For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஆழ்கடல் ஆச்சரியங்கள்!! அசத்தும் புகைப்படங்கள்!

  |

  கடல் குறித்த பிரம்மிப்பு இன்னும் நம்மிடமிருந்து விலகவில்லை. எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிப்பே ஏற்படாத வண்ணம் தன்னிடத்தில் அவ்வளவு சுவாரஸ்யங்களை மறைத்து வைத்திருக்கும் கடல் பற்றிய சில சுவாரஸ்யமான படங்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள்.

  2018 ஆம் ஆண்டுக்கான ஆழ்கடல் போட்டோகிராபியின் வெற்றியாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் புகைப்படக்கலைஞர் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 63 நாடுகளைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. இதில் பதினோறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் பட்டியல் தான் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

  புகைப்படகாரர் எதிர்ப்பார்க்கிற அந்த தருணம் வருகிற வரையில் அதற்காக எவ்வளவு மெனக்கெடல் இருக்கிறது என்பதை ஒவ்வொரு புகைப்படக்காரரும் அறிவர். அதிலும் இங்கே ஆழ்கடலில் சென்று புகைப்படம் எடுப்பது என்பது சாதரண விஷயம் கிடையாது. புகைப்படக்காரர்களின் கேமராவில் சிக்கிய சில அறிய புகைப்படங்களின் தொகுப்பு.

  இங்கே அந்த புகைப்படமும் அந்த படத்தை எடுத்த புகைப்படக்காரரின் அனுபவங்களோடு தொகுக்கப்பட்டிருக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   #1

  #1

  இந்தப் படத்தை கரீபியன் கடலில் எடுத்தேன். ஷார்க் அவற்றை பல்வேறு கோணங்களில் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு சென்றிருந்தேன். இல்லையென்றால் ஆழ்கடலில் புதைந்திருக்கும் ஏதேனும் விசித்திரமான பொருளை எடுக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

  கடலில் நான் பார்த்த காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை. ஃபைட் ஃபிஷ் எனப்படுகிற சிறிய மீன்கள் கோடிக்கணக்கானது நீந்திக் கொண்டிருக்க அவற்றின் நடுவே ஒரு பெரிய மீன் நீந்திக் கொண்டிருந்தது. சிறிது தாமதிக்காமல் பெரிய மீனுக்கு அடியில் நீந்திச் சென்றேன். எனக்கு சில துயரத்தில் அந்த பெரிய மீன் இருந்தது. சிறிய மீன்களுக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்தாது போட்டோவை க்ளிக் செய்தேன்.

  இந்த படத்தை எடுத்தது அமெரிக்காவை சேர்ந்த டன்யா ஹோப்பர்மேன்ஸ்

  #2

  #2

  இது ஜாலியான அனுபவமாக இருந்தது என்கிறார் இதனை க்ளிக் செய்த இங்கிலாந்தை சேர்ந்த மார்டின் எட்சர்.

  நீண்ட நேரமாக காத்திருந்து திருப்தியே இல்லாமல் சரி இதற்கு மேல் காத்திருக்க முடியாது மேலே ஏறிவிடலாம் என்று ஆழ்கடலில் காத்திருந்தேன். எனக்கு கடல் சிங்கத்தை படம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவை எப்போதும் மறைவான இடத்தில் வசிக்கும்.

  கடல் நீரில் பிரதிபலித்த வெளிச்சத்தை வைத்து பகல் நேரம் ஆகியிருக்கும் எனத் தோன்றியது. இந்நேரம் கடல் சிங்கம் எல்லாம் வெளியில் வராது என்பதால் கிளம்பிவிடுவது என்று முடிவெடுத்த போது என் பின்னாலிருந்து க்றீச் சத்தத்துடன் ஏதோ ஒரு உருவம் ஓடியது. பார்த்தால் குட்டி கடல் சிங்கம்.

  கேமராவுடன் தயாராய் நின்றேன். க்ளிக் செய்யும் அந்த ஒரு நொடிக்குள் இன்னொரு முறை எனக்கு போக்கு காட்டி ஓடியது. அந்த இடத்திலிருந்து விலகி சற்று தொலைவாக காத்திருந்தேன். நீண்ட நேரம் கழித்து ஒழிந்து என்னை தேடுவது போல போஸ் கொடுத்தது. கடைசியாக நான் க்ளிக் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்து வைத்திருந்த ஃப்ரேமுக்குள் வந்து கனக்கச்சிதமாக எனக்கு போஸ் கொடுத்தது.

