக இருந்தாலும் சரி.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Unseen And Banned Pictures Of North Korea

Unseen And Banned Pictures Of North Korea