இந்த நூற்றாண்டின் முடிவில் வங்கதேசம் எப்படியிருக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் 47வது சுதந்திர தினம் இன்று. தென்னாசியாவின் வடகிழக்குப் பகுதியில் வங்க தேசம் அமைந்திருக்கிறது, ஒரு பக்கம் இந்தியா இன்னொரு பக்கம் வங்க கடல் எல்லைகளாக இருக்கின்றன. இயற்கை அழகை ரசிக்க வங்க தேசம் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். அந்த அளவிற்கு இயற்கை வளங்கள் அங்கே நிரம்பியிருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு வங்கதேசம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. வங்கதேசத்தை கிழக்கு பாகிஸ்தான் என்றே அழைத்தார்கள். அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்தியா பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானிடமிருந்து வங்க தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது. கிழக்கு பாகிஸ்தான் தனி நாடானது.

வங்கதேசத்தைப் பற்றி மிகவும் சுவாரஸ்யமான சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1757 ஆம் ஆண்டு

1757 ஆம் ஆண்டு

வங்கதேசப்பகுதியை வரிசையாக இந்தியர்கள், துருக்கியர்கள்,முகலாய பேரரசர்கள், பிரிட்டிஷ் என ஆட்சி செய்து வந்திருக்கிறாரக்ள். 1757 ஆம் ஆண்டு ப்ளாஸ்ஸி போரின் போது கிழக்கிந்திய கம்பெனி முகாலாயர்களிடமிருந்து வங்க தேசமிருக்கும் பகுதியை கைப்பற்றுகிறது. 200 ஆண்டுகள் வரை பிரிட்டிஷ் பிடியிலேயே இருந்தது வங்க தேசம்.

Image Courtesy

கொள்ளை லாபம்

கொள்ளை லாபம்

இயற்கை வளங்கள் நிரம்பிய அந்த பகுதியிலிருந்து ஆங்கிலேயர்கள் கொள்ளை லாபத்தை சம்பாதித்தனர். மூங்கில்,டீ,கரும்பு,பஞ்சு,சணல், என ஏராளமான மூலப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1857 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சிப்பாய் கலகத்தின் போது பிரிட்டிஷ் பிடியிலிருந்து இந்த பகுதி தப்பித்தது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வங்கதேசம் இரண்டாக உடைந்தது ஒன்று கிழக்கு பாகிஸ்தான் என்றும் இன்னொன்று மேற்கு பாகிஸ்தான் என்றும் சொல்லப்பட்டது. இதில் கிழக்கு பாகிஸ்தான் மட்டும் 1971 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வங்கதேசம் என்ற தனி நாடு அந்தஸ்த்தினைப் பெற்றது.

Image Courtesy

 முகமது அலி ஜின்னா

முகமது அலி ஜின்னா

வங்கதேசத்தை இரண்டாக பிரிக்கலாம். வங்கலா என்ற மொழியையும் தேசம் என்றால் நாடு இரண்டையும் சேர்த்து வங்கதேசம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு முஸ்லீம் லீகின் தலைவர் முகமது அலி ஜின்னா உருது தான் பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அறிவிக்கிறார். இது வங்கல மொழி பேசும் மக்கள் நிரம்பியிருக்கும் கிழக்கு பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முஸ்லின்

முஸ்லின்

வங்கதேசத்தில் தயாரிக்கப்படுகிற ஒரு வகை காட்டன் துணி தான் முஸ்லின், கைகளால் தயாரிக்கப்படுகிற இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. வங்கதேசத்தின் மோசுல் என்ற இடத்திலிருந்து இந்த துணி தயாரிக்கப்படுவதால் அதன் பெயரும் முஸ்லின் துணி என்றே ஆகியிருக்கிறது.

வரலாறு முழுமைக்கும் இந்த துணியை பயன்படுத்தியிருக்கிறார்கள்.எகிப்தியர்கள் இறந்தவர்களை பதப்படுத்தி மம்மியாக வைப்பார்களே அப்போது இந்த துணியைக் கொண்டு தான் சுற்றி வைப்பார்களாம்.

Image Courtesy

 75 சதவீதத்திற்கும் மேல் லாபம்

75 சதவீதத்திற்கும் மேல் லாபம்

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது இந்த துணியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றுண்டுகளில் மட்டும் 75சதவீதத்திற்கும் மேல் லாபம் கிடைத்திருக்கிறது. இன்றளவும் வங்கதேசத்தில் இந்த துணியை பயன்படுத்துகிறார்கள்.ஆனால் இன்றைக்கு பெர்ஷிய மொழியின் ல் ஜம்தானி என்று அழைக்கிறார்கள். இதற்கு யுனெஸ்கோ கலாச்சார குறியீட்டினை வழங்கியிருக்கிறது.

Image Courtesy

 கார்மெண்ட்ஸ்

கார்மெண்ட்ஸ்

உலகின் மிகப்பெரிய கார்மெண்ட்ஸ் நிறுவங்கள் பலவும் வங்கதேசத்தில் தங்களது உற்பத்தியை முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கார்மெண்ட்ஸ் நிறுவனங்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன. வங்கதேசத்தின் பொருளாதரத்தில் இந்நிறுவனங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.

அதோடு பெண்களின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகிறது. கார்மெண்ட்ஸ்களில் பணியாற்றுவோரில் 80 சதவீதம் பெண்கள் தான்.

Image Courtesy

 உலகிற்கு வெட்டவெளிச்சம்

உலகிற்கு வெட்டவெளிச்சம்

2013 ஆம் ஆண்டு ரானா ப்ளாஸா என்ற கட்டிடம் இடிந்து விழுந்தது. அங்கு ஓர் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள் 2500 பேர் வரை படுகாயமடைந்தார்கள். இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் இதர விஷயங்கள் அப்போது தான் உலகிற்கு வெட்டவெளிச்சமானது.

Image Courtesy

உண்மைகள்

உண்மைகள்

ஊழியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமே சரிவர பின்பற்றப்படுவதில்லை என்று கண்டுபிடித்தார்கள். அதோடு தொழில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாடியாக கூடுதலாக கட்டிக் கொண்டே சென்றிருக்கிறார்கள். இப்படி கட்டப்படுகிற கட்டிடங்களுக்கு முறையான அனுமதி எதுவும் கிடையாது. அப்படியே எப்போதாவது அதிகாரிகள் சோதனையிட வந்தால் லஞ்சம் கொடுத்து அனுப்பி விடுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள். சில நேரங்களில் மிரட்டலும் தொடர்ந்திருக்கிறது.

இதோடு இந்தப் பிரச்சனை முடிந்துவிடவில்லை. குழந்தைத் தொழிலாளர்கள், தொழிலாளர்களை அடிமைகளாக வேலை வாங்குவது, குறைந்த கூலி உட்பட பல்வேறு உண்மைகள் வெளிப்பட்டன.

Image Courtesy

 ஊழல் நிரம்பிய நாடு

ஊழல் நிரம்பிய நாடு

உலகிலேயே அதிக ஊழல் நிரம்பிய நாடுகள் பட்டியலில் வங்கதேசம் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது,அனைத்து பொதுத்துறை அலுவலகங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. வங்கதேசத்தில் வசிக்கிற அனைத்து மக்கள் குழந்தைகளை தவிர்த்து ஒவ்வொருவரும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். இதில் 53 சதவீதம் பேர் வரையில் க்ரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்களாக இருக்கிறார்கள்.

Image Courtesy

1 பில்லியன் அமெரிக்க டாலர்

1 பில்லியன் அமெரிக்க டாலர்

சமீபத்திய வரலாற்றில் வங்கியில் நடைப்பெற்ற கொள்ளை சம்பவங்களில் அதிகத் தொகை கொள்ளை போனது வங்கதேசத்தில் தான். 2016 ஆம் ஆண்டு வங்கதேச செண்ட்ரல் வங்கியில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

உலக நாடுகளின் மிகவும் ஏழ்மையான நாடுகள் பட்டியலில் வங்கதேசம் இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் வறுமைகோட்டுக்கு கீழ் வசிக்கிறார்கள்.

Image Courtesy

பெங்கால் டெல்டா

பெங்கால் டெல்டா

பெங்கால் டெல்டா என்ற ஆறு வங்கதேசத்தின் கடலோரத்தில் அமைந்திருக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய ஆறு இது தான். இங்கிருந்து தான் ஹிமாலயாவின் பிரம்மபுத்திரா மற்றும் கங்கைக்கு இங்கிருந்து தான் பெரும்பாலான தண்ணீர் கிடைக்கிறது. இது தவிர வங்காளத்தில் இருந்து வரக்கூடிய மேக்னா என்ற ஆற்றிலிருந்து பத்மா மற்றும் ஜனுமா என்ற இரண்டு கிளை நதிகள் ஓடுகிறது.

உலகிலேயே அதிக சத்துக்கள் நிறைந்த மண் வங்காள மண் தான். இங்கிருக்கும் பெரும்பாலானோருக்கு விவசாயம் தான் தொழிலாக இருக்கிறது.

Image Courtesy

வெள்ளம்

வெள்ளம்

வெள்ளம் இங்கு மிக சாதரணமானது. இங்கிருக்கும் 80 சதவீதம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பர். அதோடு மண் சரிவு உட்பட இயற்கை பேரிடர்களும் அதிகம். சமீபத்தில் கடலோரங்களில் வசித்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வரை தங்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள். இப்படியே நிலைமை சென்றால் இந்த நூற்றாண்டின் இறுதியிலேயே வங்காளதேசம் இருக்காது என்று எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Image Courtesy

புத்தாண்டு விழா

புத்தாண்டு விழா

போஹெலா போய்ஷக் என்பது வங்காளிகள் கொண்டாடும் புத்தாண்டு விழா. அங்கே நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் இதுவும் ஒன்று. வங்கதேசம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஏப்ரல் 14 மற்றும் 15 தேதிகளில் இந்த விழா கொண்டாடப்படும். வங்கதேசத்தின் தேசிய பழமாக இருக்கும் பலாப்பழம் இங்கு மிகவும் சுவையுடையதாக இருக்கும்.

Image Courtesy

2000 இதழ்

2000 இதழ்

இங்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் இதழ்கள் வரை வெளியாகிறது. நாட்டின் மக்கள் தொகையில் பதினைந்து சதவீதம் பேர் தான் படிப்பவர்கள் இருக்கிறார்களாம். இருந்துமே 2000 இதழ்களை தயாரிக்கிறார்கள். காலங்களை வகைப்படுத்தும் போது நாமெல்லாம் நான்கு காலங்கள் என்று தானே படித்திருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் ஆறு காலங்கள் ஏற்படுகிறது.

Image Courtesy

பெங்கால் டைகர்

பெங்கால் டைகர்

ராயல் பெங்கால் டைகர் தான் இவர்களுக்கு தேசிய விலங்கு. இந்த புலி கத்துவது மூன்று கிலோமீட்டருக்கு அப்பாலும் கேட்குமாம். துரதிஷ்டவசமாக இந்த புலி அழிந்து வரும் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. வங்காள மக்களைப் பொருத்தவரையில் சிரிப்பு என்பது தங்களை சிறுமைபடுத்திக் காட்டும் என்று நினைக்கிறார்கள் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Unknown Facts About Bangladesh

Unknown Facts About Bangladesh
Story first published: Monday, March 26, 2018, 15:12 [IST]