Latest Updates
-
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்..
செல்போன எப்படி புடிப்பீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிபட்டவர்னு சொல்றோம்...
நீங்கள் செல்போன் பிடிக்கும் முறையை வைத்து உங்களுடைய குணத்தை எப்படி கணிக்க முடியும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கிரக நிலை ஜோதிடம், கை ரேகை ஜோதிடம் மாதிரி இதுவும் ஸ்மார்ட் போன் ஜோதிடம் என்றே கூறலாம். ஆமாங்க 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை நீங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியாக ஒருபக்கம் பார்த்தாலும் மனநிலை சார்ந்ததாக பார்க்க வேண்டும் என்று மன தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நாம் ஸ்மார்ட் போனை கையாளும் விதம், பயன்படுத்தும் முறைகள் போன்றவைகள் நம் குணத்தை வெளிப்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை ஆராயும் விதமாக ஸ்மார்ட் போனைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான சோதனையை மேற்கொண்டனர். சரி வாங்க அதைப் பற்றி கீழ்க்காணும் படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் போனை ஒரு கையால் பிடிப்பது
நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது செய்தி படிக்கும் போதோ, டைப் செய்யும் போதோ, ஸ்கீரினை நகர்த்தும் போதோ ஒரு கையை மட்டும் பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் மிகவும் நம்பிக்கையான நபராக இருப்பீர்களாம். தனியாளாக இருந்து அனைத்தையும் சமாளித்து விரும்பிய முடிவுகளை எடுத்து அதில் வெற்றியும் அடைவீர்களாம்.
அது மட்டுமல்லாமல் ஒரு நபருடனான உறவை தீர்மானிக்க அந்த நபர் நம் வாழ்க்கையில் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கவும் போதுமான நேரத்தை செலவழிப்பீர்கள். அதனால் தான் என்னவோ மற்றவருக்கு நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட நபராக தெரிவீர்கள்.

ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கை பெருவிரலால் ஆப்ரேட் செய்தல்
இந்த மாதிரி ஸ்மார்ட் போனை கையாள்பவர்கள் புத்திசாலியாக இருப்பார்களாம் . உங்கள் உள்ளுணர்வு சரியானதாகவும் மிகுந்த புத்திசாலித்தனத்தை கொண்டும் காணப்படுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முன் பல அடி முன்னால் சென்று யோசிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் முன்னரே புரிந்து கொள்வீர்கள். இதனால் உங்களை ஏமாற்றுவது மிகவும் கடினம்.
இருப்பினும் நீங்கள் காதல் விஷயங்களில் கடினமாக நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள். உறவில் நீங்கள் சிந்திக்காமல் எடுக்கின்ற ஒரு சில முடிவுகள் உங்கள் உறவை பாதிக்க கூடும். காதல் என்று வரும் போது நிறைய சட்ட திட்டங்களை பேசும் நபராக மாறி விடுவீர்கள்.

இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு ஆப்ரேட் செய்வது
ஸ்மார்ட் போனை இரண்டு கைகளிலும் பிடித்து கொண்டு கையாள்பவரா நீங்கள் அப்போ உங்கள் லவ் ரெம்ப பாஸ்ட்டாக இருக்கும். நீங்கள் விரைவான திறமையான முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பீர்கள். வேகமாக மாறும் சூழலுக்கு ஏற்ப மாறி திறம்பட செயல்படுவீர்கள்.
ஆனால் காதல் என்று வரும் போது உங்கள் வேகம் போதாது. உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் காதலில் எதிர் தான். உங்கள் பயமே அன்பானவருடான நெருக்கத்தை இழக்க வைக்கும்.
MOST READ: தயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்? எது நல்லது? உங்க வீட்டிலேயே எப்படி செய்யலாம்?

ஒரு கையில் பிடித்துக் கொண்டு இரண்டாவது கையின் ஆள்காட்டி விரலால் கையாள்வது
இந்த மாதரி ஸ்டைல போனை கையாளும் நபர்கள் க்ரீயேட்டிவ் திறன் கொண்டவராக இருப்பார்களாம். நிறைய ஐடியாக்களை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி அதை திறம்பட முடித்தும் காட்டுவீர்கள். உங்களுடைய எண்ணங்களை ஒன்று திரட்டி உங்களுக்கென்ற உலகில் தனியாக வாழ்வீர்கள். ஓவியம் தீட்டிதல் அல்லது புத்தகம் எழுதுதல் போன்றவை உங்களுக்கு வெற்றி தரும்.
காதல் என்று வரும் போது உங்கள் படைப்பாற்றல் அப்படியே கூச்ச சுபாவமாக மாறி விடும். இதனாலேயே நீங்கள் காதல் உறவில் செல்ல திணறுவீர்கள். ஆனால் உங்களை யாரும் புரிந்து கொண்டால் அவருடனான உறவு நன்றாகவே இருக்கும். கண்டிப்பாக உங்கள் ஆளுமை திறனை கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
என்னங்க நீங்க எந்த ஸ்டைல போன பிடிக்கிறீங்க? நீங்களும் எப்படிப்பட்ட நபர்னு தெரிஞ்சுகிட்டீங்களா.



Click it and Unblock the Notifications
