Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...
பொதுவாக ஒருவருக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்கும்போது பெரிய குழப்பங்கள் ஏற்படும். ஆனால் அவர்களுடைய ராசிக்கு தகுந்தபடி பரிசு வாங்கிக் கொடுப்பது நல்லதல்லவா?... அப்படி ஒவ்வொரு ராசிக்கும் என்ன பரிசுப்
அன்பை பரிமாற நினைத்தாலே ஒருவருக்கொருவர் பரிசை பரிமாறிக் கொள்வோம். அதிலும் உங்களின் அன்பானவர் என்றால் பரிசுகளை வாங்க நிறைய மெனக்கெட செய்வோம். உங்கள் துணைக்கு பிடித்த ஒன்றை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுவோம். இதற்காக நீங்கள் இவ்வளவு சிரமப்படக் கூட வேண்டியதில்லை. உங்கள் துணையின் ராசி மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும். அவங்களுக்கு பிடித்த விஷயங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வாங்கி கொடுத்து உங்கள் காதலை வெளிப்படுத்தி அசத்திடலாம்.

சரி வாங்க அவங்களுக்கு புடிச்ச விஷயங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மேஷம்
உங்கள் துணை மேஷ ராசி என்றால் அவர்களுக்கு பிடித்தமான நிறம் பெரும்பாலும் சிவப்பாக இருக்கும். மேஷ ராசி அன்பர்கள் அழகான தொப்பிகள், விரைந்து செல்லும் கார்கள், பாஸ்ட் புட், இறைச்சி, அழகான ஆடைகள் போன்றவற்றை விரும்புவார்கள். ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி போன்றவற்றை ரசித்தல், விருப்பமான பாடல்கள் கேட்டல் போன்றவை இவர்களுக்கு பிடிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு எமர்ல்டு பச்சை மிகவும் பிடிக்கும். ஆடம்பர நகைகள், அழகான செடிகள், இரத்தினக்கல், வித விதமான கேக்குகள், கார்போஹைட்ரேட் உணவுகள் போன்றவை இவர்களுக்கு விருப்பமானதாகும். வாழ்த்து அட்டை போன்றவை இவர்களுக்கு பிடிக்கும். இவர்களுக்கு அளவை விட தரமே முக்கியம். எனவே எந்த பொருளாக இருந்தாலும் அளவை விட தரத்தையே பார்ப்பார்கள்.

மிதுனம்
இவர்களுக்கு ப்ரவுன் கலரை தவிர எல்லா நிறங்களும் பிடிக்கும். இவர்களுக்கு வித்தியாசமான ஜோடிப் பரிசுகள், புதியவர்களை சந்தித்தல், புதிய இடங்கள், செல்போன் போன்றவை இவர்களுக்கு பிடிக்கும். உங்கள் அன்பானவர் மிதுன ராசிக்காரராக இருந்தால் பரிசு தேர்ந்தெடுக்கும் போது அவரது பர்சனாலிட்டியை கணக்கில் கொண்டு எடுங்கள். இந்த ராசிக்காரர்களுக்கு கைகளின் ஆளுமை பெற்று இருப்பதால், கைகளுக்கான வாசனை லோசன், மோதிரம் போன்றவற்றை இவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம். ரெம்ப விரும்புவார்கள். கண்ணாடி பொருட்கள் அல்லது காக்டெய்ல் பொருட்கள் போன்றவற்றையும் விரும்புவார்கள்.

கடகம்
உங்கள் துணை கடக ராசிக்காரர் என்றால் சுவையான உணவுகள், வெள்ளி நகைகள், பழம்பெரும் பொருட்கள், அழகான லேஸ் துணிகள், நிலவொளியில் ஒர் அழகிய பயணம்,. கையால் பின்னிய ஆடைகள் போன்றவற்றை விரும்புவார்கள். மேலும் உணர்வை்வெளிப்படுத்தும் கைத்தறி பொருட்கள்,கையால் வரையப்பட்ட ஓவியம், பெயிண்டிங், ஆங்கோரா ஸ்வெட்டர், பேஸ்ட்ரி உணவுகள் போன்றவை இவர்களுக்கு ரெம்ப பிடிக்கும்.

சிம்மம்
காதலில் ரெம்ப உணர்ச்சி பூர்வமான மற்றும் தாராள குணமுடையவர்கள் இந்த ராசிக்காரர்கள். இவர்கள் இயல்பிலேயே தைரியமானவர்கள் என்பதால் விலையுயர்ந்த மற்றும் ஸ்டைலான பரிசுகள் என்றால் இவர்களுக்கு பிடிக்கும். இவர்களுக்கு மஞ்சள் நிறம் என்றால் பிடிக்கும். தங்க நகைகள், எல்லார் கவனத்தையும் ஈர்த்தல், க்ளாமர் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வது, ஆடைகள் வாங்க ஷாப்பிங் செல்வது போன்றவை இவர்களுக்கு ரெம்ப பிடிக்கும். சிவப்பு, கோல்டு மற்றும் ஊதா நிறத்தின் மீது இவர்களுக்கு எப்பொழுதும் ஒரு அலாதி பிரியம் இருக்கும்.

கன்னி
இவர்களுக்கு நடைமுறை பரிசுகள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு பிடித்த நிறம் ப்ரவுன். மேலும் சுத்தமாக இருப்பதை இவர்கள் விரும்புவார்கள். மசாஜ் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஊசியால் தைக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் , புதிர்கள், குட்டிப் பிராணிகள் போன்றவை இவர்களுக்கு பிடிக்கும். வாட்ச் அல்லது லெதர் டைரி போன்றவற்றை கூட இவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம். உடல் நல பராமரிப்பு பொருட்கள் அல்லது ஆர்கானிக் பொருட்களையும் இவர்களுக்கு வாங்கி கொடுத்து அசத்தலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அழகு மற்றும் உடல் நல பராமரிப்பு பொருட்கள், மென்மையான நகைகள், பராமரிக்க எளிதான குட்டிப் பிராணிகள் போன்றவை என்றால் பிடிக்கும். இவர்களுக்கும் இசைக்கும் ஒரு பிடித்தமான உறவு இருக்கிறது. எனவே இவர்களின் விருப்பமான கலைஞர்களின் பாடல் தொகுப்பு இவர்களுக்கு ஒரு நல்ல பரிசாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆழ்ந்த மற்றும் சிகிச்சையளிக்கும் பொருட்கள், அடர்ந்த மற்றும் வெளிரிய நிறங்கள், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள், சிகரெட், அழகான இடங்கள், ஊர்வன விலங்குகள் போன்றவை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் ரெம்ப உணர்வுப் பூர்வமாக இருப்பதால் இவர்களுக்கு பரிசுகளை மறைத்து வைத்து கண்டுபிடிக்க சொல்வது ரெம்ப பிடிக்கும். நேரடியாக பரிசுகளை வழங்குவதை விட இந்த முறையை அவர்கள் மிகவும் விரும்புவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சாகசங்கள், வனவிலங்கு, ஊதா மற்றும் நீல பச்சை நிறங்கள், மோட்டார் பைக், நெடுந்தூர நடைபயணம், பெரிய நாய்கள் போன்றவை பிடிக்கும். தனுசு ராசிக்காரர்கள் இயற்கையிலேயே விளையாட்டு விரர்களாக இருப்பதால் சாகசங்களை விரும்புவார்கள். எனவே இவர்களுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் நடைபயணம், மலைப் பயணம் போன்றவற்றை ஏற்படுத்தி கொடுக்கலாம்.

மகரம்
உங்கள் துணை மகர ராசியாக இருந்தால் சாகசங்கள், மலையேறுதல், பெட்டியில் அடைக்கப்பட்ட பொருட்கள், வாட்ச், கடிகாரம், முழங்கால் பேடுகள், வடிவ ஒவியங்கள் போன்றவை பிடிக்கும்.

கும்பம்
இவர்களுக்கு எலக்ட்ரிக் நீல நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். வளர்ந்து வரும் டெக்னாலஜி பொருட்கள், பீட்டா புரோகிராம், விசித்திரமான மற்றும் வெளிப்படையான கார்டூன் மனிதர்கள் போன்றவை இவர்களுக்கு பிடிக்கும்.

மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு கடல் பச்சை என்றால் பிடிக்கும். கடற்கன்னிகள், டால்பின்கள், வொயின், ஆல்கஹால், திரைப்படங்கள், பட்டு ஆடைகள், நீளமான ஆடைகள் போன்றவை இவர்களுக்கு பிடிக்கும்.



Click it and Unblock the Notifications