Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
மண்ணில் புதைந்து மரணித்த நபர்! அதிர்ச்சியளித்த காரணம்!!
புதைக்கப்பட்ட பிணங்களை திருடும் கும்பலைப் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள்
இந்த உலகை சுற்றி நாம் எதிர்ப்பார்க்காத ஏன் கற்பனை கூட செய்து பார்க்காத விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாக இருக்கும். எப்போதும் நம்மைச் சுற்றி நடக்கிற அத்தனை விஷயங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது தான். அப்படி புரிந்து கொள்ளப்படாத சில விஷயங்களின் பின்னால் எவ்வளவு பெரிய கதை இருக்கிறது என்பதை நாம் நிச்சயமாக கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்து விட்டதாக சொல்லி உறுப்புகளை தானம் வழங்கச் சொல்லப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயம் தானே என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் இது பணத்திற்காக நடக்கிற வியாபாரம் என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வார்களா என்று நம்மை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் எத்தனையோ சம்பவங்களை கடந்து வந்திருப்போம். அவை எல்லாவற்றையும் விட இந்த சம்பவம் சற்றே பயங்கரமானதாய் இருக்கிறது.

#1
இந்த சம்பவம் நடந்தது தென்னாப்பிரிக்காவின் வடகோடியில் அமைந்திருக்கக்கூடிய லிம்போபோ என்ற மாகாணத்தில் நடந்திருக்கிறது. அங்கே போலீசாருக்கு வந்த தகவல் என்ன தெரியுமா?
கடந்த வாரம் இறந்த எங்கள் அம்மாவை இங்கே புதைத்திருந்தோம். இப்போது அந்த பிணத்தை காணவில்லை என்றார்கள்.

#2
முதலில் போலீசார் இதனை அலட்டிக் கொள்ளவில்லை ஆனால் அடுத்தடுத்து இது போல புதைக்கப்பட்ட பிணங்களை காணவில்லை என்று தொடர்ந்து புகார் வர ஆரம்பித்தது.
இது என்னடா புதுப்பிரச்சனையாக இருக்கிறதே என்று சொல்லி போலீஸ் களத்தில் இறங்கி விசாரணையை துவக்கியது. முதல் விஷயமாக இந்த பிணத்தை திருடும் கும்பம் பல ஆண்டுகளாக இதில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இரவு நேரத்தில் வந்து மண்ணைத் தோண்டி தங்கள் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

#3
எத்தனை பேர் அடங்கிய கும்பல் அது கையில் என்னென்ன ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் எதற்காக இப்படி புதைக்கப்பட்ட பிணங்களை திருடுகிறார்கள்? அப்படி திருடிய பிணங்களால் அவர்களுக்கு என்ன லாபம் கிடைத்து விடப்போகிறது? எந்த சந்தையில் விற்பார்கள் போன்ற பல கேள்விகளுடன் போலீசார் விசாரணையை துவக்கினார்கள்.
இரண்டே நாட்களில் போலீசார் அந்த கும்பலை கண்டுபிடித்தார்கள். போலீசார் மட்டுமல்ல அந்த ஊரே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

#4
பெரிய கும்பல் எல்லாம் இல்லை இரண்டே இரண்டு நபர்கள் தான் இதில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் பதினேழு வயதே நிரம்பிய சிறுமி ஒருவரும் அவருடைய காதலரும் தான் இவ்வளவு நாளாக பிணங்களை திருடியிருக்கிறார்கள். காதலருக்கு 23 வயது.
முதலில் போலீசாரே.... நாம் தவறுதலாக கைது செய்துவிட்டோமா என்றே தடுமாறினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் தங்களது கதையைச் சொல்ல சொல்ல கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

#5
இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சிறுமி கூறுகையில், நானும் என் காதலரும் இணைந்து தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டோம். நாங்கள் வசிக்கும் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கிராமத்தில் யார் இறந்தாலும் பெரும்பாலும் இங்கு தான் புதைப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே தங்களது வீட்டு தோட்டத்தில் புதைத்துக் கொல்வார்கள்.
நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் பகுதியே இது தான். அதனால் புதிதாக குழி தோண்டுகிறார்கள், ஆட்கள் நடமாட்டம் தெரிகிறது என்று சொன்னாலே இன்றைக்கு இங்கு ஒரு பிணத்தை புதைக்கப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு விடுவோம். பெரும்பாலும் இந்த பகுதியில் ஆள்நடமாட்டமே இருக்காது. பிணத்தை புதைக்கிற நாளுக்கு மட்டும் வருவார்கள் பிணத்தை புதைத்து விட்டு சென்று விடுவார்கள்.

