Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை!
Unhealthy Foods In Tamil: தற்போதைய நவீன உலகில் நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் தான். அதுவும் தற்போது ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விற்பனை அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி புதுபுது கார்பனேட்டட் பானங்களும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் ஒருவரை அந்த சுவைக்கு அடிமைப்படுத்தும் வகையில் மிகவும் சுவையாக இருப்பதால், மக்கள் அடிக்கடி இந்த வகை உணவுகளை வாங்கி உட்கொள்கின்றனர். ஆனால் இந்த உணவுகள் ஒருவரது உடலில் பலவிதமான நோய்களின் அபாயத்தை அதிகரித்து, ஒருவரது ஆயுட்காலத்தையே குறைக்கின்றன என்பது தெரியுமா?
டாக்டர்.பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிப்போட்டு ஒருவரது அயுட்காலத்தைக் குறைக்கும் 5 விதமான மோசமான உணவுகள் குறித்து பட்டியலிட்டுள்ளார். அந்த உணவுகளை இதுவரை நீங்கள் அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடனே தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் விரைவில் மரணத்தை பரிசாக பெறக்கூடும். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
1. பதப்படுத்தப்பட்ட உணவுகள்
"அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ் பாக்கெட், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பாக்கெட் ஸ்நாக்ஸ், உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள், ஜங்க் உணவுகள் போன்றவை. இந்த வகை உணவுகளில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, உப்பு, பதப்படுத்த பயன்படுத்தும் கெமிக்கல்கள், கெட்ட கொழுப்பு போன்றவை உடலினுள் சென்று சர்க்கரை நோய், பிபி, கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்து, ஆயுளை குறைக்கிறது" என்று டாக்டர் கூறினார்.
2. குளிர்பானங்கள்
"தற்போது ஏராளமான புதுபுது குளிர்பானங்களான கார்பனேட்டட் பானங்கள் விற்கப்பட்டு வருகின்றன. அதுவும் இவற்றின் பக்கவிளைவுகளை தெரிந்தே குடித்து வருகிறோம். குளிர்பானங்களில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக உள்ளன. அதுவும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகின்றன. அதுவும் டப்பாக்கள் மற்றும் டின்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகளிலும் இந்த சர்க்கரை அதிகமாகவே உள்ளன. இந்த பானங்களை தொடர்ந்து குடித்து வரும் போது, இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகும், கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வரும், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வந்து, கடைசியில் மோசமான வியாதிகளால் அவதிப்பட நேரிடும்" என்று கூறினார்.
3. எண்ணெயில் பொரித்த உணவுகள்
"எண்ணெயில் பொரித்த உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் சரி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டாலும் சரி, இரண்டும் ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்தும். எப்பவும் எண்ணெய்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடுப்படுத்தும் போது, அதில் உள்ள கொழுப்பு நஞ்சாகி, கெட்ட கொழுப்பாக மாறும். இது மிகவும் ஆபத்தானது. அதுவும் சிக்கன், முட்டை போன்ற சத்தான உணவுகளை எண்ணெயில் பொரிக்கும் போது, அதிலிருந்து எந்த சத்தும் கிடைக்காது. மாறாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகி, இரத்த குழாய் பாதிக்கப்படுவதோடு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களுக்கு ஆளாகக்கூடும்" என்று டாக்டர் கூறினார்.
4. உப்பு நிறைந்த உணவுகள்
உப்பு என்னும் சோடியம் குளோரைடு உடலினுள் அதிகமாக செல்லும் போது, அது இரத்தக் குழாய்களை சேதப்படுத்தும். அதாவது நீர் அதிகம் உடலில் தேங்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதன் விளைவாகவே பல்வேறு உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். அதுவும் ஊறுகாயில் இருந்து டின்களில் அடைத்து விற்கப்படும் அனைத்து உணவுகளுமே உப்பு அதிகம் நிறைந்த உணவுகள் தான். ஏன் உப்பு நிறைந்த கருவாட்டை கூட அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொல்லப்போனால் இந்த வகை உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களை சேதப்படுத்தும்." என்றும் டாக்டர் கூறினார்.
5. உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள்
"உறைய வைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்ளும் போது, அதிலிருந்து சத்துக்கள் கிடைப்பதற்கு பதிலாக, நோய்கள் தான் கிடைக்கும். எனவே இந்த வகை உணவையும் தவிர்க்க வேண்டும்" என்று டாக்டர் பிள்ளை கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

