முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..

Dark Spots Remedies In Tamil: ஒவ்வொருவருக்குமே நல்ல பொலிவான மற்றும் அழகான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் சில சமயங்களில் திடீரென்று கரும்புள்ளிகள் வந்து முக அழகையே கெடுக்கும். இப்படி வரும் கரும்புள்ளிகளானது சருமத்தில் நிறமிகளின் அளவு அதிகரிப்பதால் வரக்கூடிய திட்டுகளாகும்.

Top 5 Natural Items That Can Fade Dark Spots

இவை சில சமயங்களில் விடாப்பிடியானவையாகவும், நீக்குவதற்கு கடினமாகவும் மாறிவிடுவதால், எப்படி நீக்குவது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருக்கலாம். இந்த கரும்புள்ளிகளை நீக்க சிலர் அழகு சிகிச்சைகளை மேற்கொள்ள நினைப்பார்கள். ஆனால் இப்படி எடுத்த எடுப்பிலே சிகிச்சைகளை மேற்கொள்ளும் முன், ஒருசில இயற்கை வழிகளை ட்ரை செய்து பாருங்கள்.

ஏனெனில் சில இயற்கை வழிகளானது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பலருக்கு உதவி புரிந்துள்ளன. கீழே கரும்புள்ளிகளைப் போக்க உதவும் சக்தி வாய்ந்த 5 இயற்கை பொருட்களையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றியும் கொடுத்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

1. பப்பாளி

* பப்பாளி சருமத்திற்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடியது. அதனால் தான் இது பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களில் மூல பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
* இப்படிப்பட்ட பப்பாளியை சிறிது எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு கைகளை நீரில் நனைத்து, முகத்தை மென்மையாக தேய்க்க வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. எலுமிச்சை சாறு

* எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய செய்யும்.
* இப்படிப்பட்ட எலுமிச்சை சாற்றினை ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* முக்கியமாக கடைசியாக மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்க்ரீனை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

3. தக்காளி

* தக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வெயிலால் சருமத்தில் வரும் கரும்புள்ளிகளைத் தடுக்கும்.
* இப்படிப்பட்ட தக்காளியை அரைத்து, அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

4. கற்றாழை

* கற்றாழை பல்வேறு சரும பிரச்சனைகளை போக்கும் வல்லமை கொண்டது.
* இந்த கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

5. மஞ்சள்

* மஞ்சளில் குர்குமின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது சருமத்தில் மெலனின் உற்பத்தியையும், அழற்சியையும் குறைக்கும்.
* இப்படிப்பட்ட மஞ்சள் தூளை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, June 4, 2026, 20:46 [IST]
Desktop Bottom Promotion