Latest Updates
-
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும்
வாஸ்து ஆமையை வீட்ல எந்த திசைல வெக்கணும்?... எங்ககெங்க வெச்சா என்னென்ன பலன் தரும்?
இந்த வாஸ்து சாஸ்திர முறைப்படி சைனாவைச் சேர்ந்த ப்வெங் ஷூ சில தகவல்களை கூறுகிறார். அவர் என்ன சொல்லுகிறார் என்றார் இந்த புனித ஆமையானது வீட்டில் நேர்மறை சக்திகளை பரவச் செய்யும் என்கின்றார்.
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவில் உருவாகிய ஒரு பண்டைய கால முறையாகும். இது நமது வீட்டின் கட்டமைப்பு பற்றி பல தகவல்களைக் கூறும் மிகச் சிறந்த முறையாகும்.

நமது வீட்டின் ஒவ்வொரு மூலைகளும் திசைகளும் இயற்கையில் பஞ்ச பூதங்களுடன் தொடர்புடையதாக உள்ளது என்றும் அதன் படி வீட்டை அமைத்தால் நம் வீட்டிற்குள் சக்தி குடி கொள்ளும் என்றும் வாஸ்து முறைகள் கூறுகின்றன.

வாஸ்துவின் பயன்கள்
இந்த ஆற்றல் தான் நம் மனதை ஆட்டிப் படைக்கும் சக்தி. இது தான் நமது வேலை மற்றும் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இந்த ஆற்றலின் விளைவுகள் அப்படியே நம் வாழ்விலும் பிரதிபலிக்கும். சில சமயங்களில் இதை கருத்தில் கொள்ளாமல் நம் சொந்த விருப்பங்கள் படி வீட்டை அமைத்து கொள்வோம்.

பிரச்சினைகள்
இதனால் என்ன நடக்கும், நம் வாழ்விலும் நிறைய தர்ம சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள், பணத் தட்டுப்பாடு, பண விரயம், ஆடம்பர வாழ்க்கை, மோசமான உடல் நிலை போன்ற பிரச்சினைகளைகள் ஏற்பட நேரிடும். ஆனால் நமது ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு என்பது கண்டிப்பாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

தீர்வுகள்
வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை நீங்கள் வீட்டில் வாங்கி வைக்கும் போது கெட்ட சக்திகள் உங்களை விட்டு அகலுவதோடு பிரச்சினைகளும் உங்களை விட்டு பறந்தோடும். அப்படி பார்க்கையில் காற்றில் ஒலியோடு அசைந்தாடும் அழகான தொங்கும் பொருட்கள், புனித ஆமை உருவம் போன்றவை உங்கள் வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை வெளியேற்றும். இவை அதற்குப் பதிலாக நேர்மறை ஆற்றலை வீட்டில் நிலவச் செய்து குடும்பத்தில் அமைதியையும் வளத்தையும் அள்ளிக் கொடுக்கும்.

புனித ஆமையின் முக்கியத்துவம்
இந்த வாஸ்து சாஸ்திர முறைப்படி சைனாவைச் சேர்ந்த ப்வெங் ஷூ சில தகவல்களை கூறுகிறார். அவர் என்ன சொல்லுகிறார் என்றார் இந்த புனித ஆமையானது வீட்டில் நேர்மறை சக்திகளை பரவச் செய்யும் என்கின்றார். இந்த புனித ஆமை கடவுள் விஷ்ணுவுடன் தொடர்புடையது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பாற்கடலை கடையும் போது மந்திர மலையை தங்குவதற்கு விஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகிறது. எனவே இந்த புனித ஆமை கடவுள் ஸ்ரீ கிருஷ்ணனின் மறு உருவம் எனலாம்.

புனித ஆமையின் பயன்கள்
இந்த பொருளை உங்கள் வீட்டில் வைப்பதற்கு சில விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். இதன் படி செய்யா விட்டால் நேர்மறை ஆற்றல் இல்லாமல் நடுநிலையாக்கப்பட்டு விடும். எனவே இந்த பொருளை சரியான திசையில் பார்த்து வைப்பது மிகவும் முக்கியம்.

அமைக்கும் முறை
இதை வீட்டின் நுழைவாயில் கதவில் பொருத்தலாம். ஏனெனில் இந்த வழியாகத்தான் உங்கள் வீட்டினுள் எதிர்மறை எண்ணங்கள் குடி கொள்ளும். இதனால் தான் வீட்டில் பிரச்சினைகள் கொடி கட்டி பறக்கும். எனவே இந்த மாதிரியான வாக்கு வாதங்களை தவிர்க்க இதை அங்கே வையுங்கள்.

ஆரோக்கியம் :
இதை கிழக்கில் வைத்திருப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பணப் பற்றாக்குறை
வடகிழக்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டில் பணப் பற்றாக்குறையே இருக்காது.

பணவரவு
வீட்டிலும் அலுவலகத்திலும் ஒரு படிக ஆமையை வைத்திருந்தால் அதன் வழியே பண வரவு பொழியும்

நோய் அண்டாது
வீ்ட்டில் உள்ள உறுப்பினர்கள் அடிக்கடி நோய் வாய்ப்பட்டால் மண்ணால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வையுங்கள். மண் எப்படி நீரில் கரைந்து போகுமோ அதுபோல் நோயும் கரைந்து போகும் என்பது நம்பிக்கை.

வெற்றி
சில நேரம் நீங்கள் என்னதான் கடினமாக உழைத்தாலும் வேலையில் வெற்றி காண முடியாது. நல்ல வேலை கிடைக்காது, தேர்வில் வெற்றி பெற முடியாமல் கஷ்டப்படுவீர்கள். இந்த மாதிரியான பிரச்சினையை சமாளிக்க பித்தளையால் செய்யப்பட்ட ஆமையை வீட்டில் வாங்கி வையுங்கள். வேலையில் வெற்றி நிச்சயம்.

சின்ன பிரச்னை
ஒவ்வொரு வரும் சிறு சிறு பிரச்னைகளை வாழ்வில் சந்திப்பது என்பது சகஜமான விஷயம். ஆனால் இருப்பினும் இந்த சிறு பிரச்னைகள் குடும்பத்தில் பெரிய பிளவு ஏற்படக் காரணமாக அமைந்து விடும். எனவே இந்த மாதிரியான விளைவுகளை தடுத்து குடும்பத்தில் குதூகலமும், அமைதியும் நிலவ ஜோடி ஆமைகளை வாங்கி வையுங்கள்.

எடுத்த காரியம் நிறைவேறும்
நீங்கள் புதிதாக ஒரு நிகழ்ச்சி நடத்தினாலோ அல்லது புதிதாக வியாபாரம் தொடங்கினாலோ அதில் நஷ்டம் இடைஞ்சல்கள் அடையாமல் வெற்றி அடையவும் லாபத்தை ஈட்டவும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வைத்து தொடங்குங்கள் எடுத்த காரியம் நிறைவேறும். நினைச்ச படி வெற்றி மாலை சூடுவீர்கள்.

உடனடி முன்னேற்றம்
தொழிலில் உடனடியாக முன்னேறவும் வெற்றி பெறவும் விரும்பினால் உங்கள் கடைகள் அல்லது தொழில் புரியும் இடங்களில் இந்த புனித ஆமையை வையுங்கள்.

குழந்தை பாக்கியம்
அதே மாதிரி நிறைய தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி வேண்டிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் குழந்தை வடிவ ஆமையை வாங்கி வைத்தால் வீட்டில் சீக்கிரமாகவே குழந்தை சத்தம் கேக்கும்.



Click it and Unblock the Notifications