Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம்
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க..
Weight Loss Gothumai Rava Kanji Recipe In Tamil: நீங்கள் காலையில் நல்ல சத்தான, அதே சமயம் எளிதில் செரிமானமாகக்கூடிய வகையிலான காலை டிபனை சாப்பிட நினைக்கிறீர்களா? அதுவும் நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் கஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக வீட்டில் கோதுமை ரவை இருந்தால், அதைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடியுங்கள். இந்த கஞ்சி சற்று வித்தியாசமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கஞ்சியானது உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி இந்த கஞ்சி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
இந்த கோதுமை ரவா கஞ்சி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கோதுமை ரவா கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கோதுமை ரவை - 1 கப்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 4 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5-6 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* பீன்ஸ் - 8 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவையை எடுத்து, அத்துடன்
கடலைப் பருப்பையும் சேர்த்து நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் கழுவிய கோதுமை ரவை, கடலைப் பருப்பை எடுத்துக்
கொண்டு, அதில் 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை
மூடி, அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு, இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, கஞ்சி பதத்திற்கு தேவையான அளவு
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, 3-4 நிமிடம் காய்கறிகளை
வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் ஓரளவு வெந்ததும், அதில் பொடியாக நறுக்கிய புதினா மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை சேர்த்து கிளறி, 2
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கோதுமை ரவா கஞ்சி
தயார்.
ஊட்டச்சத்து மதிப்பு:
ஒரு பௌல் கோதுமை ரவா கஞ்சியில் (350மிலி)
* கலோரிகள்: 180-210 kcal
* புரோட்டீன்: 6-7கி
* மாவுச்சத்து: 28-32கி
* டயட்டரி நார்ச்சத்து: 5-6கி
* கொழுப்பு: 5-6கி
கோதுமை ரவா கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்
* இந்த கஞ்சியில் உள்ள கோதுமை ரவையில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் மற்றும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருப்பதால், இது இரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிட்டு, நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்கவும், வயிறு நிரம்பியிருக்கவும் உதவுகிறது. இதன் மூலம் எடை இழப்புக்கும் உதவி புரிகிறது.
* இந்த கஞ்சியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
* இந்த கஞ்சியில் கேரட், பீன்ஸ் இருப்பதால், அதன் மூலும் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்றவையும் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications