For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சார் அப்டி என்ன வேல தான் பாக்குறாரு?!

தங்களுடைய சோம்பேறித்தனத்தையும் ஸ்மார்ட்டாக மாற்றிக் கொண்டவர்கள் செய்கிற அழும்புகளை பாருங்க!

|

இது கூட உன்னால செய்ய முடியாதா? இதுக்கு கூட வண்டில தான் போனுமா... ரொம்ப சோம்பேறியா இருக்க என்று நம்மில் எத்தனை பேர் திட்டு வாங்கியிருப்போம்... சோம்பேறி என்று சொன்னாலே அது நெகட்டிவான விஷயமாகத் தான் இன்றளவும் பார்க்கப்படுகிறது.

லைட்டா நெகட்டிவ் தான் என்றாலும் வெளியில் பெருமையாக நாங்க எல்லாம் ஸ்மார்ட் வொர்க்கர்ஸ் என்றும் சொல்லிக் கொள்ளலாம் தானே...? எப்படி என்று கேட்கிறீர்களா.... இங்கே சிலரின் படங்களை கொடுத்திருக்கிறோம் அவர்களின் ஸ்மார்ட் வொர்க்கினைப் பார்த்தால் அப்டியே அசந்து போய்டுவீங்க அசந்து!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நாய் வாங்குறது பெருசில்ல பாஸ்.... அதுக்கு தினமும் சோறு போடணும் அத விட டெய்லியும் வாக்கிங் கூட்டிட்டு போகணும். நாய்க்கு தான வாக்கிங் நமக்கு ஏன்? என்று நினைத்திருப்பார் போல.... எப்பிடி நம்ம ஐடியா!

#2

#2

நான் தான் மப்புல இருக்கேன்னு பாத்தா இந்த டிவிக்கும் மப்பு ஏறிடுச்சா? எல்லா படமும் கோணலா தெரியுதே என்று யோசிக்கிறாரோ??? தம்பி எதுக்கும் டிவி நிமிர்த்தி வச்சுப் பாருங்க என்று சொல்லப் போனவருக்கு அப்போது தான் விஷயமே புரிந்திருக்கிறது.

ரிமோட் பேட்டரி வொர்க் ஆகல, அதான் டிவிய கீழ இறக்கி பக்கத்துல வச்சுக்கிட்டேன், லைட்டா தூக்கம் வந்துச்சா அப்டியே தூங்கிட்டேன், அப்பறம் சேனலா மாத்த எழுந்து எழுந்து மாத்த வேண்டியதா இருந்துச்சு இது நமக்கு சரிபட்டு வராதே என்ன பண்ணலாம்னு யோசிப்ப தான் இந்த ஐடியா டிவி பொசிசன மாத்திப்புட்டேன் என்றிருக்கிறார் அசால்ட்டாக.

 #3

#3

மரணப்படுக்கையில் வீழ்ந்தாலும் நமக்கு வேலை தான் முக்கியம் என்றிருக்கிறாரே என்று அசந்து விட வேண்டாம். சாரு,ஷோசியல் மீடியால தான் இவ்ளோ தீவிரமா வேல பாக்குறாரு.... நம்ம ஒரு ஃப்ரோஃபைல் செக் பண்ணனும்னா பராவாயில்ல இருக்கிற பத்து ஃபேக் ஐடியையும் பாக்க வேண்டியதிருக்கே....

படுத்துட்டு லேப்டாப் நோண்டினது கூட பிரச்சனையில்ல சாரோட மவுஸ் எங்கயிருக்குன்னு பாருங்க! எல்லாம் டெக்னாலஜி கொடுமை....

#4

#4

வளர்ந்திருக்கிற புல்ல வெட்டச் சொல்லி இந்த மெஷின கையில கொடுத்தாக.... யாரு பின்னாடியே நின்னு அந்த வேலைய பாக்குறது அதான் இப்டி.... என்று அசால்ட்டு காமிக்கும் ஹீரோ அடடே இந்த ஸ்டைல் செம்மையா இருக்கே என்று பாராட்டும் வாங்கியிருக்கிறார்!

