Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
பதவிக்கு வந்த ரெண்டு மாசத்துலயே இவ்ளோ அக்கப்போரா?
திரிபுராவின் முதல்வராக இரண்டு மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்றுக் கொண்ட பிப்லாப் தேவ் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அப்படி என்ன தான் சர்ச்சைகள் இதில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதெல்லாம் தெரிஞ்சு செய்றாங்களா இல்ல தெரியாம செய்றாங்களான்னே தெரியல....ஒரு வாட்டி ரெண்டு வாட்டின்னா சரி போனா போகுதுன்னு சொல்லலாம். பேசுறப்ப எல்லாம் சர்ச்சையா பேசி சிக்குறாங்களே.... சர்ச்சைப் பேச்சு என்றதும் நீங்கள் தமிழகத்தில் சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களையும் அதைச்சுற்றி நடந்த போராட்டங்கள்,விவாதங்கள், ட்வீட்கள்,அட்மின் கதையெல்லாம் நினைவுக்கு வருகிறதா?
அப்படியானால் இந்த செய்தியும் நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். மார்ச் மாதத்தில் நடைப்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி திரிபுராவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்காரை வீழ்த்தி திரிபுராவின் முதல்வராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டவர் பிப்லாப் குமார் தேவ்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான இவர் தான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் உதிர்த்த சில அருமையான கருத்துக்கள் இங்கே....

அப்பவே அப்பிடி :
கடந்த மாதம் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் தொழில்நுட்ப கருத்தரங்கு நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் என்ன பேசினார் தெரியுமா ? மகாபாரதம் காலத்திலேயே இந்தியாவில் செயற்கைகோள், இணையதள பயன்பாடு ஆகியவை இருந்தது என்றார். மகாபாரத போர் நடைப்பெற்ற போது கண்பார்வையற்ற திருதிராஷ்டிரன் போர்களத்தில் நடப்பதை அரண்மனையில் இருந்தவாரே எப்படி தெரிந்து கொண்டார்? அப்போதே செயற்கைகோள்,இணைய வசதி இருந்ததினால் தான் என்றிருக்கிறார்.
மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் தொழில்நுட்பத்தை தான் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உரிமை கொண்டாடுகின்றன என்றும் பேசியிருக்கிறார்.

யாருக்கெல்லாம் தகுதி :
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கடந்த மாதம் 28 ஆம் தேதி சிவில் சர்வீஸ் நாள் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் பிப்லப் குமார், முன்னாடியெல்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தான் சிவில் சர்வீஸ் பணியை தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால் தற்போது அதிகப்படியான டாக்டர்களும் இன்ஜினியர்களும் அந்த பணியை தேர்வு செய்கிறார்கள். இந்த சமூகத்தை கட்டமைக்க நிர்வாகத்திறன் மிகவும் அவசியமாகும். அந்த திறமை சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களிடத்தில் தான் இருக்கிறது.
அதனால் சிவில் இன்ஜினியரின் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.சிவில் சர்வீஸ் மற்றும் சிவில் இன்ஜினியரிங் இரண்டையும் குழப்பிக் கொண்டார் போலும்.

மாடு மேய்க்கலாம் வாங்க :
தகுதியில்லை என்று சொன்னதோடு நில்லாமல் அவர்கள் வேறு என்ன தொழில் செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறார் முதல்வர், அதோடு அந்த தொழில் செய்வதினால் ஐந்து லட்சம் வரையிலும் சம்பாதிக்க முடியும் என்று உறுதியளித்திருக்கிறார்.
இளைஞர்கள் அரசு வேலைக்காக அரசியல் கட்சியினர் பின்னால் அலையக்கூடாது. இது அவர்களின் வாழ்க்கையையும், காலத்தையும் வீணாக்கிவிடும். இப்படி அலைவதற்கு பதிலாக வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம். அப்படி வைத்தால் ஆண்டுக்கு ஐந்து லட்சம் வரையில் நீங்கள் சம்பாதிக்க முடியும் என்றிருக்கிறார்.
இதைத் தவிர பால்மாடு வாங்கி வளர்க்கலாம். அதுவும் இல்லையென்றால் முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழில் துவங்கலாம் என்றிருக்கிறார்.
இவற்றிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியநிலையில், மறுநாள் மன்னிப்பு கேட்டார்.

உலக அழகி என்றாலுமே.... :
இந்த நிகழ்வுக்கு முன்னதாக கைத்தறி கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய போதும் சர்ச்சையில் சிக்கினார் முதல்வர். அந்த நிகழ்வில் பேசியவர்,அழகிப் போட்டு நடத்துபவர்கள் சர்வதேச மாஃபியாக்கள்.
இந்தப் போட்டியின் மூலமாக மக்கள் இந்திய மக்கள் தொகையில் பாதியளவு இருக்கக்கூடிய இந்தியப் பெண்களை கவர்ந்திழுக்க நினைக்கிறார்கள்.
அதன் வெளிப்பாடாகத்தான் இந்தியவிலிருந்து இதுவரை ஐந்து உலக அழகிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார்.

இந்திய அழகு :
பெண்களின் அழகையும் உடலையும் வர்ணித்து ஒரு மாநில முதல்வர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து டயானா ஹைடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிப்லாப் தேவின் கருத்து தன்னை காயப்படுத்திவிட்டதாக தெரிவித்தார். அதோடு, நாம் இந்தியர்கள் நமது தோலின் நிறம் பழுப்பு. இந்த நிறத்தில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று தெரிவித்தார் டயானா.

நான் இந்தியர் :
பெண்களின் அழகையும் உடலையும் வர்ணித்து ஒரு மாநில முதல்வர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து டயானா ஹைடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிப்லாப் தேவின் கருத்து தன்னை காயப்படுத்திவிட்டதாக தெரிவித்தார்.
அதோடு, நாம் இந்தியர்கள் நமது தோலின் நிறம் பழுப்பு. இந்த நிறத்தில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று தெரிவித்தார் டயானா.

இந்திய அழகு என்றால் என்ன? :
இந்த கருத்துக்கள் தெரிவிக்கும் போது இந்திய அழகுக்கு ஓர் விளக்கமும் அளித்தார் முதல்வர், இந்தியப் பெண்கள் தங்களுடைய அழகை மெருகேற்ற மேக்கப் பொருட்களை பயன்படுத்தியதில்லை.
அழகு சாதனப் பொருட்கள் மட்டுமல்ல ஷாம்புவைக் கூட பயன்படுத்தியதில்லை. இந்தியப் பெண்கள் தங்கள் கூந்தலில் உள்ள பொடுகுகளை அகற்ற செம்பருத்தி இலைகளை தான் பயன்படுத்தினார்கள்.
தலைமுடியை பராமரிக்க வெந்தயத் தண்ணீரை பயன்படுத்தினார்கள். சருமத்திற்கு சேற்றை பயன்படுத்தினார்கள் என்றிருக்கிறார்.
இதற்கும் பல தரப்புகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

பூர்வகுடி :
திரிபுராவில் பூர்வகுடிகளாக வாழும் மக்களின் தாய்மொழி காக்போர்க். இந்த மொழியில் உள்ளூரில் செய்தி நிறுவனங்கள் இருக்கிறது. இனி காக்போர்க் மொழியில் செய்திகளை வெளியிடக்கூடாது, எல்லாமே ஹிந்தி மொழியில் தான் வெளியிட வேண்டும் என்று விவாதம் நடைப்பெற்றதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்கட்சிகள், மக்கள் என பல தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அரசு அப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு மே முதலாம் தேதி தொழிலாளர் தினத்தன்று ஊர்வலம் சென்ற மக்களை விவேகானந்தர் படத்தை விட்டுவிட்டு இப்படி வெளிநாட்டு தலைவர்களின் படத்தை எடுத்துச் செல்லலாமா என்று சொல்லி அடித்திருக்கிரார்கள். இதில் ஆறு பேர் வரையில் காயமடைந்திருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications