For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுமியின் பயம் கலந்த நடுக்கத்தின் காரணம் தெரிந்தால் அசந்து விடுவீர்கள்!

இயற்கையாக நடக்கும் தத்ரூபங்களை சிறிய மாறுதல் செய்து கற்பனையுடன் படைத்த ஸ்ட்ரீட் ஆர்ட்.

|

ஓவியங்கள்... பெயிண்டிங் மீது எல்லாருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும். தங்களுக்கு இருக்கிற கற்பனைத்திறனுடன் வரைவது பார்ப்பவர்களை ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்யும் அளவுக்கு இருக்கிறது.

வெள்ளைவெளேரென்று புதிதாக இருக்கும் கேன்வாஸ் சீட்டில் வரையும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இருக்கும் பொருளை கலைநயத்துடன் மாற்றும் இந்தக் காலத்தில் சற்று வித்யாசமாக தெருவில் இருக்கக்கூடிய சாதரண விஷயங்களில் ஓவியத்திறமையை காட்டி நம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள்.

கண்கள் நம்ப மறுக்கம் அசாத்திய கலைநயத்தைப் பார்க்க... தொடருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சுற்றுச்சுவருக்கு அருகில் வளர்ந்திருக்கும் மரம் சுற்றிலும் இருக்கும் வேலி நடுவில் இருக்கும் சுவற்றில் இளம்பெண் மரத்திலிருந்து பழுத்து தொங்கும் காயை எட்டிப் பறிப்பது போல ஒர் ஓவியம்.

#2

#2

காம்பவுண்ட் சுவற்றுக்குள் பிங்க் நிற பூக்களுடைய மரம் ஒங்கி வளர்ந்து நிற்க சுவற்றுக்கு வெளியே கருப்பு நிறத்தழகியின் குச்சி குச்சியாய் நிற்கும் முடி போல மரம் வருமாறு தத்ரூபாமாய் வரைந்திருக்கிறார்கள்.

#3

#3

செடிக்கு நின்று கொண்டு தண்ணீர் ஊற்றலாம். மரத்திற்கு எப்படி ஊற்ற என்று ஓவியர் யோசித்தாரா என்னமோ? உயர் கட்டிடத்தின் பக்கவாட்டில் மரம் வளர்ந்திருக்கிறது.

பக்கத்தில் கட்டிட சுவற்றில் சிறுமி ஒருத்தி பூந்தொட்டிக்கு தண்ணீர் ஊற்றுவது போல வரைந்திருக்கிறார்.

அருகில் நின்று பார்ப்பதை விட சற்று தொலைவில் இருந்து பார்த்தால் தான் முழு அழகை ரசிக்க முடியும்.

#4

#4

கையடக்கமாக இருக்கும் விதையை விதைத்தால் தான் ஆளுயர மரம் வளர்கிறது. இதை வெளியில் சொல்ல நினைத்தனரோ என்னவோ பல ஆண்டுகள் வளர்ந்து நிற்கும் மரத்தை உள்ளங்கையில் தாங்கியிருப்பது போன்ற சிற்பம்.

#5

#5

சில வண்ண வண்ண பூக்களைப் பார்க்கும் போது யாரோ வண்ணங்களை தெளித்திருப்பார்களோ என்று நமக்கு தோன்றும் தானே... இதோ நம் கற்பனையை உண்மையாக்குகிறது இந்த சிற்பம்.

நீளமாக ஆரஞ்சு வண்ணப் பூக்கள் அதன் துவக்கத்தில் ஆரஞ்சி நிற ட்யூப் வைத்து அதிலிருந்து நிறம் வருவதாக செய்திருக்கிறார்கள்.

#6

#6

ஒரு கணம் உங்கள் கண்கள் நம்ப மறுத்து உத்து பார்க்க வைக்கும் ஓவியம் இது. கட்டிடத்தின் பக்கவாட்டி சுவற்றில் இதனை வரைந்திருக்கிறார்கள்.

பாதி சுவற்றில் சிறுமி ஒருத்தி உட்கார்ந்திருப்பது போலவும். மீதியிடத்தில் நீல வானத்தை வரைந்து அதை எதோ அந்தச் சிறுமி திரைச்சீலையை இழுத்துப் பார்ப்பது போல இருக்கும். சற்று கூர்ந்து கவனித்தாலே சிறுமி பார்ப்பது உண்மையான வானம் அல்ல என்பது தெளியும்.

#7

#7

பூப் பூவாய்..... தரையில் வளர்ந்திருக்கும் செடி வளர்ந்து அப்படியே சுவற்றில் ஏற... க்ரியேட்டிவிட்டி பிறந்து விட்டது.

