For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் நினைப்பதை காட்டிலும் இவை உருவத்தில் ஜைஜாண்டிகானவை - புகைப்படத் தொகுப்பு!

|

நம் உலகில் சுவாரஸ்யத்திற்கு அளவே இல்லை. கற்றது கைமண் அளவு, அறியாதது கடலளவு என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், சில சமயம் நாம் அறிந்த அந்த கைமண் அளவு கூட தவறாகவோ அல்லது உண்மையில் பாதியாகவோ இருக்க வாய்ப்புகள் உண்டு.

நாம் சில சமயம் சிலரது திறமையை அவரது உயரத்துடன் ஒப்பிட்டு தப்புக்கணக்கு போடுவதுண்டு. அப்படி தான் சில விஷயங்கள், பொருட்கள், உயிரினங்கள், இடங்கள் குறித்து, அதன் உண்மையான உயரம், உருவத்தை பற்றி நாம் அறியாதிருக்கிறோம். இந்த படங்கள் நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தலாம். வாங்க, பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மான்களில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்று தான் கடமான். அடர்ந்த காடுகளுக்குள் வாழும் இந்த கடமான்கள் உருவத்தில் மிகவும் பெரியவை. நாம் வனவிலங்கு பூங்காக்கள் அல்லது படங்களில் காணும் வகையில் இவை சிறியதாக இருக்காது. ஏறத்தாழ ஒரு காரினை காட்டிலும் பெரிய உருவம் கொண்டவை இந்த கடமான்கள். இதோ! இந்த படத்தில் பார்த்தாலே, அது ஒரு மனிதனுக்கு அருகே எத்தனை பெரியதாக இருக்கும் என்பதனை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

Image Source: Imgur

#2

#2

இயல்பாகவே முதலை என்றால் நமக்கு மிகவும் அச்சம். வனவிலங்கு பூங்காக்களில் சாதுவாது ஒரு பெரிய குழிக்குள் கற்சிலை போல கிடைக்கும் முதலைகள் நீரில் ராஜா. நிலத்தில் அவற்றால் வேகமாக இயங்க முடியாது என்றாலும், நீரில் அவை ஒரு யானையையே சாய்த்து விடும் அளவிற்கு வல்லமை கொண்டிருக்கும். அதிலும், நாம் பார்க்கும் அளவிற்கு ஆறு, ஏழடி நீளம் கொண்ட முதலைகள் மட்டும் தான் உலகில் என்று நினைத்தால், நாம் தான் முட்டாள். இதோ! இந்த படத்தில் இருக்கும் முதலியை பாருங்கள். எவ்வளவு ஜைஜாண்டிகாக இருக்கிறது.

Image Source: Reddit

#3

#3

டைட்டானிக் என்றாலே நமக்கு நினைவு வருவது இரண்டு விஷயம். ஒன்று ஜாக், ரோஸ் காதல், மற்றொன்று உலகம் மறக்க முடியாத பெரும் விபத்து. டைட்டானிக் அதன் பெரிய உருவத்திற்கு பெயர்போன கப்பல். ஆனால், இந்த காலத்தில் நிறைய சொகுசு கப்பல்கள் டைட்டானிக்கை காட்டிலும் பல மடங்கு உருவத்தில் பெரியதாக இருக்கின்றன. அவற்றுக்கு முன் டைட்டானிக் ஒரு படகு போல தான் காட்சி அளிக்கும்.

Image Source: oldsaltblog

#4

#4

நாம் தினமும் காணும் பொருட்களில் ஒன்று ட்ராபிக் சிக்னல். பெரும்பாலும்..., அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த ட்ராபிக் சிக்னல் நம்மக்கு சிறிய பொருள் போல தான் தென்படும். ஆனால், அதை கீழே இறக்கை ஒரு நபரின் உருவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால்.. படத்தில் நீங்கள் காண்பது போல இவ்வளவு பெரிதாக இருக்கும். இதை, நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

Image Source: Reddit

#5

#5

பிரமிடுகள் பெரியவை என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அதிலும், தி கிரேட் பிரமிடு என்று அழைக்கப்படும் கிஸா பிரமிடு உலகின் உயர்ந்த பிரமிடுகளில் ஒன்றாக திகழ்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பிரமிடுகள் நாம் நினைப்பதை காட்டிலும் உருவத்தில் பெரியவை. அதற்கு உதாரணம் தான் இந்த புகைப்படம். நன்கு உத்து பாருங்கள்., பிரமிடின் அடி பாகத்தில் அமர்ந்திருக்கும் இந்த பெண் எத்தனை குட்டியாக இருக்கிறார்...

Image Source: Instagram

#6

#6

நூறு, ஆயிரம், இலட்சம், கோடி, மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என எண்ணிக்கையில் பல நிலைகள் உண்டு. அதில், பேச்சுவழக்கில் மில்லியனுக்கு அடுத்து பில்லியன் என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், மில்லியனை காட்டிலும் பில்லியன் எத்தனை பெரியது என்பதை நாம் சரியாக அறிவதில்லை. உதாரணமாக இந்த ட்வீட்டில் இடம் பெற்றிருக்கும் தகவலை காணுங்கள்.. ஒரு மில்லியன் நொடிகள் என்பது 11 நாட்கள். அதுவே ஒரு பில்லியன் நொடிகள் என்பது 31.5 ஆண்டுகள். இப்போது தெரிகிறதா... மில்லியனை காட்டிலும், பில்லியன் எத்தனை பெரியது என்று.

#7

#7

நிச்சயம் வாழ்நாளில் ஒருமுறையாவது நீங்கள் இதுக்குறித்து சிந்தித்து வியந்திருக்க கூடும். நம்மால் நூறு மீட்டர் மூச்சிரைக்காமல் வேகமாக ஓட முடியாது. ஆனா, குதிரை மட்டும் எப்படி அத்தனை தூரம் வேகமாக அதுவும் மூச்சிரைக்காமல் ஓடுகிறது என்று சிந்தித்திருப்போம். அதற்கு காரணம்.. அதன் நுரையீரல். இதோ! குதிரையின் நுரையீரல் எத்தனை பெரியதாக இருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

Image Source: reddit

#8

#8

ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள். அது, இயலாமை, முயலாமை... என்பதை குறிக்கிறது. சிலர் ஆமை வீட்டில் இருந்தால் ராசி என்று கருதுவார்கள். பலநூறு ஆண்டுகள் ஆயுள் கொண்டிருக்கும் விலங்கினம் ஆமை. நாம் பெரும்பாலும் நமது கையளவு அல்லது ஓரிரு அடி நீளம் கொண்ட ஆமையை தான் பார்த்திருப்போம். ஆனால், உலகின் சில கடற்கரைகளுக்கு சென்று வந்தால்... ஆமைகள் உண்மையில் எத்தனை பெரியதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள இயலும். இதோ! இந்த ஆமை குறைந்தது எட்டில் இருந்து 12 அடி நீளம் இருக்கும்.

Image Source: iiNature

#9

#9

ஆமையை விடுங்கள்... நத்தையை நிச்சயம் நீங்கள் செண்டிமீட்டார் நீளத்தில் தானே பார்த்திருப்பீர்கள். சில சிறுவர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் சங்கு, சிப்பு என்று கருதி நத்தையை பிடித்து கொன்றுவிடுவார்கள். இதோ! இந்த பெண்ணின் கையில் இருப்பது ஏதோ நத்தை வேடமிட்ட முயல் குட்டி அல்ல. இது! ஒரு உண்மையான நத்தை. குறைந்தது ஒரு அடி நீளமும், உயரமும் இருக்கும் இந்த நத்தை.

Image Souce:reddit

#10

#10

ட்ராபிக் சிக்னல் போலவே, நாம் சாலையில் ஆங்காங்கே தினமும் காணும் மற்றொரு பொருள், விளம்பரம் அல்லது தகவல் போர்டுகள். இந்த போர்டுகள் உயரத்தில் பார்க்கும் போது சிறியதாக இருக்கும். ஆனால், அதை இறக்கி தரையில் வைத்து பார்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை இந்த படத்தை பார்த்தே நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

Image Source: Twitter

#11

#11

ஏறத்தாழ மனிதரை போலவே காணப்படும் உயிரினம் கொரில்லா. கொரில்லா நம்மைவிட உருவத்தில் பெரியது என்று நாம் அறிவோம். ஆனால், என்ன நம்மை விட ஓரிரு அடிகள் உயரமாக இருக்கும் என்பது நமது கணிப்பாக இருக்கும். ஆனால், இந்த படத்தை காணும் பட்சத்தில் அந்த கணிப்பு தவறு என்றும், அதன் உள்ளங்கை மனிதனின் உள்ளங்கையை விட எத்தனை பெரியது என்பதையும் நீங்கள் அறிந்துக் கொள்ள முடியும்.

Image Source: Quora

#12

#12

கடலில் வாழும் பெரிய உயிரினங்களில் ஒன்று நீல திமிங்கலம். நீல திமிங்களும் பல டன் எடையும், பல அடி நீளமும் கொண்ட உயிரினம் ஆகும். ஆனால், அதன் உருவமும், உடல் உறுப்புகளும் எத்தனை பெரியதாக இருக்கும் என்பது குறித்து நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? இதோ! நீல திமிலங்கதின் இதயம் மட்டுமே நாம் பயன்படுத்தும் ஒரு கார் அளவிற்கு பெரியதாக இருக்கிறது.

Image Source: reddit

#13

#13

இந்த உலகம் இன்றும் பல காயங்களுடன் வேகமாக சுழன்று வருகிறது என்றால், அதற்கு காரணம் மரங்கள் தான். மரங்கள் அழிந்துவிட்டால் அதை தொடர்ந்து தாவர உண்ணிகள், பறவைகள், காட்டு விலங்குகள், மனிதர்கள் என்று அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும். மரத்தை காணாத மனிதர் இலர். ஆனால், இந்த மரத்தை பற்றி நீங்கள் அறிந்தது உண்டா? இதன் உயரம் 275 அடி ஆகும். தற்போதைக்கு உலகின் உயரமான மரமாக இது தான் அறியப்படுகிறது. Sequoia National Parkவில் இருக்கிறது. இதன் பெயர் General Sherman Tree.

Image Source:reddit

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Are Much Larger Than You Thought They Were.

Things That Are Much Larger Than You Thought They Were.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more