Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்திய நடிகர், நடிகைகள் பற்றி நீங்கள் அறியாத வேறொரு முகங்கள்!
இந்திய நடிகர், நடிகைகள் பற்றி நீங்கள் அறியாத வேறொரு முகங்கள்!
நடிப்பு என்பது நோகாமால் நோம்பி கும்பிடும் ஒன்று... சும்மா வந்து கைய, கால ஆட்டிட்டு... கவர்ச்சி உடையில நடிச்சுட்டு லட்சங்கள், கோடிகள் சம்பளம் வாங்கிட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்றாங்க என நடிகர், நடிகைகள் மீது பலருக்கும் பொதுவான கருத்து இருக்கிறது.
அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் அந்த சொகுசு வாழ்க்கை அமைந்துவிடுவது இல்லை. ஓரிரு படங்களில் நல்ல வெற்றிப்பெற்று பிறகு தொடர் தோல்வியில் காணமல் போன பலரை நாம் அறிந்துள்ளோம். ப்ரைவேட் சோன் என்ற வாழ்க்கையை இழந்து தவிக்கும் பிரபலங்களே அதிகம்.
நம்மால், சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்கள், அரசியலில் நடக்கும் பிரச்சனைகளை எளிதாக சமூக தளங்களில் அலசி, ஆராய முடியும். ஆனால், நடிகர், நடிகைகளால் அப்படி வாழ இயலாது. அரசியல் என்றில்லை, ஒரு பொது வாழ்க்கை கருத்தினை கூறினாலும் அது தலைப்பு செய்தியாகிவிடும். டி.ஆர்.பி அதிகரிக்க செய்தி ஊடகங்கள் உடனே ஒரு வட்ட மேஜை பேட்டி எடுத்து அந்த தீயை அணையாமல் பார்த்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு நடிகர், நடிகையருக்கும் திரைக்கு அப்பாற்பட்ட வேறு ஒரு முகம் இருக்கிறது. பொதுவாக அஜித் என்றால்.. அவர் ஒரு சிறந்த ஏரோ மாடல், மெக்கானிக், புகைப்படக் கலைஞர் என்று நாம் அனைவரும் அறிவோம். இது போல, இந்தியாவின் வேறு சில நட்சந்திரங்கள்.. மற்றும் அவர்களது வேறொரு முகத்தை இந்த தொகுப்பில் காணலாம்...

ராஜஸ்ரீ தேஷ்பாண்டே!
நெட்ஃபிளிக்ஸில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் Sacred Games. இதில் சுபத்ரா கைடோண்டே என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் ராஜஸ்ரீ தேஷ்பாண்டே. ராஜஸ்ரீ தேச்பாண்டே தனியாக ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் இவர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

பன்முகம்!
ராஜஸ்ரீ தேச்பாண்டே வெறும் நடிகை மட்டுமல்ல, இவர் ஒரு பன்முக கலைஞர். நாடக கலைஞர், நடன கலைஞர், பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர்., மாடல் மற்றும் சமூக சேவையும் செய்து வருகிறார். இதற்கு எல்லாம் தாண்டிய முகம் தான் நடிகை.

வேறு ஒன்று...
நெட்ஃபிளிக்ஸ் Sacred Games தொடரில் இவரது தைரியமான கதாப்பாத்திரம் சமூக தளங்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றன. ஆயினும், ராஜஸ்ரீ தேஷ்பாண்டே குறித்து நாம் அறிய வேண்டிய வேறு முகமொன்று இருக்கிறது. அதை தான் ரசிகர்கள் பெரிதும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

விவசாயி தற்கொலைகள்
2015ம் ஆண்டு ராஜஸ்தானில் விவசாயிகள் பெரும் கஷ்டத்தில் இருந்தனர். நிறைய தற்கொலை சம்பவங்கள். ராஜஸ்ரீ இதை கண்டு மனம் வருந்தினார். சமூக தளங்களில் இதுக்குறித்து பதிவிடுவதை காட்டிலும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினார். பர்பானி, பீட, லதூர் மற்றும் ஜால்னா போன்ற இடங்களுக்கு சென்று அங்கே விவசாயிகள் எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அலசி, ஆராய்ந்தார் ராஜஸ்ரீ தேஷ்பாண்டே.

மழைநீர் சேகரிப்பு!
அனைவரின் வீட்டிலும் போர்வெல் இருந்தாலும், வருடத்திற்கு, வருடம் நீர் மட்டம் குறைந்துக் கொண்டே போனதை அறிந்த ராஜஸ்ரீ. தற்காலிக தீர்வாக டாங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வரவழைத்தவர். நிரந்தர தீர்வாக, அனைவருக்கும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆரம்பத்தில், கிராம மக்களுக்கு இது சரியாக புரியவில்லை என்றாலும், நாள்பட அவர்கள் இதை கற்று கொண்டனர்.

பயன்!
இப்போது, அந்த கிராமப்புற பகுதிகளில் நீர்வளம் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார் ராஜஸ்ரீ தேஷ்பாண்டே.
இது மட்டுமின்றி திருநங்கைகள் வாழ்வாதாரம் மற்றும் சேரிகளில் வாழும் ஏழை மக்களுக்கும் தனது அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி வருகிறார் ராஜஸ்ரீ தேஷ்பாண்டே.

ரீல் தோனி!
எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரியில் தோனியாகவே வாழ்ந்து அசத்தியவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகராக அனைவரும் அறிவார்கள். ஆனால், இவர் கடந்த 2003ம் ஆண்டு AIEEE தேர்வில் தேசிய அளவில் ஏழாவது ரேன்க் பிடித்திருந்தார். ஏறத்தாழ 11 இலட்சம் பேர் பங்கெடுத்துக் கொண்ட தேர்வில் ஏழாவது இடம் பிடிப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல.

ரியல் ஹீரோ
மேலும், சமீபத்தில் கேரளாவில் மழை வெள்ளம் உண்டானதும், அதனால், அங்கே பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்ததை நாம் அனைவரும் அறிவோம். சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு ட்விட்டரில் நண்பர் ஒருவர், தான் உதவ நினைக்கிறேன் ஆனால், பணவசதி இல்லை என்று பதிவிட, அவரது பெயரிலேயே ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிக்கிறேன் என்று உடனடியாக கேரள முதல்வர் நன்கொடை வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

ஸ்மிதா பாட்டில்!
நாடகம், டிவி மற்றும் இந்தி சினிமாக்களில் நடித்த, பெரும் புகழ் பெற்றவர் ஸ்மிதா பாட்டில். இவர் இரண்டு முறை தேசிய விருது மற்றும் இரண்டு முறை ஃபிலிம் ஃபேர் விருதுகள் வென்றிருக்கிறார். இவரை ஒரு சிறந்த நடிகையாக அனைவருக்கும் தெரியும்.

அழுதார்...
மேலும், இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் வேலை செய்திருக்கிறார். ஆனால், இவர் முதல் முறை தூர்ஷர்ஷன் ஆடிஷனுக்கு சென்ற போது தேர்வாகவில்லை. தான் தேர்வாகவில்லை என்பதை அறிந்த ஸ்மிதா பாட்டில் அங்கேயே அழுதுள்ளார். உடனே, அன்றைய தூர்தர்ஷன் இயக்குனர் யாகூப் சயத்தை சந்தித்து, மீண்டுமொரு வாய்ப்பு தருமாறு அணுகி... ஆடிஷனில் பங்குபெற்று வேலை பெற்று இருக்கிறார் ஸ்மிதா பாட்டில்.



Click it and Unblock the Notifications