  #3

  #3

  இந்தப் படத்தை எடுத்தது இத்தாலியை சேர்ந்த ஃப்லிப்போ போர்ஹி. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் கலிஃபோர்னியாவில் இருக்கக்கூடிய பஜா என்ற பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் மொத்த மொத்தமாக இடப்பெயர்வில் ஈடுபடும்.

  அப்படி அவை மொத்தமாக பயணிப்பதை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு சரியான தருணத்தில் ஆழ்கடலில் காத்திருந்தேன். கடல்வாழ் உயிரினங்களிலேயே விசித்திரமான மோபுலார் அல்லது பேஸ் மீன் என்று அழைக்கப்படும் ஓர் உயிரனம் குழுவாக நீந்தி நகர்ந்து கொண்டிருந்தது.

  அதன் பின்னாலேயே சுமார் இரண்டு மணி நேரம் வரை நீந்தினேன். சரியாக ஒரு நேரத்தில் எனக்கு முன்னால் நகர்ந்து கொண்டிருந்த அந்த குழுவின் ஒரு பகுதி மட்டும் கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றது. சரியாக சூரிய ஒளி மேலே பட அதன் கீழே இவை கூட்டமாக ஒதுங்கிய அந்த தருணத்தை க்ளிக் செய்தேன்.

   #4

  #4

  பலரையும் ஆச்சரியப்படுத்திய இந்த காதல் பறவைகளை எடுத்தது இங்கிலாந்தை சேர்ந்த கிராண்ட் தாமஸ். ஸ்காட்லாந்தில் இருக்கக்கூடிய லோச் லோமோண்ட் என்ற இடத்தில் ஏராளமான அன்னப்பறவைகள் இருக்கும். அதனை நீருக்கு மேலே நீந்தும் அன்னப்பறவையின் அழகை நாம் ரசித்திருக்கிறோம். நீருக்கு அடியில் அவற்றின் உலகத்தை படம் பிடிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

  பல பகுதிகளில் அன்னப்பறவை இருக்கிறது தான். குறிப்பாக இந்த இடம் தேர்ந்தெடுத்ததற்கு காரணம். இயற்கையாகவே இங்கே அழகான ஃப்ரேம் அமையும் என்பதால் தான். முதலில் நான் தண்ணீரில் இறங்கி நான் அவற்றுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தப்போவதில்லை என்று உணரவைக்கவே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்ப மாலை ஆகிவிட்டது.

  இளம் மாலை நேரத்தில் இரண்டு அன்னப்பறவை ஒரே நேரத்தில் உணவு நீரின் கீழே உணவு தேடும் காட்சியை அற்புதமாக க்ளிக் செய்துவிட்டேன்.

  #5

  #5

  சீனாவைச் சேர்ந்த டியான்ஹோங் வேங் என்பவர் எடுத்து, மேக்ரோ பிரிவில் வெற்றி பெற்ற புகைப்படம் இது. இதனை ஜப்பானிய கடல் குதிரை என்பார்கள். இயற்கையாகவே இவை இந்த நிறம் கொண்டது. இதனை க்ளிக் செய்யும் போது பின்னணியை எல்லாம் மங்கலாக தெரியும்படி செய்து லைட்டிங்கில் நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது.

  ஒரு வழியாக பிங் நிற பின்னணியில் ஆரஞ்சு நிற கடல் குதிரையை போட்டோ எடுத்துவிட்டேன்.

  #6

  #6

  அமெரிக்காவை சேர்ந்த ரினி கேபோஜோலா தான் இந்த படத்தை எடுத்தவர். பிரான்ஸில் உள்ள பாலினேஷியா அதிகமான ஷார்க் வாழும் பகுதி. ஷார்க் புகைப்படமெடுக்க விருப்பம் கொண்டவர்களின் முதல் சாய்ஸ் இந்த இடமாகத்தான் இருக்கும்.

  சூரியனையும் ஷார்க்கையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வர வேண்டும் என்ற யோசனை இருந்தது. பல நாட்கள் அடிக்கடி பல நாட்கள் புகைப்படம் எடுக்க முயன்றேன். நிறைவாக எந்தப் படமும் அமையவில்லை. இந்த காட்சி எடுப்பது மிகவும் சவாலாகவும் இருந்தது. ஏனென்றால் சூரியன் இருக்கும் திசையில் முழுவதுமாக மறைவதற்குள் ஷார்க் அந்த பகுதிக்கு வர வேண்டும்.

  கடைசியாக ஒரு நாள் கடல் அலை மேலே எழும்ப சூனியனுக்கும், கடலுக்கும் அடியில் ஷார்க் தெரியும்படியாக அற்புதமான ஷாட் கிடைத்துவிட்டது. கடல் சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் ஷார்க் முக்கியப்பங்காற்றுகிறது. ஆனால் மக்களின் பேராசையினால் ஒரு வருடத்திற்கு 100 மில்லியன் ஷார்க் வரை வேட்டையாடப்படுகிறது. இது போன்று புகைப்படம் எடுத்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதால் வேட்டையாடுவது தவிர்க்கப்படவேண்டும் என்பது தான் என் ஆசை.

  #7

  #7

  ஸ்லோவேனியாவைச் சேர்ந்த போருட் ஃபுர்லேன் என்பவர் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அன்றைய போட்டோ எடுக்கும் நேரம் முடிந்து விட்டது. என்னுடன் வந்த டைவ் மாஸ்டரை மீண்டும் அந்த முதலைகளை பார்த்த பகுதிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவற்றை நான் மீண்டும் புகைப்படமெடுக்க வேண்டும் என்று சொன்னேன்.

  கேமராவில் செட்டிங்சை மாற்றி சூரியன் மறையும் அந்த தருணத்தில் காத்திருந்தேன். எதிர்ப்பார்த்தது போலவே ஒரு முதலை வந்து வாயைத் திறந்து கச்சிதமாக போஸ் கொடுத்தது. பல கோணங்கள் அவற்றை புகைப்படம் எடுத்துக் கொண்டேன். ஒரு படத்தில் முதலையின் பிம்பம் மேலேயிருந்த நீரிலும் வெளிப்பட்டிருந்தது. அது பார்க்க வித்யாசமாக இருந்தது. கடைசியில் அதுவே வெற்றியும் பெற்றுவிட்டது.

  #8

  #8

  இத்தாலியைச் சேர்ந்த ஃபிலிப்போ போர்கி என்பவர் இந்த படத்தை எடுத்திருக்கிறார். குளிர்காலத்தின் போது கடல் பறவை ஒன்று சீனாவை சென்றடைவதற்கு முன்னால் பெனின்சுலாவில் இரண்டு மாதங்கள் வரை தங்கும்.

  அவை நீந்துவது, மீன் பிடிப்பது போன்ற அவற்றின் அன்றாட நடவடிக்கைகளை படம் எடுக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பெனின்சுலாவிற்கு சென்றேன். அதே இடத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை சென்று அவற்றின் அசைவுகளை எல்லாம் கண்காணித்தேன்.அப்போது ஒரு பறவை மீனை கவ்வியது. மீனின் கண்ணும் பறவையின் கண்ணும் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்வது போல இருக்க சட்டென க்ளிக் செய்தேன்.

  #9

  #9

  ஃபின்லாந்தைச் சேர்ந்த பெக்கா டுர்ரி என்பவர் தான் இந்த படத்தின் சொந்தக்காரார். படத்தை பார்த்ததும் கடலுக்கு அடியில் எப்படி நெருப்பு? அதுவும் சமைத்து சாப்பிட முடியுமா என்று நம்மையெல்லாம் புருவம் உயர்த்த செய்திருக்கிறார் பெக்கா.

  நாங்கள் திட்டமிட்டு எடுத்த காட்சி இது. கடலை ஒரு குகையாக பாவித்து குகைக்குள் ஒரு மனிதன் நெருப்பு மூட்டுகிறான் என்று கற்பனை செய்து பார்த்தேன். கடலில் நெருப்பா என்று எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதனை சாத்தியப்படுத்த யோசித்தோம்.

  உலர்ந்த ஐஸ்கட்டிகள் எடுத்துக் கொண்டோம். அவை தண்ணீரில் போட்டதும் அதிகப்படியன குமிழிகள் உருவாகும் அதோடு வெகு சீக்கிரமே அவை கரைந்திடும். அதன் பிறகு டார்ச் லைட்டின் போது ஆரஞ்சு நிற ஜெல்லைத் தடவி இளம் ஆரஞ்சு நிறத்தில் வெளிச்சம் வருவது போல தயார்படுத்தினோம். சில மரத்துண்டுகள், ஸ்டிக் ஆகியவற்றையெல்லாம் திட்டமிடு எடுத்துச் சென்று அங்கே செட் செய்து உலர் ஐஸ் கட்டி போட்டதும் ஏற்படுகிற குமிழ்கள் அடங்குவதற்குள் க்ளிக் செய்யப்பட்டது.

  All Image Source

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Surprising Images Of Underwater Living Organisms

  Surprising Images Of Underwater Living Organisms
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more