ட்விட்டரில் ட்ரம்ப்பை கழுவி, கழுவி ஊற்றிய 'ஷிட்ஹோல்' கண்ட்ரி மக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தான் அதிபர் ஆனதில் இருந்தே பல அறிக்கைகள் மற்றும் திமிரான பேச்சுகளால் பலரது கோபத்தையும், அதிருப்தியையும் கூடை, கூடையாக வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதிலும், அமெரிக்காவிடம் உதவி பெறும் நாடுகளை மிகவும் கீழ்த்தரமாக கருதி வருகிறார் இவர்.

சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏழை நாடுகளை சேர்ந்த மக்களை தனது உரையில் ஷிட் ஹோல் நாடுகள் என்று கூறி மிக திமிராகவும், கீழ்த்தரமான முறையிலும் பேசியிருந்தார். இது பல உலக நாடுகளின் தலைவர்களையும் கடுங்கோபம் அடைய செய்தது. மேலும், அமெரிக்காவில் வாழும் ஏழை நாடுகளை சேர்ந்த மாணவர்களை இது மனதளவில் பெரிதாக பாதிப்படைய செய்தது.

ஆனால், இதற்கு தங்கள் எதிர்ப்பை காண்பிக்காமல். பல படித்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள். நாங்கள் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவர்கள் தான். ஆனால், எங்கள் நிலை என்ன? தகுதி என்ன? எங்கள் கனவு என்ன? என்பதை ட்ரம்ப் நன்கு உணரும் படி ட்விட்டரில் நாசூக்காக நல்ல பதலடி கொடுத்துள்ளனர்.

All Images Source: Bored Panda

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாக்டர்!

டாக்டர்!

செனோரிட்டா எனும் மாணவி. நான் ஒரு வருங்கால மருத்துவர்க். மெடிக்கல் பயின்று வருகிறேன். நான் மூன்று பட்டங்கள் பெற்றுள்ளேன். நான் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நாடான தென் சூடான் நாட்டின் கொடியை பதிவு செய்துள்ளார்.

செய்தியாளர்!

செய்தியாளர்!

டகளனி சியாகோ எனும் ஊடகவியல் மாணவர். நான் வருங்கால செய்தி ஆசிரியர். நான் ஊடகவியல் முதுகலை பயின்று வருகிறேன். நான் மூன்று பட்டங்கள் பெற்றுள்ளேன். என்னால் ஆறு மொழிகள் பேச இயலும். முதுகலையில் மெரிட் விருது வாங்கிய மாணவன் நான். நான் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவன் என தென்னாப்பிரிக்கா கொடியை பகிர்ந்துள்ளார்.

லோடன்னா ஐக்!

லோடன்னா ஐக்!

மேலும் நைஜீரியா நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவி லோடன்னா ஐக், தனக்கு நான்கு மொழிகள் பேச தெரியும் என்றும், மூன்று பட்டங்கள் பெற்றுவிட்டேன், இன்னும் இரண்டு பட்டங்கள் பெறவிருக்கிறேன். நான் இதுவரை பத்தாயிரம் டாலர்கள் வரை பண உதவி பெற்று தந்துள்ளேன். நான் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவள் என கூறி தன் நாட்டுகொடியை பகிர்ந்துள்ளார்.

உயிர்களை காத்துள்ளேன்!

உயிர்களை காத்துள்ளேன்!

நான் மருத்துவ துறையில் பணிபுரிந்து வருபவன். இதுவரை பல உயிர்களை காத்துள்ளேன். நான் உங்கள் நாட்டு குழந்தைகளுக்கு பிரசவம் செய்துள்ளேன். நான் தெருக்களில் வளர்ந்தவன். நான் பாதி தென்னாப்பிரிக்க பிரஜை. ஏனெனில், எனது தந்தை நீங்கள் கூறும் ஷிட் ஹோல் நாட்டில் பிறந்தவர் என்று கூறியுள்ளார் க்றிஸ் எனும் மருத்துவர்.

நியாலியப்!

நியாலியப்!

தென் சூடான் நாட்டை சேர்ந்த மருமொரு பெண்மணி. நான் வருங்காலத்தில் உளவியல் நிபுணராகவுள்ளேன். நான் ஒரு மாணவி மற்றும் தாய். இளைஞர்களுக்கான அட்வகேட்டாகவும் இருக்கிறேன். ஒரு இளைஞர்கள் அமைப்பின் ப்ரெசிடென்ட் நான். என்னால் இரண்டு மொழிகள் பேச இயலும். நான் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவள் என கூறி, தென் சூடான் நாட்டின் கொடியை பதிவு செய்துள்ளார் நியாலியப்!

ஹம்தியா அஹமது!

ஹம்தியா அஹமது!

நான் அகதிகள் முகாமில் இருந்து வளர்ந்தவள். கல்லூரி பயின்று வரும் மாணவி. ஐநா அரங்கில் நான் பேசியுள்ளேன். சமூக சேவைகளும் செய்து வருகிறேன். நான் ஒரு ஆர்வலர். நீங்கள் கூறுவதன்படி நானும் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவள் தான் என்று கூறியுள்ளார் ஹம்தியா அஹமது!

முதல் பட்டதாரி!

முதல் பட்டதாரி!

என் குடும்பத்தில் அமெரிக்கா வந்த முதல் தலைமுறை நான் தான். நான் தான் என் குடும்பத்தில் பட்டம் பெற்ற முதல் ஆளும் கூட. நான் வருங்காலத்தில் ஊடகவியலாளராகவிருக்கிறேன். எனக்கு பல மொழிகள் பேச தெரியும். எதிர்காலத்தில் பல நற்காரியங்கள் செய்ய காத்திருக்கிறேன். நானும் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவள் தான் என கூறி தென் சூடான் நாட்டின் கொடியை பகிர்ந்துள்ளார் சரபினா!

அதெல்!

அதெல்!

நான் ஒரு வழிகாட்டி. எதிர்காலத்தில் ஊடகவியலாளர் ஆகவுள்ளேன். டெய்லி லோவனில் முன்னர் செய்தியாளராக வேலை செய்துள்ளேன். நான் தென் சூடான் இளைஞர்கள் காங்கிரஸ்ல் உறுப்பினராகவும் இருக்கிறேன். வரும் மே 2018ல் எங்கள் குடும்பத்தில் பட்டம் பெறவிருக்கும் முதல் ஆளாகவுள்ளேன். நான் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவள் என்று கூறியுள்ளார் அதெல்.

பள்ளி மாணவி!

பள்ளி மாணவி!

நான் உயர்பள்ளி சீனியர். மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் மாணவியாகவும் திகழ்ந்து வருகிறேன். மாணவர் தூதராகவும் இருந்து வருகிறேன். என் பள்ளியில் கறுப்பின மாணவர்களுக்கான அமைப்பை உருவாக்கியுள்ளேன். வரும் மே மாதத்தில் உயர் பள்ளி படிப்பை முடிக்கவுள்ளேன். எதிர்காலத்தில் மருத்துவர் ஆகவேண்டும் என்பது எனது கனவு. நான் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவள் என கூறி தனது நாட்டின் கோடியையும் பதிவு செய்துள்ளார் மாணவி ரெபேக்கா.

விளையாட்டு வீரர்!

விளையாட்டு வீரர்!

PDUB என்ற நைஜீரியாவை சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர். தான் ஒரு வருங்கால மருத்துவர் என்றும். மருத்துவம் பயின்று வருகிறேன் என்றும். இதுவரை மூன்று பட்டங்கள் பெற்றுள்ளேன். திறம்பட கூடைப்பந்தாட்டம் விளையாட தெரிந்த வீரன். நான் ஷிட் ஹோல் கண்ட்ரியை சேர்ந்தவன் என்று கூறி தனது நாட்டின் கொடியை பதிவு செய்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Best Responses To Trump From People From Shithole Countires!

The Best Responses To Trump From People From Shithole Countires!
Subscribe Newsletter