For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள நம்மை அச்சுறுத்தும் மிகவும் பயங்கரமான நகரங்கள்!

|

ஒருவரை அச்சுறுத்தும் எந்த ஒரு விஷயமும் அனைவரது கவனத்தையும் உடனடியாக ஈர்க்கும். பலருக்கும்பேய் கதைகள் மற்றும் பயங்கரமான இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். உலகில் அமானுஷ்ய விஷயங்கள் நடைபெறும் நிறைய இடங்கள் அல்லது நகரங்கள் இருப்பதைப் பற்றி படித்திருப்போம்.

இப்போது இக்கட்டுரையில் உலகில் உள்ள நம்மை அச்சுறுத்தும் மிகவும் பயங்கரமான நகரங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த நகரங்களில் நடந்த அதிகபட்ச அமானுட மற்றும் ஒருசில பயங்கரமான விஷயங்களால், அந்நகரத்தில் மக்களே இல்லாமல் காலியாகி வெற்றிடமாக உள்ளது. இப்போது அவற்றைக் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ராகோ, இத்தாலி

க்ராகோ, இத்தாலி

இத்தாலியில் உள்ள க்ராகோ நகரத்தில் சுமார் 1800 மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் 1963 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம், இப்பகுதியில் அமானுட நடவடிக்கைகளுடன், எரிமலைகள் அளவுக்கு அதிகமாக செயலில் இருந்ததால், அங்குள்ள மக்களை நிரந்தரமாக இடமாற்றம் செய்துவிட்டனர்.

Image Courtesy

ஃபோர்டுலேண்டியா, பிரேசில்

ஃபோர்டுலேண்டியா, பிரேசில்

இந்த நகரத்தில் அதிகமாக பேய் நடமாட்டம் இருந்ததால், அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர். தற்போது இது தரிசு நிலமாக உள்ளது. மேலும் இப்பகுதி பல தசாப்தங்களாக தடைசெய்யப்பட்ட பகுதியாக உள்ளது.

Image Courtesy

ஹஷிமா தீவு, ஜப்பான்

ஹஷிமா தீவு, ஜப்பான்

ஒரு காலத்தில் இந்த தீவு சுரங்க நடவடிக்கை

களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. திடீரென்று அங்கு நிலக்கரி சுரங்கம் மூடப்பட்டு விட்டதால், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அந்த தீவை விட்டு வெளியேறி, தற்போது அந்த தீவு வெற்றிடமாக பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ளது.

Image Courtesy

டலால், எத்தியோப்பியா

டலால், எத்தியோப்பியா

உலகிலேயே மிகவும் வெப்பமிகுந்த இடம் என்றால் அது எத்தியோப்பியாவில் உள்ள டலால் பகுதி தான். இங்குள்ள எரிமலைகள் செயலில் இருப்பதாலும், கடுமையான காலநிலையாலும், இங்குள்ள மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி, தற்போது டலால் பகுதி வெறிச்சோடியுள்ளது.

Image Courtesy

செந்ட்ரலிய, பென்சில்வேனியா

செந்ட்ரலிய, பென்சில்வேனியா

இப்பகுதியில் நிலக்கரியானது பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருப்பதால் வெளியேறும் தீங்கு விளைவிக்கும் வாயுவின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, அங்கு வாழ்ந்து வந்த மக்கள் குடும்பத்துடன் வெளியேறி, தற்போது அப்பகுதி பயங்கரமான இடமாக உள்ளது.

Image Courtesy

பாம்பீ, இத்தாலி

பாம்பீ, இத்தாலி

இந்த பகுதியானது வேசுவியஸ் மலை வெடித்த போது தடைசெய்யப்பட்ட பகுதியாகிவிட்டது. இந்த மலையின் வெடிப்பின் போது சுமார் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். மேலும் நிறைய மக்கள் இப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் இன்றும் இப்பகுதி உலகில் உள்ள பயங்கரமான பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Most Famous Ghost Towns In The World

Anything that is scary grabs attention immediately. We often have read about the scary places in the world or about the most haunted cities in the world.
Story first published: Wednesday, August 31, 2016, 14:40 [IST]
Desktop Bottom Promotion