For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  குழந்தையின் வாயைத் திறந்து விஷத்தை ஊற்று! வரலாற்றில் நிகழ்ந்த கொடூர தற்கொலை

  |

  ஓர் உயிர் இந்த உலகத்திற்கு வரவேண்டுமானால் எவ்வளவு பிரயத்தனங்கள் வேண்டுமென்று உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். சமீப காலங்களாக பத்திரிக்கைகளில் அடிக்கடி இடம்பெறுகிற ஒரு பெயர் தற்கொலை.

  என்ன தான் அதற்கு காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை என்பது கொடூரமானது தான், திட்டியதால்,தோல்வியால்,அவமானத்தால் என ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு முறை தற்கொலை எண்ணம் தலை தூக்கும் போதும் இதிலிருந்து நம்மால் மீண்டு வர முடியுமா? முடியாதா என்று யோசித்தாலோ அல்லது உங்களுக்கு இருக்கிற கடமைகளை நினைத்து, இதெல்லாம் ஒரு விஷயமா என்று உங்களை நீங்களே தேற்றிக் கொள்வதில் தான் இருக்கிறது உங்களுடைய சமாதானம்.

  தமிழகத்தில் சில தற்கொலைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, அரசியலில் கூட கதிகலங்க வைத்திருக்கிறது.ஒவ்வொரு முறை தற்கொலை என்ற செய்தி கேட்கும் போதெல்லாம் நம்மையறியாமலே ஒரு பயம் ஒட்டிக் கொள்வதை உணர்ந்திருந்திருக்கிறீர்களா?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  இங்கே பாருங்கள் :

  இங்கே பாருங்கள் :

  தாங்க முடியாத பிரச்சனை, இனி இதற்கு தீர்வேயில்லை என்று அவர்களாகவே நினைத்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். தனியாள்,குடும்பம் என்பதையெல்லாம் தாண்டி ஒரு ஊரே தற்கொலை செய்து கொள்ளுமா?

  அப்படி ஒரு ஊரே சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு அவர்களிடம் என்ன காரணம் இருந்திட முடியும்? அவ்வளவு ஒற்றுமையா..... 1978 ஆம் ஆண்டு கயானாவில் ஒரே சமயம் 900 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். நடந்த அந்த வரலாற்று நிகழ்வினைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

  Image Courtesy

  ஜிம் ஜோன்ஸ் :

  ஜிம் ஜோன்ஸ் :

  இண்டியானாவை பிறப்பிடமாக கொண்ட ஜேம்ஸ் வாரன் என்று அழைக்கப்படும் ஜிம் ஜோன்ஸ் அப்பாலஸ்டிக் சோசலிசம் எனப்படுகிற ஒரு கொள்கையுடையவர் இவர். தன் இன மக்களை எல்லாம் ஒன்றினைத்து தென் அமெரிக்காவின் கயானா என்ற இடத்தில் குடிபெயர்கிறார்.

  அதாவது ஓர் சர்வாதிகார ஆட்சியாளராக அந்த மக்களுடன் வசிக்கிறார் ஜிம். அங்கே ஓர் வழிபாட்டுத் தளமும் இருந்திருக்கிறது.

  Image Courtesy

  பிரச்சனை ஆரம்பம் :

  பிரச்சனை ஆரம்பம் :

  ஏற்கனவே பல்வேறு அரசியல் நெருக்கடிகளால் தான், நானும் என் மக்களும் இங்கே தனியாக ஒற்றுமையுடன் இருக்கிறோம்.... இங்கே நான் தான் எல்லாம் என்கிற ஒரு சர்வாதிகாரப்போக்குடன் இருந்திருக்கிறார். இவருக்கு விசாரணை என்ற பெயரில் பிரச்சனை தலை தூக்க ஆரம்பித்தது.

  காங்கிரஸை சேர்ந்த லியோ ரேயான் என்பவர் தான் அதன் ஒரு முகமாக இருந்தார். இவர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர். இவரது உறவினர்கள் சிலரும் ஜிம்மின் கூட்டத்தினரோடு இருக்கிறார்கள்.

  Image Courtesy

  என்ன நடக்கிறது? :

  என்ன நடக்கிறது? :

  திடீரென்று ஒரு நாள் ஊரையே காலி செய்து, இனி எல்லாம் நான் தான் நான் தான் இங்கே ராஜா நீங்கள் இனி இங்கே சாமி கும்பிடலாம், உங்கள் வாழ்க்கையை இனி இங்கே அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அழைத்துச் செல்வது பெரும் சர்சையை உண்டாக்கியிருந்தது.

  அங்கே அனுமதியும் கிடுக்குப்பிடி இருந்ததினால், அங்கே என்ன நடக்கிறது அங்கேயிருக்கிற வழிபாட்டுத் தளம் யாருடையது அவரக்ளின் வாழ்வாதாரம் என்ன? ஜிம் அடுத்ததாக என்ன செய்ய திட்டம் வைத்திருக்கிறார் போன்ற தகவல்கள் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டினார்கள். அவர்களின் பிரதிநிதியாக லியோ ரேயான், சில அரசாங்க அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் என ஒரு கூட்டம் ஜோன்ஸ்டவுனுக்குள் நுழைந்தது.

  Image Courtesy

  15 பேர் :

  15 பேர் :

  ரேயான் வந்து விசாரணை மேற்கொண்டு திரும்புகையில் அந்த வழிபாட்டு தளத்தை சேர்ந்த 15 பேர் அமெரிக்காவிற்கு வர வேண்டும் என்று கட்டளையிட்டார். இங்கே நாந்தான் ராஜா என்னை விசாரிக்க, என் நாட்டு மக்களை விசாரிக்க நீ யார்.... என்று ஜிம்முக்கும், ரேயானுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நடந்தது.

  விமானம் கிளம்புவதற்கு தயாரானது, அப்போது திடிரென்று குண்டுச் சத்தம், விசாரிக்க வந்த ரேயான் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த 11 பேருக்கு காயம் உண்டானது.

  Image Courtesy

  கைது :

  கைது :

  இந்த விஷயம் வெளியே வேகமாக பரவியது. விமான நிலையத்தில் நடந்த அந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணம் லேரி லேட்டன் என்பவர் தான் என்று சொல்லி ஒருவன் கைது செய்யப்பட்டான். அவன் ஜிம் ஜோனின் விசுவாசி.

  ஜிம் ஜோன்ஸின் பாதுகாப்பு குழுவில் இடம் பெற்றிருந்தான். அங்கே துப்பாக்கி சூட்டில் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் ஈடுப்பட்டிருந்தாலும் லேட்டன் மட்டுமே தான் கொலையாளி என்று கைது செய்யப்பட்டான்.

  Image Courtesy

   கொடுமை ஆரம்பம் :

  கொடுமை ஆரம்பம் :

  இங்கே இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே, ஜிம் தன்னுடைய ஆதரவாளர்கள் சிலரை அழைத்து அவர்களிடம் ‘புரட்சிகர தற்கொலை'யைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தான். அதோடு உடனே நிறைவேற்றும்படியும் கட்டளையிட்டான்.

  Image Courtesy

  ரிஹர்சல் :

  ரிஹர்சல் :

  கோவிலில் போதனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திற்கு இடையில் ஜிம் ஜோன்ஸின் இந்தக் கட்டளை குறித்து மக்களிடம் சொல்லப்பட்டது, புரட்சிகர தற்கொலையின் படி நாம் எல்லாருமே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதன் முன்னோட்டமாக இப்போது இந்த கோவிலில் இருக்கும் நாம் இறக்கப்போகிறோம் என்றான் ஜிம்மின் விசுவாசி.