அருகிலேயே ஒருவர் வாந்தி எடுப்பது போல வரைந்துவிட்டார்கள். பார்ப்பவர்கள் ஒரு கணம் திகைக்கும் அளவிற்கு மேலே சற்று ஒடுக்கமாகவும் கீழே வர... வர சற்று அகலமாகவும் செடி வளர்ந்திருக்கிறது.

அதுவும் ஓவியத்தின் தத்ரூபத்தை பாருங்கள்.... குவித்து வைத்திருக்கும் வாய்... ஒரு கையில் தண்ணீர் பாட்டில்...

#8

#8

இந்த ஓவியம்... தரையைப் பார்த்து நடப்பவர்களுக்கு மட்டுமே புலப்படும். காய்ந்த சருகுகள் உதிரும் தானே அதைக்கூட கற்பனைத்திறனில் புத்துயிர் ஊட்டியிருக்கிறார்கள்.

சிறிய விலங்கு ஒன்று காய்ந்த சருகுகளை எல்லாம் கூட்டி பெருக்குவது போல இருக்கிறது. சற்று விசித்திரமாய் கண்கள் இரண்டும் கொம்பில் திணித்திருப்பதால் நடப்பவர்களை பயமுறுத்தவும் செய்கிறது இந்த ஓவியம்.

#9

#9

காட்டுல இருக்குற செடி கொடிக்கு எல்லாம் யாரு தண்ணி ஊத்துரான்னு இனிமே கேப்பீங்களா? இதோ இப்டித்தான் ஊத்துறாங்க.

பாறையின் இடுக்கில் துளிர்ந்த சிறு புல்லுக்கு ஜன்னல் வழியாக தண்ணீர் ஊற்றும் எலியின் ஓவியம் அசத்தல்.

#10

#10

எல்லாமே நம்ம கையில தாங்க இருக்கு என்று சொல்ல நினைத்தாரோ என்னவோ? இந்த ஓவியம் பிறந்து விட்டிருக்கிறது. ஆனால் ஓவியத்தைப் பார்த்தால் நம்ம கையில என்ன பாஸ் இருக்கு என்று கேட்பது இருக்கிறது தானே.....

சுற்றுச்சுவருக்கு உள்ளே பல கிளைகளைக் கொண்ட மரம் வளர்ந்திருக்கிறது. வெளியே இருக்கும் சுவற்றில் ஒருவன் ஐந்து விரல்களை விரித்திருப்பது போலவும் அவற்றிலிருந்து மரத்தின் கிளைகள் வளர்ந்திருப்பது போலவும் அவ்வளவு நேர்த்தி...

#11

#11

கார்டூன் ரசிகர்களுக்கு இது பெரும் விருந்து. அதுவும் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

அவர்கள் ஒரு காலத்தில் விழுந்து விழுந்து பார்த்து ரசித்த பாப்பாய் என்ற கார்டூன் கேரக்டர் எக்ஸ்ட்ரா பவருக்காக ஸ்பின்னாச் சாப்பிடும்,

அதை பக்கத்து சுவற்றில் வளர்ந்த மரத்திற்கு பொருத்துமாக அமையும் படி வரைந்துவிட்டார்கள்.

#12

#12

வளர்ந்திருக்கும் மரத்தையும், மரத்தின் இலைகளையும் கொண்டு தலைமுடியாய் உருவகப்படுத்தி வரைந்த எண்ணற்ற ஓவியங்களை பார்த்திருப்போம். ஆனால் இது சற்று வித்யாசமானதாக இருக்கிறது.

சிறுமி ஒருத்தி கண்களில் பயம் தெரிய ,நடுக்கத்துடன் படுத்திருக்கிறாள். முன் சுவற்றில் வளர்ந்திருக்கும் செடிகள் சிறுமியின் தலைமுடியாய் பொருந்தியிருக்கிறது.

#13

#13

இதுவும் தரையிலிருக்கும் ஒர் ஓவியம் தான். பிளாட்பாரத்தில் இரண்டு இடங்களில் சற்றுத் தள்ளி புல் முளைக்க அந்த இரண்டு இடைவெளியை கணக்கிட்டு சிறுமி ஒருத்தி நடனமாடுவதைப் போல உருவாக்கி விட்டார்கள்.

All Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Take a look at some of the most clever street art

Take a look at some of the most clever street art
Story first published: Wednesday, January 3, 2018, 12:08 [IST]
Desktop Bottom Promotion