#5

#5

மொபைல்ல என்ன தம்பி பிட்டு படமா? சொகுசா படுத்துட்டு படம் பாக்குறதே தனி சுகம் தானா.... என்ன பண்றது அம்புட்டு நேரமும் போன கைலயே பிடிச்சிட்டு இருக்க முடியுமா? மொபைல் ஸ்டாண்டு வாங்கி வச்சாலும் வசதியா இல்ல அதான் இப்டி

#6

#6

இருக்குறது வச்சு அட்ஜெஸ்ட் பண்ண பழகிக்கோங்க மக்கா... இந்த தம்பிய பாருங்க உக்காரதுக்கு சேர் தான் வேணும்னு அடம்பிடிக்காம சேர் வந்த டப்பாவையே தன்னோட சேரா மாத்திக்கிட்டார்... இப்டியே போனா இந்தியா வல்லரசாகிடுமா? குறுக்குச் சந்துல போனா கூட வல்லராசுகுத்துன்னு தெரியுது..

#7

#7

டைம் என்ன என்று கேட்டவுடன்.... அடடே இதோ இருக்கு கடிகாரம்னு சொல்லி விட முடியாது. இது நம்ம சைண்டிஸ்ட் சார் கண்டுபிடிச்சது ஒவ்வொரு தடவ நேரம் பாக்கும் போதும் மைனஸ் ஒருமணி நேரம் பண்ணிட்டு தான் சரியான நேரத்த தெரிஞ்சுக்க முடியும்.

இந்த கண்டுபிடிப்புக்கு எல்லாம் விருது கொடுக்க மாட்டீங்களா பாஸ்....

#8

#8

நைட்டெல்லாம் ஒரே வேலை.... என்ன பண்றது வீட்டுக்கு போக கூட நேரமில்ல அதான் பாயையும் பெட்சீட்டையும் கொண்டு வந்து அங்கே படுத்துட்டேன் நமக்கு சேஃபிடியா பாருங்க ஒரு அரண்!

எப்பா டேய் இவ்ளோ அரேஞ்மெண்ட் பண்ணிட்டு தூங்குறதுக்கு கிளம்பி வீட்டுக்கே போயிருக்கலாம்... அது சரி அப்டியே லாரி வந்து ஏத்துனா என்னாகும் ?

#9

#9

இத என்னாத்தன்னு சொல்றது. தெரிஞ்சு செய்றாங்களா? அல்லது தெரியாம செய்றாங்களான்னே தெர்லயே..... ரெண்டு விரல்ல நெயில் பாலிஷ் போடும் போது கூடுதலா ஐஞ்சு செக்கண்ட் ஆகுமா மத்த மூணு விரல்ல போடுறதுக்கு.... அந்த ஐஞ்சு செக்கண்ட்ட சேமிச்சு ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சுடீங்களோ!

நாளைக்கு வேற கலர் டிரஸ் போடுவேன், இந்த நெயில் பாலிஷ ரிமூவ் பண்ணனும். ஐஞ்சு விரல்ல ரிமூவ் பண்றதுக்கும் ரெண்டு விரல்ல ரிமூவ் பண்றதுக்கும் நேரம் மிச்சமாகுதுல அதான் இப்டி என்று ஷோல்டரை தட்டிக் கொள்பவரிடத்தில் என்னத்த சொல்ல....?

#10

#10

அவ்ளோ தீவிரமா வேல பாக்குறாரேன்னு நினச்சுராதீங்க.... பக்கி கேம் விளையாடுது, கொஞ்சம் அந்தப்பக்கம் திரும்பினா போதும் நம்மளையே அவுட் ஆக்கிடுவாங்க அதான் எழுந்து கூட போகாம சீரியஸா உக்காந்திருக்காரு....

பசிக்குமே என்ன செய்ய என்று முன்கூட்டியே யோசித்து கிட்னியை பயன்படுத்தி செயல்படுத்தப்பட்ட ஐடியா இது! அது சரி பாப்கார்ன் கைல எடுத்து சாப்பிடுவாரா அல்லது டைரக்டா குனிஞ்சு வாயாலேயே எடுத்துப்பாரா???

எல்லாம் தொலைநோக்கு பார்வையோட சிந்திக்கணும்னு சொன்னது கரெக்ட்டாத்தான் இருக்கு

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Some Lazy Peoples Genius Ideas

Some Lazy Peoples Genius Ideas
Story first published: Saturday, May 12, 2018, 13:03 [IST]
Desktop Bottom Promotion