  Image Courtesy

  தற்கொலை :

  தற்கொலை :

  கோவிலில் ஏரளமானோர் குலுமியிருந்தார்கள், பெண்கள் குழந்தைகளும் அதில் அடக்கம். எல்லாரையும் வரிசையாக நிற்க வைத்து சிறிய கிளாசில் சிகப்பு நிற திரவத்தை கொடுத்தார்கள். எந்த யோசனையுமின்றி அந்த மக்கள் வாங்கிக் குடித்தார்கள். சிலர் உடனேயும், சிலர் துடித்தும் , உயிருக்கு போராடியும் என 45 நிமிடங்களில் அந்த கோவிலில் இருந்தவர்கள் அத்தனை பேரும் செத்து வீழ்ந்தார்கள்.

  கோவில் முழுவதும் உயிரற்ற உடல்களாகவே கிடந்தன.

  Image Courtesy

  வரலாறு :

  வரலாறு :

  உலக வரலாற்றிலேயே இதுவரை இப்படி ஒரு ஊரே தற்கொலை செய்து கொண்டது கிடையாது. பிற மக்களும் இப்படி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஜிம் பேசிய டேப் ரெக்காரிங்க் ஒலிபரப்பட்டது.

  அதில், இப்படியான பிறருக்கு அடிமையாகி வாழ்வதை விட நாம் அனைவரும் இறப்பது பல மடங்கு உயர்வானது. உங்கள் முன்னால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை புரிந்தால் இந்த முடிவு குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று பேசுகிறார் தங்களது தலைவனான ஜிம்.

  Image Courtesy

  விஷம் :

  விஷம் :

  எல்லாரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கிறார்கள். அவ்வளவு விஷத்திற்கு எங்கே போவது?

  இந்த சம்பவம் நடக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம் நகை மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கான லைசன்ஸ் பெற்றிருந்தான். அதனால் தங்கத்தை சுத்தம் செய்ய என்று சயனைட் வாங்கி குவித்து வைத்திருக்கிறான். ஒவ்வொரு மாதமும் அரை பவுண்ட் அளவில் சயனைட் வாங்கப்பட்டிருக்கிறது.

  Image Courtesy

  குழந்தைகளின் வாயைத் திறந்து விஷத்தை ஊற்று :

  குழந்தைகளின் வாயைத் திறந்து விஷத்தை ஊற்று :

  அதில் பொட்டாசியம் க்ளோரைட் அதிகபட்சமாக இருந்தது. பெரியவர்கள், ஜிம் ஜோன்ஸின் விசுவாசிகள் கண்ணை மூடிக் கொண்டு இது தான் சரியான வழி என்று நினைத்து விஷத்தை குடித்து விட்டார்கள். ஆனால் குழந்தைகள்?

  குழந்தைகள், அதுவும் கைக்குழந்தைகளுக்கு எல்லாம் வலுக்கட்டாயமாக விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீடில் இல்லாத சிரிஞ்சில் விஷத்தை எடுத்து அதனை குழந்தையின் வாயில் வைத்து அழுத்தி விஷத்தை செலுத்தியிருக்கிறார்கள்.

  Image Courtesy

  தப்பிப் பிழைத்தேன் :

  தப்பிப் பிழைத்தேன் :

  மொத்தம் அந்த ஊரில் 918 பேர் வசித்திருக்கிறார்கள். எல்லாருமே தற்கொலைக்கு முயன்று பெரும்பாலானோர் இறந்த நிலையில் உயிர் பிழைத்த ஒரு சிலரும் இருக்கிறார்கள்.

  அப்படி உயிர் பிழைத்த ஒருவர் தான் ஓட்ஹெல் ரோட்ஸ். இவர் கூறுகையில், அப்போது நான் இரண்டாவது முன்னோட்டத்திறாக கோவிலின் முன் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தேன். என்னோட பல குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் நின்றிருந்தார்கள். நிற்கும் எல்லாருக்கும் வரிசையாக விஷம் கொடுக்கப்பட்டது. அதை வாங்கி குடிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

  துப்பாக்கிச் சத்தம் கேட்டதும். எல்லாரும் மடமடவென்று கையிலிருந்து விஷத்தை வாயில் ஊற்றிக் கொண்டோம்.

