Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
வீட்டில் கடுகு போட்டு புகைபிடித்தால் என்ன அதிர்ஷ்டம் உண்டாகும்னு தெரியுமா? தினமும் செய்ங்க...
வெண்கடுகு பற்றியும் அதனுடைய ஆன்மீக குணங்கள் பற்றியும் இங்கே விளக்கமாகவும் விரிவாகவும் இந்த கட்டுரையில் காணலாம்.
கடுகு என்றாலே நம்முடைய சமையலில் தாளிப்புக்காக பயன்படுத்தும் ஒரு பொருள் என்பது தான் தெரியும். ஆனால் அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்று நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது.

அதைவிட, வெண் கடுகில் சில ஆன்மீக மகத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதையும் நிறைய பேர் அறிந்து வைத்திருக்கவில்லை. அதைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

வெண்கடுகு தூபம்
வெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தினமும் வீட்டில் தூபம் போடுவது மிகவும் நல்லது. அப்படி நீங்கள் தினமும் வீட்டில் சாம்பிராணியோடு வெண்கடுகு சேர்த்து தூபம் போடுவதனால் வீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி என்னென்ன நன்மைகள் உங்கள் வீட்டில் உண்டாகும் என்று விளக்கமாகக் காண்போம்.

தீய சக்திகள்
நம்முடைய வீட்டில் இருக்கும் தீய சக்திகளை அடியோடு விரட்டி அடிக்கின்ற சக்தி இந்த வெண்கடுகு தூபத்திற்கு உண்டு. ஒற்றுமையாக இருக்கின்ற
வீட்டுப் பிரச்சினைகள்
குடும்பத்தில் உண்டாகின்ற சின்ன சின்ன பிரச்சினைகள் மூலம் சலசலப்பும் பிரிவும் வருவது இயல்பு தான். ஆனால் அதுவே அந்த பிரிவினை நீடித்துக் கொண்டே சென்றால், அது வீட்டில் பல பிரளயங்களை உண்டாக்கும் என்பதும் நமக்குத் தெரியும்.
இதற்கு சில தீய சக்திகளின் பார்வைகள் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கும் இந்த தூபம் பெரும் தீர்வு தரும்.

பைரவர்
வெண்கடுகு என்பது வெண் கணங்கள் என்று சொல்வார்கள். இந்த வெண் கணங்களுக்கு மத்தியில் தான் பைரவர் குடிகொண்டிருப்பார் என்று சொல்வார்கள்.
அதனால் பைரவரை வழிபடுவதற்கு சமமான விஷயம் தான் இந்த வெண்கடுகு, சாம்பிராணி தூபம்.

எளிய பரிகாரம்
பிரிந்து இருக்கும் குடும்பம் ஒன்று சேருவதற்கும் வீட்டில் அமைதி நிலவவும் வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றுவதற்கும் இந்த வெண் கடுகின் மூலம் ஒரு எளிமையான பரிகாரம் இருக்கிறது.
வீடுகளில் மன அமைதியும் ஒற்றுமையும் மேலோங்க வேண்டுமென்றால் வீட்டில் தினமும் சாம்பிராணி தூபம் போடுவது நல்லது. அதிலும் அந்த சாம்பிராணியுடன் இந்த வெண்கடுகையும் சேர்த்து வீட்டில் உள்ள அறை முழுக்க தூபம் போட்டு, அதை கடைசியில் சாமி படங்கள் வைத்திருக்கும் பூஜை அறையில் வைத்துவிட வேண்டும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நடப்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
அந்த நாள் முழுக்க இந்த வெண்கடுகின் மணம் வீடு முழுக்க மெல்ல மெல்ல பரவி வீட்டில் மன அமைதி வீட்டில் பரவ ஆரம்பிக்கும்.

எப்படி சக்தி வந்தது?
நீங்கள் நினைக்கலாம் வெண்கடுகுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்று? அது எப்படி வந்தது என்றும் சந்தேகம் இருக்கும். அதற்கான காரணங்களை சித்தர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
வெண்கடுகு என்பது சாதாரண பொருள் அல்ல. அது தெய்வீகத் தன்மை வாய்ந்தது. அதனால் தான் வெண்கடுகை தேவகணம் என்றும் சொல்வார்கள்.
வெண்கடுகு குளிர்ச்சி தருபவையாக இருக்கும். இமயமலையைச் சுற்றிலும் காவல் புரிகின்ற பைரவருடைய தேவகணங்கள் தான் இந்த வெண்கடுகு. அதனால் தான் இது இமயமலையின் அடிவாரங்களில் மிக அதிக அளவில் விளைகின்றது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்து தீய சக்திகளையும் பைரவர் தான் அடக்கி வைத்திருக்கிறார் என்ற கருத்து உண்டு.
அதனால் தான் வெண்கடுகு இருக்கின்ற இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது என்று சொல்வார்கள். அதனால் தான் இந்த வெண்கடுகு புகையாக மாறுகிறபொழுது, அதற்குள் பொருந்தியிருக்கின்ற தேவ கணங்கள் தீய ஆவிகளை வீட்டில் இருந்து வெளியேற்றி விடும். இதன்மூலம் வீட்டில் குலதெய்வ பலம் கூட ஆரம்பித்து விடும்.



Click it and Unblock the Notifications