For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இடங்களில் விளக்கேற்றி வழிபடுவர்களுக்கு சனிபகவான் நன்மைகளை மட்டுமே வழங்குவார்

சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளது. சனிபகவானுக்கும், அமாவாசைக்கும் எப்பொழுதும் ஒரு தொடர்பு உள்ளது. அமாவாசை அன்று சனிபகவானை வணங்குவது என்பது கூடுதல் சிறப்பான ஒன்றாகும்.

|

சனிபகவான் ஒருவரின் வாழ்க்கையில் நுழைந்துவிட்டால் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எல்லையே இருக்காது. ஏனெனில் சனிபகவான் நாம் செய்த பாவங்களுக்கு வாழும்போதே தண்டனை கொடுக்க வேண்டுமென சனிபகவானுக்கு சிவபெருமான் வரம் கொடுத்திருக்கிறார். எனவே அவர் நம்மை வதைப்பதில் இருந்து தப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

things to do this Shani Amavasya to remove career related obstacles

ஆனால் சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளது. சனிபகவானுக்கும், அமாவாசைக்கும் எப்பொழுதும் ஒரு தொடர்பு உள்ளது. அமாவாசை அன்று சனிபகவானை வணங்குவது என்பது கூடுதல் சிறப்பான ஒன்றாகும். இந்த பதிவில் அம்மாவாசை அன்று சனிபகவானை எப்படி வணங்கினால் உங்கள் வாழ்க்கையின் சிக்கல்கள் தீரும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனி அமாவாசை

சனி அமாவாசை

அமாவாசை அன்று சனிபகவானை வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்றாகும், அதிலும் சனிக்கிழமை அன்று அமாவாசை வந்தால் அது மிக மிக சிறப்பாகும். அமாவாசை அன்று சனிபகவானுக்கு மட்டுமின்றி உங்கள் வீடுகளில் சில இடங்களில் விளக்கேற்றுவது கூட உங்கள் எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும் பாதுகாக்க உதவும்.

நுழைவாயிலில் விளக்கேற்றுதல்

நுழைவாயிலில் விளக்கேற்றுதல்

சனி அமாவாசை அன்று விளக்கேற்றுவது உங்களுக்கு சிறந்த நன்மையை அளிக்கும். நிலவில்லாத அமாவாசை அன்று உங்கள் வீட்டில் இரண்டு விளக்கேற்றுவது சனிபகவானை மகிழ்ச்சியடைய வைக்கும். வீட்டின் வாசலில் இரண்டு புறமும் மண்விளக்கை ஏற்றி வையுங்கள். இது உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்றி உங்கள் வாழ்க்கையில் கொண்டாட்டத்தை உண்டாக்கும்.

பூஜையறையில் விளக்கேற்றுதல்

பூஜையறையில் விளக்கேற்றுதல்

உங்கள் வீட்டு பூஜையறையில் மணிவிளக்கு ஏற்றி வைப்பது உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை வழங்கும். இவ்வாறு விளக்கேற்றி வைப்பது உங்கள் இல்லத்திற்கு செல்வத்தை வழங்குவதுடன் உங்கள் இல்லத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடும்.

துளசி செடிக்கு அருகே விளக்கேற்றுதல்

துளசி செடிக்கு அருகே விளக்கேற்றுதல்

துளசி மிகவும் புனிதமான ஒரு செடியாக கருதப்படுகிறது. துளசி மருத்துவ மற்றும் ஆன்மீக பலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அமாவாசைஅன்று அதற்கு அருகில் விளக்கேற்றி வைக்க தவறிவிடாதீர்கள். அமாவசை இரவு அன்று துளசி செடி அருகே விளக்கேற்றி வைப்பது உங்கள் வீட்டிற்கு கடவுளை அழைத்து வரும்.

MOST READ: தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

மாடியில் விளக்கேற்றுதல்

மாடியில் விளக்கேற்றுதல்

உங்கள் வீட்டு மாடியில் விளக்கேற்றி வைக்க மறந்துவிடாதீர்கள். இது விளக்கேற்றி வைக்க மிகவும் முக்கியமான இடமாகும். அமாவாசை இரவு உங்கள் வீட்டு மாடியில் விளக்கேற்றி வைப்பது உங்கள் வீட்டிற்கு நல்ல சக்திகளையும், மேலும் வீட்டில் அமைதியையும், செல்வத்தையும் பெருகச்செய்யும்.

அரச மரம் அருகே விளக்கேற்றுதல்

அரச மரம் அருகே விளக்கேற்றுதல்

உங்கள் வீட்டு அருகே அரச மரம் இருந்தால் அதற்கு அருகில் விளக்கேற்றி வைக்க மறந்துவிடாதீர்கள். இது உங்களுக்கு சனிபகவானால் ஏற்படும் பல பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். இதனை செய்யும்போது தூய்மையான மனதுடனும் நல்ல எண்ணங்களுடனும் செய்யுங்கள்.

ஏன் விளக்கேற்ற வேண்டும்?

ஏன் விளக்கேற்ற வேண்டும்?

நாம் செய்யும் ஒவ்வொரு சடங்கிற்கு பின்னாலும் ஒரு அறிவியலும், ஒரு புத்திசாலித்தனமும் இருக்கும். இவ்வாறு விளக்கேற்றுவதிலும் சில நன்மைகளும், அறிவியலும் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

விளக்கேற்றுவதன் அர்த்தம்

விளக்கேற்றுவதன் அர்த்தம்

விளக்கில் உள்ள எண்ணெய் நமது மனதில் உள்ள தீய எண்ணங்களான பேராசை, காமம், கோபம் போன்றவற்றை பிரதிபலிக்கிறது. இதில் இடப்படும் திரி மனிதர்களின் ஆத்மாவை பிரதிபலிக்கும். உங்கள் ஆத்மாவை கொண்டு இந்த தீய எண்ணங்களை அறிவு என்னும் நெருப்பு கொண்டு எரிக்கும்போது உங்களுக்கு வெளிச்சம் என்னும் ஞானம் கிடைக்க வழிவகுக்கும்.

MOST READ: ஆண்கள் படுக்கையில் அதிக செயல்தினுடன் இருக்க, தினமும் 1 கிளாஸ் பீர் குடித்தாலே போதுமாம்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

things to do this Shani Amavasya to remove career related obstacles

If you feel that Shani has his eye on you and you want to turn it to his bestowing his kind blessings upon you, here are some simple things you can do to remove all obstacles in your career.
Desktop Bottom Promotion