  Image Courtesy

  பாஸ்போர்ட் :

  பாஸ்போர்ட் :

  விஷயம் வெளியே தெரிந்து மருத்துவக் குழு மற்றும் விசாரணை அதிகாரிகள் என பலரும் அந்த கிராமத்திற்கு சென்றார்கள். முதற்கட்ட சோதனையில் 870 பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டது.

  பாஸ்போர்ட் எண்ணிக்கைக்கும், அங்கே இறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் அதிகளவு வித்யாசம் இருந்தது. அதாவது அங்கே 300 குழந்தைகள் வரை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

  Image Courtesy

  பிரேத பரிசோதனை :

  பிரேத பரிசோதனை :

  ஒரே நேரத்தில் 900 பேர் என்றால் அவர்களுக்கான இறுதிச்சடங்குகள், உடற்கூறு பரிசோதனைகள் , அதற்கான பேப்பர் என பெரிய புக் ஒன்றையை பராமரிக்க வேண்டியிருந்தது. அங்கிருந்து எல்லா உடலையும் அப்புறப்படுத்தி, உடலை புதைக்க பல மாதங்கள் வரை ஆனது.

  Image Courtesy

  கடிதங்கள் :

  கடிதங்கள் :

  தற்கொலைக்கு முன்னர் பலரும் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் பெரும்பாலும் தங்களுடை ஆசைகளையும்,மன்னிப்புகளையும் , நன்றிகளையும் சொல்லியிருந்தார்கள். ஒருவர் தன்னுடைய விருப்பமாக, தங்களது சொத்துக்கள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் சோவியத் யூனியனுக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தது.

  தன் பெயரை குறிப்பிடாத ஒருவர் எழுதிய கடிதத்தில், இந்த வழியை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை.... காங்கிரஸைச் சேர்ந்த ரேயான் கொல்லப்பட்டான் என்ற செய்தி கேட்டபிறகு எங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.

  இறுதி வரை ஜிம் ஜோன்ஸின் விசுவாசிகளாக, இந்த கோவிலின் பணிவிடை செய்பவர்களாகவே வாழ வேண்டும் என்று நினைத்த எங்களுக்கு இதைத் தவிர வேறு எந்த வழியும் இருக்கவில்லை.

  Image Courtesy

  தப்பித்தவர்கள் :

  தப்பித்தவர்கள் :

  இந்த கூட்டுத் தற்கொலையிலிருந்து சிலர் தப்பித்திருக்கிறார்கள். டேவிஸ் என்பவருக்கு கேட்டல் குறைபாடு இருந்திருக்கிறது. எல்லாரும் கோவிலுக்கு முன்பாக ஒன்று கூடுங்கள் நாம் தற்கொலை செய்யப்போகிறோம் என்கிற அறிவிப்பு அவருக்கு கேட்டிருக்கவில்லை. அதனால அவர் எங்கும் செல்லாமல் வீட்டுக் குள்ளேயே இருந்திருக்கிறார்.

  இன்னொருவர் ஸ்டான்லி க்ளேட்டன் என்பவர் எல்லாருக்கும் விஷத்தை கொடுத்து துப்பாக்கியினால் சுட்டு தற்கொலையை தூண்டிக் கொண்டிருந்த ஜிம் ஜோன்சின் பாதுகாப்பு வீரர்களை எல்லாம் ஏமாற்றி விட்டு அருகிலிருந்த காட்டிற்குள் நுழைந்து தப்பித்திருக்கிறார்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Story about Jonestown mass suicide.

  Story about Jonestown mass suicide.
  Story first published: Tuesday, January 30, 2018, 14:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more