For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பர்ஃபெக்ட் டைம்ல பிசுரில்லாம எடுத்த டாப் டக்கர் போட்டோஸ் - புகைப்படத் தொகுப்பு!

  By Staff
  |

  சிற்பம், ஓவியம் மாதிரி போட்டோகிராபியும் ஒரு கலை தான். இது ஒளியோட விளையாடுற கலை. ஒளி கொண்டு வரையபடுற ஓவியம் தான் புகைப்படங்கள். ஃபிலிம்ல எடுத்த போட்டோஸ்களுக்கும், இப்போ டிஜிட்டல்ல எடுக்குற போட்டோஸ்களுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு.

  அதுலயும் இப்போ மொபைல் போட்டோகிராபின்னு ஒன்னு வந்திருக்கு... அதாவது கத்தி எடுத்தவன் எல்லாம் ரவுடியான்னு கேட்கிற மாதிரி, இவங்க எல்லாருமே ஒரு போட்டோகிராபர் ஆயிட்டாங்க. எப்படி எல்லா கிறுக்கலும் கவிதை ஆகிட முடியாதோ. எல்லா போட்டோஸ்ம் பர்பெக்ட்தானது கிடையாது.

  இதோ! இந்த போட்டோ பாருங்களேன். சிலவன சிரிக்க வெச்சா கூட... இப்படியான போட்டோஸ் எடுக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தண்ணில நடக்க முடியுமா?

  தண்ணில நடக்க முடியுமா?

  தண்ணியில ஓடுற கார் கூட பாத்திருக்கோம். ஏன் சிலர் பைக் ஓட்டி காமிக்கிற வீடியோக்கள் கூட இணையங்கள்ல வைரலா பார்த்திருப்போம். ஆனா, நடக்க முடியுமோ... சில மேஜிக் கலைஞர்கள் தண்ணியில நடக்குற மாதிரியான சம்பவங்கள் உலகத்துல பல முறை நடந்திருக்கு. ஆனா, அது எல்லாமே ட்ரிக்ஸ். ஆனா, கேமரா ட்ரிக்ஸ் வெச்சும் தண்ணியில நடக்குற மாதிரி காமிக்க முடியும். இதோ, இந்த மாதிரி!

  இரவா? பகலா?

  இரவா? பகலா?

  பகல்ல தான் சூரியன் தெரியும், இராத்திரி தான் நிலா தெரியும்ங்கிறது நமக்கு எல்லாம் தெரியும். ஆனால், சில சமயத்துல சூரியன் உதயமாகிற அதிகாலை நேரத்துல, இல்ல அஸ்தமனம் ஆகுற மாலை நேரத்துல சூரியன், நிலா ரெண்டுமே வானத்துல கண்ணுக்கு தெரியும்.

  அப்படி தெரிஞ்ச நிகழ்வா இது இருக்குமோ?ன்னு கேள்வி கேட்டா அது முட்டாள்தனம். இந்த போட்டோவ நாசாவுல இருந்து எடுத்தாங்களா? இஸ்ரோவுல இருந்து எடுத்தாங்களான்னு எல்லாம் தெரியாது. ஆனா, கனக்கச்சிதமா, அழகா இரவையும், பகலையும் சேர்த்து எடுத்திருக்காங்க.

  கியூட்!

  கியூட்!

  இதுக்கு பெயரு தான் கியூட்டா... இத நம்ம நார்னியா இல்ல, எக்ஸ் மேன் படத்துக் காரங்க பார்த்தா அவங்க படத்துல நிச்சயம் செர்த்திடுவாங்க. சொல்ல முடியாது அடுத்து புது பாகங்கள்ல இப்படியான குணாதியம் கொண்ட சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் வெளிவரலாம். பின்னாடி நாய் காதோட இருந்தாலும், குழந்தை பார்க்க முயல்க்குட்டி மாதிரி அழகா இருக்கு!

  ஸ்போர்ட்ஸ்!

  ஸ்போர்ட்ஸ்!

  இப்ப சும்மா ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிட்டு, ஒரு படத்த எடுத்து, அதுல நாலஞ்சு பில்டர் சேர்த்து நானும் ஒரு போட்டோகிராபர்ன்னு சிலர் ஃபேஸ்புக் பேஜ் எல்லாம் ஆரம்பிச்சிடுறாங்க. போட்டோகிராபில பல வகை இருக்கு. அதுல ஒன்னு தான் ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபி. வைல்ட் லைப் போட்டோகிராபிக்கு அடுத்து சவாலான போட்டோகிராபின்னு இதையும் சொல்லலாம்.

  கூகுள்ல போய் தோனி, விராத் வால்பேப்பர்ன்னு சொல்லி தேடுனா பல அசத்தல் போட்டோஸ் கிடைக்கும். ஆனா, அதுக்கு பின்னாடி அவங்க எவ்வளவு நேரம் அந்த பர்பெக்ட் ஷாட்-காக காத்திருந்தாங்கன்னு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இதோ தரையில மிதக்குற மாதிரியான இந்த ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபி எவ்வளோ அசத்தலா இருக்கு பாருங்க.

  கொஞ்சம் சில்மிஷம்!

  கொஞ்சம் சில்மிஷம்!

  தலைகீழாக தான் குதிக்க போகிறேன்னு.. கவுண்டமணி காமெடி சீன்ல சொல்ற மாதிரி இருந்தாலும்.... இதுவொரு பர்பெக்ட் க்ளிக் தான். ரக்பி ஒரு வெறித்தனமான விளையாட்டு. ஆனா, இதுல பர்பெக்ட் டைமிங் ஜம்புல மட்டுமில்லங்கிறது வேற விஷயம்.

  டிரா தி மேட்ச்!

  டிரா தி மேட்ச்!

  ரெண்டு பேருமே, தங்கள் எதிர் பக்கமா நிக்கிற போட்டியாளர் கழுத்துல பர்பெக்ட்ரா கத்திய கழுத்துல வெச்சிருக்காங்க. இதுல என்ன அருமைன்னா அந்த கத்தியோட நிலை பாருங்களேன்... ஒரு வேவ்லென்த் மாதிரி அப்படியே வளைஞ்சு நிக்கிது. கணக்கு பாடத்துல கிராப் வரைவோமே அந்த மாதிரி. நிச்சயமா இது ஒரு சிறந்த புகைப்படம் தான்.

  விளையாட்டு!

  விளையாட்டு!

  தன் துணையை புல் தரையில படுக்க வெச்சு... வாட்டர் பலூன்ல நீர் நிரப்பட்டு இருக்காப்புல. ஒரு அளவுக்கு மேல் கொள்ளளவு பிரஷர் தாங்காம பலூன் வெடிக்குது. பாருங்களேன்... அந்த பலூனோட வடிவம் அப்படியே போட்டோவுல கேப்சர் ஆயிருக்கு.

  மூஞ்சி முகரை!

  மூஞ்சி முகரை!

  எத்தனை வயசானாலும் பார்த்த உடனே துள்ளி குதிச்சு விளையாட தோன்ற விளையாட்டு ஊஞ்சல். யாருக்கு தான் காத்துல பறக்க பிடிக்காது சொல்லுங்க. ஆனால், கொஞ்சம் நண்பர்கள் கூட விளையாடும் போதும் ஜாக்கிரதையா இருக்கனும் இல்ல ஸ்பீடா தள்ளிவிட்டு சாவு பயத்த காமிக்க நிறைய பேரு இருக்காங்க. இதோ இப்படி தான். தம்பி கம்பி அறுந்து கீழே விழறதுக்கு ஒரு முன்னாடி... எத்தன எலும்பு உடைஞ்சதோ...???

  கவிதையே தெரியுமா?

  கவிதையே தெரியுமா?

  கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

  இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

  இமை மூட மறுக்கின்றதே ஆவலே

  இதழ் சொல்ல துடிக்கின்றதே... காதலே...'ன்னு ஜெயம் படத்துல ஒரு பாட்டு இருக்கு. அதுல நம்ம ஜெயம் ரவி இப்படி தான் கயிறு கட்டு கட்டில் மேல தொங்கிட்டு இருப்பாரு. இங்க அம்மணி கேமரா ட்ரிக்ஸ்ல கட்டில் மேல மிதக்குற மாதிரி போட்டோ எடுத்திருக்காங்க.

  நோ யூஸ்..

  நோ யூஸ்..

  சில சமயம் ஆணுறை பயன்படுத்தியும் கருத்தரிக்கிறது இல்லையா? அப்படி தான் சில சமயம் ஹெல்மெட் போட்டாலும் சிலருக்கு விபத்துல அடிப்பட்டுடும். இதோ சைக்கிள் பயிற்சி பண்றப்ப நம்ம தம்பிக்கு அடிப்பட்டது போல. நீங்களே சொல்லுங்க... நிச்சயம் இந்த தம்பிக்கு ஹெல்மெட் அடியில இருந்து பாதுகாப்பு கொடுத்திருக்காது.... சரி! என்ன பண்றது விதி வலியது.

  All Image Source: ebaumsworld

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  The Most Perfectly Timed Pictures

  Photos taken at just the right time. These are the most perfectly timed pictures.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more