#6
அன்றைக்கு இருட்டியதும், நானும் என் காதலனும் மண்வெட்டியுடன் வருவோம். டார்ச் நான் பிடித்துக் கொள்ள அவன் தோண்டுவான். பிணத்தை வெளியே எடுத்து அவற்றின் வயதைப் பொருத்து உள்ளுருப்புகளை திருடுவோம்.
முதியவர்கள் என்று சொன்னால் உள்ளுறுப்புகள் எடுப்பதில்லை மாறாக அவர்களின் சருமம் எடுத்துக் கொள்வோம். இளவயதுக்காரர்கள் என்று சொன்னால் முழு உடலையும் எடுத்துக் கொள்வோம். எடுத்துச் செல்ல முடியாது என்பதால் முழு உடலையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துச் செல்வோம்.

#7
பெரும்பாலும் இறந்து சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே சில உறுப்புகளை எடுக்க வேண்டும் அப்போது தான் நாங்கள் வாங்கிக் கொள்வோம் என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் இறந்து சடங்குகள் எல்லாம் செய்து விட்டு புதைக்க ஒரு நாள் எடுத்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அன்றைய இரவோ அல்லது மறுநாள் இரவோ தான் நாங்கள் இந்த வேலையை செய்கிறோம் என்பதால் பெரும்பாலும் அவை விலை போகாது.
அந்த நேரங்களில் எல்லாம் கறியாக குறைந்த விலைக்கு விற்றுவிடுவோம்.

#8
உனக்கு பயமாக இல்லையா? இவ்வளவு சிறிய வயதில் இப்படி எல்லாம் செய்கிறாய் என்று ஊர்மக்களும் போலீசாரும் கேட்க, என்னைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை வீட்டில் ஒரு வேலை உணவுக்கு கூட ரொம்பவும் கஷ்ட்டப்பட்டேன்.
சந்தையில் இதற்கு நல்ல கிராக்கி இருப்பது தெரிந்தது. இந்த பிணங்களை திருடி விற்க ஆரம்பித்ததும் நான் நன்றாக சாப்பிடுகிறேன் என்றாராம்.

#9
இந்த பகுதி ஊரை விட்டு சற்று தள்ளி இருக்கிறது. அதோடு இங்கே யாரும் அவ்வளவாக ஆள்நடமாட்டமும் இருக்காது. அதனால் இவ்வளவு நாளாக இந்த சம்பவம் யாருக்குமே தெரியவில்லை என்றிருக்கிறார்கள் ஊர்காரர்கள். எப்படி இவர்களை கண்டுபிடித்தார்கள் என்று போலீசார் சொன்ன கதையும் திகிலாகத்தான் இருக்கிறது.
இந்த சம்பவம் நிகழ்ந்தது நைஜீரியாவில் இருக்கிற க்வாரா என்ற மாநிலத்தில் இருக்கும் இரிபோடுன் என்ற ஊரில்....

#10
அங்கே ஒரு ஆள் மண்ணில் பாதி புதைந்த நிலையில் மயங்கி கிடக்கிறார் என்று புகார் வந்தது. போலீசார் சென்று பார்த்த போது, இடுப்புக்கு மேல் பகுதி முழுவதும் மண்ணில் புதைந்து கிடந்தது. மக்கள் உதவியுடன் மண்ணைத் தோண்டு அவரை மீட்ட போது அவர் உயிரிழந்துவிட்டார்.
ஆரம்பத்தில் தண்ணீருக்காக குழி தோண்டியிருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் ஓர் பிணக்குழியாக இருக்கவே போலீசார் முழுதாக தோண்டி பார்த்திருக்கிறரகள். அப்போது தான் உண்மை தெரிய வந்திருக்கிறது.

#11
அதாவது மாந்திரீகம் செய்வதற்காக பிணத்தின் தலை வேண்டும் என்று கேட்க, இவர் பிணத்தின் தலையிருக்கும் பக்கமாக மட்டும் தோண்டி தலையை மட்டும் வெட்டி எடுத்துச் சென்று விடலாம் என்று நினைத்துக் கொண்டு தோண்டியிருக்கிறார்.
உடல் உள்ளே செல்லும் அளவுக்கு தோண்டியவுடன் உள்ளே சென்று பிணத்தின் தலையை தேடுவதற்குள் மேலிருந்த மண் முழுவதுமாக சரிந்துவிட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications
