ராகு கேது பெயர்ச்சியினால் ஏன் உங்கள் ராசியில் இத்தனை தடுமாற்றங்கள்?

Written By:
Subscribe to Boldsky

என்ன தான் உழைப்பைக் கொட்டினாலும் ராசி பலன் கட்டங்கள் மற்றும் அதன் பார்வை குறித்த தாக்கங்களெல்லாம் நம்மை பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றன,நம்முடைய வாழ்க்கை முறையினையே மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டதாக நம்மை ஆட்டிப் படைக்கிறது.

உண்மையில் நமக்கு ஜாதகம் எப்படி பலனளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னால் யாரிந்த ராகு கேது? அவர்களால் எப்படி நம்முடைய ராசிக்கு இடைஞ்சல்கள் உருவாகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆதிபராசக்தியை வேண்டிக் கொண்டு துர்வாச முனிவர் தவமிருந்தார்.தவத்தை மெச்சிய தேவி வேண்டும் வரம் கேள் என்கிறார். அதற்கு பதிலளித்த முனிவர், தனக்கு தேவைகள் என்று எதுவுமில்லை எனவும், எப்போதும் உங்களை நான் தரிசிக்க வேண்டும் என்று மட்டும் சொல்கிறார்.

இதனால் மகிழ்ந்த தேவி, முனிவரை பாராட்டி தன் கழுத்திலிருந்த ஒரு பூமாலையை கொடுத்து ஆசிர்வதித்து அனுப்புகிறாள்.

Image Courtesy

#2

#2

பூமாலையுடன் அங்கிருந்து வெளியேறிய முனிவர், தேவியிடம் பெற்ற மாலையை இந்திரனுக்கு கொடுக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட இந்திரன் அந்த மாலையை கர்வத்துடன் தன்னுடைய யானைக்கு அணிவித்து விடுகிறான்.

அதைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கேறியது.

#3

#3

அடுத்த கணமே, முனிவர் தேவ குலத்தில் பிறந்த நீயும் உன் குலத்தவரும் இனி அரக்க குலமாம மாறிவிடுவீர்கள் என்று சாபமிடுகிறார். இந்திரணின் மனைவி இந்திராணி பயந்து கொண்டு மன்னிப்பு கேட்கிறார் அதோடு சாபவிமாஷனமும் கேட்கிறார்.

அமிர்தம் உண்டால் மீண்டும் தேவர்களாகிவிடுவீர்கள் என்று சொல்லி மறைந்துவிட்டார்.

Image Courtesy

#4

#4

அமிர்தம் பற்றிய விவரம் சரிவர தெரியவில்லை அதனால் நாரதரிடம் கேட்க அவரோ காற்றையே உணவென கொண்டு வாழும் வாசுகி பாம்பினை கயிராக திரித்து மந்திரமலையைக் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிவித்தார்.

தேவர்கள் எல்லாம் சேர்ந்து கடைந்து அமிர்தத்தை எடுப்பது என வேலையில் இறங்கினார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை அதனால் அசுரர்களையும் துணைக்கு அழைத்து கிடைக்கின்ற அமிர்தத்தில் உங்களுக்கும் ஒரு பங்குண்டு என்று ஆசையை கிளப்பினான்.

#5

#5

உடனே அசுரர்கள் ஒப்புக் கொண்டார்கள். மலையின் தலையில் இருந்து தான் அமிர்தம் வெளிவரும் என்று நினைத்து அசுரர்கள் தலைப்பாகத்திற்கு அருகில் நின்று கொண்டார்கள். ஆனால் தலைப்பாகத்திலிருந்து நஞ்சு வெளிப்பட்டது.

கடையும் போது வெளிப்பட்ட நஞ்சினால் ஏராளமான அசுரர்கள் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட எல்லாரும் இறந்துவிட்டார்கள்.

Image Courtesy

#6

#6

அதன் பிறகு அமிர்தம் வெளிப்பட்டது அதனை தேவர்கள் பகிர்ந்து கொள்ள முனைந்த போது தான் சில அரக்கர்கள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இருவருக்குமிடையில் அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்வதில் சண்டை ஆரம்பமானது.

சண்டையை தீர்க்க நினைத்த பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து இருவருக்கும் சமமாக அமிர்தத்தை பிரித்துக் கொடுப்பதாக உறுதியளித்தார்.

Image Courtesy

#7

#7

முதலில் வரிசையில் நின்றிருந்த தேவர்களுக்கு நிறைய அமிர்தம் கொடுப்பதாக உணர்ந்த அசுரன் ஒருவன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புகுந்து அமிர்தம் பெற்றுக் கொண்டான். இதை அங்கிருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை.

ஆனால் இந்திரன் இதை கவித்து மகாவிஷ்ணுவிடம் சொல்ல அவர் சக்ராயுதத்தால் அமிர்தம் வாங்கிக் குடித்த அசுரனின் தலையைக் கொய்தார்

Image Courtesy

#8

#8

அமிர்தம் குடித்திருந்ததால் தலையும், உடலும் வேறு வேறாக பிரிந்திருந்தாலும் உயிர் பிரியாமல் துடித்துக்கொண்டிருந்தது. இதனை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது விஷ்ணு அவன் உடலில் இறந்த வாசுகி பாம்பின் தலையையும் உடலையும் சேர்த்துவிட்டார்.

அதே போல இறந்த வாசுகி பாம்பின் உடலையும் அமிர்தம் குடித்து தேவர்களில் இணைந்து கொண்ட அசுரனை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை

Image Courtesy

#9

#9

யாருமே சேர்த்துக் கொள்ளாமல் தனித்து விடப்பட்ட இவர்களைத் தான் நாம் ராகு கேது என்று அழைக்கிறோம்,ராமு மனித முகம் மற்றும் பாம்பின் தலையுடனும் கேது பாம்பின் தலை மற்றும் மனித உடலுடன் இருந்தார்கள்.

தொடர்ந்து தன் நிலையினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லி சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார்கள்

Image Courtesy

 #10

#10

இவர்களின் தவத்தை மெச்சிய சிவபெருமான் ராகு மற்றும் கேதுவுக்கு நவக்கிரக பதவியை வழங்கினார். சக்தி மற்றும் விநாயகரின் கட்டுப்பாட்டில் மனித வாழ்க்கைக்குள் நுழைந்தனர்.

இந்த கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாவர்.

இவர்களுக்கு என்று தனி இடம் இல்லாததால் இவர்கள் வாசம் செய்கின்ற ராசியைப் பொறுத்து பலன்கள் கிடைத்திடும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Story About Ragu and Kethu

Story About Ragu and Kethu
Story first published: Friday, February 9, 2018, 15:56 [IST]
Subscribe Newsletter