சூப்பர் சிங்கர் செந்தில் ஏற்கனவே 2 படத்துல ஹீரோவா நடிச்சிருக்காரா?... புகைப்படங்கள் உள்ளே...

By Manimegalai
Subscribe to Boldsky

விஜய் டீவி நிகழ்சிகளில் எல்லோராலும் கவனிக்கப்படும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இது பல சீசன்களைக் கடந்து தற்போது வித்தியாசமான முறையில் இரண்டு எதிரெதிர் போட்டிகளாக நடைபெற்று வருகிறது. இதில ஒரு அணிக்கு தலைவர்களாக பென்னி தயாள் மற்றும் அனுராதா ஸ்ரீராம் அவர்களும் மற்றொரு அணிக்கு உன்னி கிருஷ்ணனும் ஸ்வேதா மோகனும் இருக்கிறார்கள். இதில் ஸ்வேதா அணியில் ராஜலட்சுமியும் பென்னி அணியில் செந்திலும் பாட்டுப்பாடி கலக்கி வருகிறார்கள். அதெல்லாம் ஒரு ஆச்சர்யமே இல்லை. ஆனால் அவர்கள் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது இதுவரை வெளியாமல் இருந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில்இந்த செய்தி வேகமாகப் பரவி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நாட்டுப்புறப்பாடல்

1. நாட்டுப்புறப்பாடல்

நாட்டுப்புறப் பாடகராக இருந்த செல்ல தங்கையா அவர்கள் பள்ளிப் பருவம் முதலே நாட்டுப்புறப்பாடல்களை எழுதத் தொடங்கினார். புதுக்கோட்டை ஆலங்குடி கலபம் ஊர். இவரை அதிகமாக ஈர்த்தது கோட்டை சாமி ஆறுமமுகம் குழுவினர். அதுபோல தானும் ஒரு கலைக்குழு நடத்த திட்டமிட்டு கலபம் செல்லத் தங்கையா குழுவினர் என்ற பெயரில் 15 பேர் கொண்ட குழு அமைத்து 1995 இல் அரங்கேற்றம் செய்திருக்கிறார். அவருடைய குழுவினரில் ஒருவராகப் பாடிக்கொண்டிருந்தவர் தான் நம்முடைய சூப்பர் சிங்கர் செந்தில்.

2. திருடு போகாத மனசு

2. திருடு போகாத மனசு

இயக்குனர் செல்ல தங்கையா திரைத்துறையில் முன் அனுபவம் இல்லாமல் இருந்தாலும் தானே கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, தயாரிப்பு அத்தனையும் செய்தார். அந்த படத்திற்கு கதாநாயகன் பற்றி யோசிக்கும்போது, தன்னுடைய குழுவில் பாடிக்கொண்டிருந்த செந்தில் கணேசுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்தார்.

3. ஹீரோ செந்தில் கணேஷ்

3. ஹீரோ செந்தில் கணேஷ்

அதுவரை ஊர் ஊராக நாட்டுப்புறப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த செந்தில் கணேஷ் வெள்ளித்திரையில் தலை காட்டினார். அந்த படத்திலும் அவர் நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் கலைஞனாக வந்து போகிறார்.

4. மனநிலை பாதிப்பு

4. மனநிலை பாதிப்பு

அதோடு செந்தில் கணேஷ் அந்த படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக வருகிறார். மருத்துவம் படிக்கும் கதாநாயகி தன் வாழ்வில் ஒரு பைத்தியத்தை குணமாக்கி அவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும்போது தான் செந்திலை சந்திக்கிறார்.

5. பின்னணி பாடல்

5. பின்னணி பாடல்

இந்த படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். அத்தனையையும் இயக்குனர் செல்ல தங்கையாவே எழுத செந்தில் அத்தனை பாடல்களையும் அவருடைய சொந்த குரலில் பாடியிருக்கிறார்.

6. 2 ஆவது படம்

6. 2 ஆவது படம்

முதல் படம் வெற்றியடையவில்லை என்று சோர்ந்து போகாமல் அடுத்த படத்தையும் எடுக்க இயக்குனர் தயாரானார். அதிலும் செந்தில் கணேசுக்கே மீண்டும் ஹீரோ வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் தான் கரிமுகன்.

7. ராஜலட்சுமி

7. ராஜலட்சுமி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் ராஜலட்சுமி. கைத்தறி நெசவை குலத் தொழிலாளாகக் கொண்ட ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளிப் பருவம் முதலே நாட்டுப்புறக் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வீட்டில் வறுமை அதிகமாக அதிகமாக அவருடைய அம்மா வீட்டு வேலை செய்து இவரை படிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய பாடல் திறமையையே தன்னுடைய தொழிலாக மாற்றிக் கொண்டார். அதன்பின்னர் தான் மூன்று வேளை உணவை நிம்மதியாக சாப்பிட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

8. டீவி தொகுப்பாளினி

8. டீவி தொகுப்பாளினி

செந்தில் கணேசின் மனைவி ராஜலட்சுமி வீட்டின் சூழல் கருதி ஊர் ஊராகச் சென்று நாட்டுப்பறப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், தன்னானே என்னும் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாகவும் வேலை பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் தான் செல்ல தங்கையாவின் முதல் படமான, திருடு போகாத மனசில் செந்தில் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினான சாய் ஜஸ்வர்யாவுக்கு நெருங்கிய தோழியாக ராஜலட்சுமி நடித்திருக்கிறார். இதேபோல் வேறு சில படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

9. காதல்

9. காதல்

தன்னுடன் இணைந்து பாடல் பாடிக்கொண்டும் தன்னுடைய படங்களில் துணை கதாபாத்திரங்களில் கதாநாயகிக்கு நெருங்கிய தோழியாக நடித்து வந்த ராஜலட்சுமியின் மீது செந்தில் காதல் அம்ப வீசினார். ராஜலட்சுமியும் அவர் மீது காதல் வசப்பட்டார்.

10. திருமணம்

10. திருமணம்

திருடு போகாத மனசு, கரிமுகன் என இரண்டு படங்களில் நடித்த அவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னுடன் அவ்வப்போது இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள்பாடி வந்த, தன்னுடைய படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த ராஜலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

11. குழந்தைகள்

11. குழந்தைகள்

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடிக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் அழகான ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். ஆண் குழந்தை பள்ளிக்கு செல்கிறார். பெண் குழந்தைக்கு ஒரு வயது.

12. நெடுவாசல் போராட்ட களம்

12. நெடுவாசல் போராட்ட களம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராட்டங்கள் தீவிரமடைந்த போது, ஒரு கர்ப்பிணி பெண் நிறைமாத கர்ப்பத்தோடு தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் கிராமங்களின் உயிர்ப்பையும் கும்மி பாட்டு பாடி, தமிழகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தார். அவர் வேறும் யாருமில்லைங்க... இந்த ராஜலட்சுமிதான்.

13. நாட்டுப்புற பாடல் குழு

13. நாட்டுப்புற பாடல் குழு

நாட்டுப்பறக் கலைஞர் செல்ல தங்கையாவின் குழுவில் இருவரும் இணைந்து நாட்டுப்பறக் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒரு நிகழ்ச்சி தற்போது 25 ஆயிரம் ரூபாய் வரை வாங்குவதாகக் கூறப்படுகிறது.

14. சூப்பர் சிங்கர் பயணம்

14. சூப்பர் சிங்கர் பயணம்

இப்படி இவர்களுடைய குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருக்க, சூப்பர் சிங்கர் ஆடிசனில் கலந்து கொண்ட இருவருமே தேர்வானார்கள். அதைத்தொடர்ந்து, ராஜலட்சுமி உன்னிகிருஷ்ணன் மற்றும் ஸ்வேதா மோகன் அவர்களின் டீமிலும் செந்தில் கணேஷ் அதற்கு எதிர் போட்டி அணியான அனுராதா ஸ்ரீராம் மற்றும் பென்னி தயாள் டீமிலும் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து பாடி வருகின்றனர்.

இருவரும் எதிர் எதிர் அணியில் போட்டியாளர்களாகக் களமிறங்கினாலும் காதல் சொட்ட சொட்ட இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் மாறி மாறி பாடல் பாடி அரங்கத்தை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் நாம் புதுமுகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற பல பேர் நமக்குத் தெரியாமல் ஏதாவது ஒரு துறையில் பிரபலமடையாமல் இருநு்திருக்கிறார்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் தான் இந்த காதல் ஜோடி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    super singer senthil ganesh acts like hero in movies

    super singer senthil ganesh acts like hero in movies
    Story first published: Saturday, March 17, 2018, 14:45 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more